Eyeview Sri Lanka

JKCG Auto மற்றும் Indra Service Park கூட்டாண்மையுடன் கண்டியில் கால்பதிக்கும் BYD

Share with your friend

உலகின் முன்னணி புதிய எரிசக்தி வாகன (NEV) உற்பத்தியாளரான BYD நிறுவனம் மற்றும் அதன் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto நிறுவனம் ஆகியவை இணைந்து, அவர்களின் பயணிகள் வாகனங்களை மத்திய மாகாணத்தில் விரிவுபடுத்துவதற்காக இந்திரா குழுமத்தின் துணை நிறுவனமான Indra Service Park (தனியார்) நிறுவனத்துடன் அண்மையில் கைகோர்த்தது.

John Keells CG Automotive நிறுவனத்தின் பொது முகாமையாளர் சரித் பண்டிதரட்ன மற்றும் John Keells குழுமத்தின் சில்லறை வர்த்தகப் பிரிவின் தலைவர் சரித சுபசிங்க, Indra Traders நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஹஷிந்திர சில்வா, Indra Traders நிறுவனத்தின் பணிப்பாளர் சஜினி சில்வா மற்றும் Indra Traders குழுமத்தின் பொது முகாமையாளர் திருமதி. தர்மா இளங்கசிங்க ஆகியோர் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டனர்.

இந்த உத்திசார் கூட்டாண்மை மூலம் BYD மற்றும் JKCG Auto ஆகியவை BYD இன் மூன்றாவது ஒருங்கிணைந்த காட்சியறை, சேவை நிலையம் மற்றும் உதிரிப் பாகங்கள் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய 3S வளாகத்தை ‘BYD Kandy’ என்ற பெயரில் கண்டியில் நிறுவ திட்டமிட்டுள்ளன. கண்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் எளிதாக அணுகக்கூடிய வகையில் இந்த 3S வளாகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது BYD Kandy வளாகத்தில் BYD பயணிகள் வாகனங்களுக்கான முன்பதிவுகள் 2025 ஜனவரி மாதம் 16ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும்.

இதுகுறித்து John Keells CG Automotive நிறுவனத்தின் பொது முகாமையாளர் சரித் பண்டிதரட்ன கருத்து தெரிவிக்கையில், ‘Indra Service Park (தனியார்) நிறுவனத்துடனான எங்களது கூட்டாண்மை இலங்கை முழுவதும் புதிய எரிசக்தி வாகனங்களின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கும், நாட்டு மக்களின் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து தீர்வுகளுக்கு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவதற்குமான எங்களது முயற்சியில் மற்றொரு முக்கிய படியாக இதைக் கருதலாம். BYD Kandy மூலம் கண்டி மக்களுக்கு புதுமையான NEV தீர்வுகளை கொண்டு வருவதோடு, உள்நாட்டு பொருளாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பயனளித்து நிலையான போக்குவரத்தை முன்னெடுத்துச் செல்லவும் முடியும் என நம்புகிறோம்’ என்றார்.

‘இந்த விரிவாக்கத்தின் மூலம் உள்ளூர் பணியாளர்களை வலுப்படுத்த நாங்கள் விரும்புகிறோம்,’ என்று பண்டிதரத்ன மேலும் கூறினார். ‘மேலும் ஒரு NEV சேவை நிலையத்தை திறப்பதன் மூலம், பிராந்தியத்தில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் வாகனம் பழுதுபார்ப்பவர்களுக்கு மதிப்புமிக்க பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.’ என தெரிவித்தார்.

இதனிடையே, Indra Traders நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ருஷங்க சில்வா இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கையில், ‘கண்டி பகுதியில் BYD மற்றும் JKCG Auto-வுக்கான பிராந்திய விற்பனை பங்காளராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். BYD உடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் BYD பயணிகள் வாகனங்கள் வழங்கும் சிறப்பான மதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஊக்குவிப்பதே எங்கள் நோக்கம் ஆகும். இந்த கூட்டாண்மை மூலம் பிராந்தியத்திற்கு உயர்தர புதிய எரிசக்தி வாகனங்களை அறிமுகப்படுத்த முடியும். மேலும், கண்டி வாகன சந்தையின் சிறப்பு மற்றும் எதிர்பார்ப்புகளை உயர்த்தி, செயல்திறன், சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவங்களுக்கான புதிய தரநிலையை அமைக்கவும் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது,’ என்று தெரிவித்தார்.

BYD-இன் அங்கீகாரம் பெற்ற மற்றும் குறிப்பிட்ட பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த தொழில்முறை வல்லுநர்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் இப் புதிய 3S வளாகம் அமைந்துள்ளது. மேலும் இதன் மூலம் இலங்கையின் அழகிய மத்திய மாகாணத்தில் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும்.

மேலும் இதன் மூலம் வாடிக்கையாளர்கள் BYD-இன் புதிய மின்சார வாகனங்களுக்கான (EVs) சிறந்த விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் மற்றும் அசல் உதிரிப் பாகங்கள் ஆகிய அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் எளிதாகப் பெற்றுக்கொள்ள முடியும். இது தவிர, இப் புதிய வளாகத்தில் BYD DOLPHIN, BYD ATTO 3, BYD SEAL மற்றும் BYD SEALION 6 ஆகிய மாதிரிகள் உட்பட BYD-இன் சமீபத்திய மின்சார மற்றும் plug-in hybrid வாகனங்களுக்கான முன்பதிவுகளையும் மேற்கொள்ள முடியும்.


Share with your friend
Exit mobile version