MAS Holdings கென்யா வனவிலங்கு அறக்கட்டளையுடன் கைகோர்க்கிறது

Home » MAS Holdings கென்யா வனவிலங்கு அறக்கட்டளையுடன் கைகோர்க்கிறது
Share with your friend

தெற்காசியாவின் முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனமான MAS ஹோல்டிங்ஸ், நைரோபி தேசிய பூங்காவின் 6,250 ஏக்கர் நிலத்தை பாதுகாக்க கென்யாவின் வனவிலங்கு அறக்கட்டளையுடன் (TWF- The Wildlife Foundation) கைகோர்த்துள்ளது. 25,000 ஏக்கர் வாழ்விடங்களை மீட்டெடுக்கும் மாற்றத்திற்கான MAS திட்டத்தின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, இந்த தனித்துவமான முயற்சிி MAS மற்றும் TWF ஆகியவை உள்ளூர் நில உரிமையாளர்களுடன் இணைந்து சமூக மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் வனவிலங்குகளை சுதந்திரமாக நடமாட அனுமதிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளது. 

இந்த திட்டம் மார்ச் 2022இல் தொடங்கப்பட்டது மற்றும் Athi-Kaputei பகுதியில் உள்ள 58 நில உரிமையாளர்களின் பங்கேற்புடன் காணி உறுதிப்பத்திர கையளிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த திட்டம் TWF இன் தற்போதைய பாதுகாப்பு மாதிரியின் விரிவாக்கமாகும் என்பதுடன் அங்கு TWF வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் சிறந்த நில பயன்பாட்டு நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக உள்ளூர் உரிமையாளர்களிடமிருந்து நிலத்தை குத்தகைக்கு எடுக்கிறது. இந்த கூட்டாண்மை மூலம், TWF இன் தற்போதைய 5,000 ஏக்கர் பாதுகாப்பு திட்டமானது MAS நிறுவனத்தால் 11,250 ஏக்கராக விரிவுபடுத்த முடிந்தது.

வனவிலங்குகளுக்காக பூங்காவின் எல்லை நிலங்களில் சுதந்திரமாக நடமாடுவதற்கு நில உரிமையாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களை ஊக்குவிக்க நிதி மற்றும் நிதி அல்லாத சலுகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டம், மக்கள் தலைமையிலான பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மனித-வனவிலங்கு மோதல்களைக் குறைக்க சமூகக் காவலர்களை நியமித்தல், தேனீ வளர்ப்பு, உயிர்வாயு போன்ற திட்டங்களில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் பயிற்சி அளிப்பது மற்றும் பாதுகாப்பு சவால்களுக்குத் தீர்வு காண தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

MAS இன் மூலோபாய வணிகப் பிரிவுகளான MAS Intimates மற்றும் MAS Kreeda, ஆகியவற்றால் கூட்டாக நிதியளிக்கப்படும் பாதுகாப்பு மாதிரியின் மூலம், MAS மற்றும் TWF ஆகியவை இணைந்து நிதியளிக்கும் இந்தப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம், தனியார் விலங்குகளின் நடமாட்டத்தை எளிதாக்குவதற்காக நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்தை திறந்த மற்றும் வேலிகள் இல்லாமல் வைத்திருக்க நிதி ஊக்குவிப்புகளை வழங்குகின்றன. சிங்கங்கள் மற்றும் பிற வேட்டையாடுபவர்களால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க இந்த பணம் பயன்படுத்தப்படுவதுடன் பிள்ளைகளின் பாடசாலைக் கால ஆரம்பத்திற்கு சமாந்திரமாக காணி உரிமையாளர்களுக்கு நிதியுதவி வழங்குவதன் மூலம், பிரதேசத்திலுள்ள பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்கும் துணைபுரிகிறது.

MAS அதன் துணை நிறுவனமான MAS Intimates மூலம் 2020 இல் கென்யாவில் அதன் உற்பத்தி வசதியை நிறுவியது. இன்று MAS Intimates Kenya (EPZ) Ltd, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள முன்னணி சந்தைகளுக்கு உள்ளாடை மற்றும் ஆடைகளின் முன்னணி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக உள்ளது, இது 3,200 கென்யர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. கென்யாவில் பெரும்பாலான MAS Intimates ஊழியர்கள் வசிக்கும் Machakos மற்றும் Kajiado மாவட்டங்களில் பாதுகாப்புத் திட்ட நிலங்கள் அமைந்துள்ளன.

இந்தப் பாதுகாப்புத் திட்டம், 25,000 ஏக்கர் வாழ்விடத்தை உருவாக்கும் MAS இன் இலக்கிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கென்யாவில் உள்ள அதன் உள்ளூர் சமூகத்துடன் MAS முழுமையாக ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது. குழுவின் பேண்தகைமை நடவடிக்கை, மாற்றத்திற்கான MAS திட்டம், பல்லுயிர் பெருக்கத்தை உருவாக்குதல் மற்றும் உயர் வாழ்க்கை நல்வாழ்வு கொண்ட சமூகங்களை உருவாக்குதல் உட்பட, தயாரிப்பு, மக்கள் மற்றும் உலகம் ஆகிய மூன்று பகுதிகளின் கீழ் 12 கடமைகளில் கவனம் செலுத்துகிறது.

MAS மற்றும் TWF ஆகியவை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த தனித்துவமான பாதுகாப்பு திட்டத்திற்கு ஒத்துழைக்க உறுதியளித்துள்ளன, மேலும் நம்மைச் சுற்றியுள்ள சூழலை சாதகமாக மாற்றுவதற்கு சமூகத்தை மேம்படுத்துவதற்கும் அதிகாரமளிப்பதற்கும் கூட்டு நம்பிக்கையுடன் உள்ளன.

தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப நிறுவனமான MAS குழுமம், ஆடைகள் மற்றும் ஜவுளி உற்பத்தியில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்பு முதல் விநியோகம்  தீர்வு வழங்குநர்களில் ஒன்றாகும். இங்கு 118,000 பேர் பணியாற்றுகின்றனர். இன்று, MAS தனது தயாரிப்புகளை 17 நாடுகளில் முன்னணி நவநாகரீக இடங்களில் அமைந்துள்ள உற்பத்தி வசதிகள் மூலம் தயாரிப்புக்களை மேற்கொள்கிறது. MAS இன் பிராண்டுகள், தொழில்நுட்பம், FemTech” Start-ups மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆடை பூங்காக்கள் எப்போதும் மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்ய வேகமாக விரிவடைந்துள்ளன.

35 வருட வரலாற்றைக் கொண்ட, MAS அதன் நெறிமுறை மற்றும் நிலையான சேவைகள், சுற்றுச்சூழல் மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்காக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. தயாரிப்புத் திறன் மற்றும் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கமான தயாரிப்புகள் மற்றும் வடிவமைப்புகளை வெளிப்படுத்தும் ஒரு தொழில்துறைத் தலைவராக MAS உலகம் முழுவதும் அதன் பெயரைப் பதிய வைத்துள்ளது. இன்று, தயாரிப்புகள், மக்கள் மற்றும் உலகம் ஆகிய மூன்று பரிமாணங்களின் கீழ் நிலையான மாற்றத்தை உருவாக்க MAS உறுதிபூண்டுள்ளது. இந்த முயற்சிகள் மூலம், அனைத்து ஊழியர்களிடமும் புதிய அணுகுமுறைகளை உருவாக்கவும், கனவுகளை நனவாக்கவும், நமது சுற்றுப்புறங்களை பசுமையாகவும் மற்றும் அழகான உலகமாக மாற்றவும் MAS உறுதி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வனவிலங்கு அறக்கட்டளை (TWF) என்பது 2000 இல் பதிவு செய்யப்பட்ட கென்ய அரசு சார்பற்ற அமைப்பு (NGO) ஆகும். Athi-Kaputei சுற்றுச்சூழலில் வாழும் மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்த சமூகம் அடிப்படையிலான பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்குவதே TWF இன் நோக்கமாகும்.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: