உலகின் மாபெரும் பெயின்ட் வகைகள் மற்றும் சுவர்மேற்பூச்சு வகைகள் உற்பத்தி நிறுவனமான AkzoNobel பெயின்ட்ஸ் லங்கா நிறுவனம், இலங்கையிலுள்ள தனது டியுலக்ஸ் பெயின்ட் சமூகத்துக்காக தொடர்ச்சியான புதிய செயறிதிட்டங்கள் பலதை அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள் வலுச் சேர்ப்புக்காக தனது சொந்த டிஜிட்டல் புத்தாக்கங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டிலுள்ள தனது 5000 க்கும் அதிகமான பெயின்ட் பூச்சில் ஈடுபடும் சமூகத்தாரை தன்னிறைவுபடுத்தி, ஊக்குவித்து அவர்களின் திறன்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் மற்றுமொரு அங்கமாக, MHP – Mind, Heart and Pocket எனும் ஈடுபடுத்தல் திட்டமொன்றை டியுலக்ஸ் அறிமுகம் செய்துள்ளது. பெயின்ட் பூச்சில் ஈடுவோர் மற்றும் AkzoNobel இடையே உறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் (இதில் குடும்ப ஒன்றுகூடல்கள், பெயின்ட் பூச்சில் ஈடுபடுவோரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வாய்ப்புகள், பிரத்தியேகமான ஒன்றுகூடல்கள் போன்றன அடங்கியுள்ளன), திறன் மற்றும் அறிவு மேம்படுத்தல் (பயிற்சிகள், சான்றளிப்புகள், முறைப்பாடுகளை கையாளல் போன்றன) மற்றும் தொடர்ச்சியான வெகுமதித் திட்டங்களும் இதில் அடங்கியிருக்கும்.
AkzoNobel ஸ்ரீ லங்கா சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி உபேந்திர குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “பெயின்ட் பூச்சுப் பணிகளில் ஈடுபடுவோருக்கு அதிகளவு ஈடுபாடுகள், திறன் விருத்திக்கான ஊக்குவிப்புகள் மற்றும் அவர்களின் கருத்தளிப்புகளுக்கு செவிமடுத்தல்கள் போன்றவற்றினூடாக, எமது பெயின்ட் பூச்சுப் பயணிகளில் ஈடுபடுவோருக்ளுக்கு உள்ளடக்கமான மற்றும் மதிப்பு வாய்ந்த பணிச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களை பெறுமதி வாய்ந்தவர்களாக உணரச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். எமது பெயின்ட் பூச்சுப் பணிகளில் ஈடுபடும் சமூகத்தாரின் நிபுணத்துவ மற்றும் பிரத்தியேக விருத்தி செயற்பாடுகளில் நாம் கவனம் செலுத்துவதுடன், டியுலக்ஸ் பெயின்ட்ஸ் மீது அவர்களின் ஈடுபாட்டை கட்டியெழுப்புவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம். அதனூடாக, அவர்கள் எப்போதும் சிறப்பாக செயலாற்றுவதற்கு ஊக்குவிக்கப்படுவார்கள்.” என்றார்.
தொழிற்பாட்டு இடர்களை குறைத்துக் கொள்ளும் வகையில், AkzoNobel இனால் நிபுணத்துவம் வாய்ந்த பெயின்ட்பூச்சாளர்களுக்கு பயனளிக்கக்கூடிய புதிய டிஜிட்டல் மேம்படுத்தல் திட்டங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றினூடாக, பெயின்ட் பூச்சில் ஈடுபடுவோரின் பதிவை மேம்படுத்துவது, கொடுப்பனவுகள் மற்றும் பெயின்ட் விரயத்தை தவிர்ப்பது தொடர்பில் வெளிப்படைத் தன்மையை வழங்குவது தொடர்பான தோற்றப்பாட்டையும் வழங்குகின்றது.
மேலும், பெயின்ட் பூச்சில் ஈடுபடுவோருக்காக அறிமுகம் செய்யப்பட்ட எளிமையான QR குறியீட்டு திட்டத்தின் அறிமுகத்தினூடாக, அவர்களுக்கு வலுவூட்டப்பட்டுள்ளதுடன், அவர்களின் பங்கேற்பை உறுதி செய்யக்கூடியதாக உள்ளது. “Dulux Connect” ஊடாக பெயின்ட் பூச்சில் ஈடுபடுவோர் மேற்கொள்ளும் கொள்வனவுகளை ஒன்லைனில் பின்தொடரக்கூடியதாக இருக்கும் என்பதுடன், mind, heart and pocket நிகழ்ச்சியை பயன்படுத்தி பிரதான தொகுதி பெயின்ட் பூச்சில் ஈடுபடுவோரை பயன்படுத்தி அவர்கள் மத்தியில் வர்த்தக நாமத்துடனான ஈடுபாட்டை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும். app இனூடாக பெயின்ட் பூச்சில் ஈடுபடுவோருக்கு தமது விருப்பத்துக்குரிய விற்பனை நிலையங்களை தெரிவு செய்ய முடியும் என்பதுடன், விற்பனையாளர்களுக்கும் அவர்களை தொடர்ந்தும் தம்மிடமிருந்து பொருட்களை கொள்வனவு செய்ய ஊக்குவிக்க முடியும்.
AkzoNobel முன்னெடுக்கும் புதிய டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கையினூடாக “Painter Market Place” App இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்திருந்தது. நாடு முழுவதையும் சேர்ந்த டியுலக்ஸ் வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கு அருகாமையிலுள்ள நிபுணத்துவம் வாய்ந்த பெயின்ட் பூச்சில் ஈடுபடுவோருடன் இணைப்பை ஏற்படுத்த உதவும் ஒன்லைன் கட்டமைப்பாக காணப்படுகின்றது. பெயின்ட் பூச்சாளர்களுக்கு தமது வருமானத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான மற்றுமொரு வழிகாட்டியாகவும் இது அமைந்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கான பல்வேறு ஒன்லைன் கட்டமைப்புகளை AkzoNobel அறிமுகம் செய்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு அவை அதிகளவு சௌகரியமானதாக அமைந்துள்ளன. தமது சுவர்களுக்கு புதிதாக பெயின்ட் பூச எதிர்பார்ப்போர், தமக்கு பிடித்த வர்ணங்களை தமது வீடுகளில் சௌகரியமாக இருந்தவாறே நம்பிக்கையுடன் தெரிவு செய்ய முடியும். “Dulux Preview Service (www.duluxpreviewservice.com/sl)” என்பதை வாடிக்கையாளர்கள் பார்வையிடலாம். AI தொழில்நுட்பத்தின் உதவியுடன், தமது வசிப்பிடங்களில் தாம் தெரிவு செய்த வர்ணங்கள் பூசிய பின்னர் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். மேலும், தெரிவை இலகுபடுத்திக் கொள்வதற்காக ஒவ்வொரு வர்ணத் தெரிவையும் தரவை save செய்து தமது குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடையே பகிர்ந்து கொள்ளலாம். வாடிக்கையாளர் பெயின்ட் வகையை கொள்வனவு செய்யும் முன்னர், வர்ணத் தெரிவுகளுக்கு பரிந்துரைகளை வழங்கும் நிபுணத்துவத்தையும் AkzoNobel சேர்த்துள்ளது. தமது ஸ்மார்ட்ஃபோன்களில் சில க்ளிக்களில் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
AkzoNobel பெயின்ட்ஸ் பற்றி
1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட AkzoNobel பெயின்ட்ஸ் லங்கா, இலங்கையின் முன்னணி பெயின்ட் உற்பத்தியாளராகத் திகழ்வதுடன், டியுலக்ஸ், சுப்பர்கோட், அக்குவாடெக், வுட் கார்ட் மற்றும் சிக்கன்ஸ் கார் மேற்பூச்சு வகைகளை விநியோகிக்கின்றது. நெதர்லாந்தின் அம்ஸ்டர்டாமைச் சேர்ந்த AkzoNobel, உலகின் மாபெரும் பெயின்ட் மற்றும் மேற்பூச்சு நிறுவனங்களில் ஒன்றாக அமைந்திருப்பதுடன், உலகின் முன்னணி தொழிற்துறைசார்ந்த நிறுவனமாக திகழ்வதுடன், பரந்தளவு பெயின்ட் வகைகள், மேற்பூச்சுகள் மற்றும் விசேட இரசாயனப் பொருட்களையும் தயாரித்து விநியோகிக்கின்றது.