Site icon Eyeview Sri Lanka

MSMEகளின் நிதியறிவை மேம்படுத்த சிலாபத்தில் நிகழ்ச்சித்திட்டமொன்றை முன்னெடுக்கும் HNB Finance

Share with your friend

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கான (MSMEs) ஆண்டின் இரண்டாவது நிதியறிவு செயலமர்வு நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் சிலாபத்தில் நடைபெற்றது.

சிலாபம் – கொழும்பு வீதியிலுள்ள ஸ்ரீ விஜயராம விஹாரையில் இந்த செயலமர்வு இடம்பெற்றதுடன், HNBF இன் 100 வாடிக்கையாளர்கள் மாத்திரமே இந்நிகழ்வில் பங்குபற்றினர். இந்த செயலமர்வில் இணைந்த வணிகர்களுக்கு அவர்களின் தனிப்பட்ட மற்றும் வணிக கணக்குகளை பராமரிப்பது குறித்து விளக்கங்கள் அறிக்கப்பட்டதுடன் இதற்கு உதவியாக நிதியறிவு குறித்த சிறு புத்தகம் ஒன்றும் வழங்கப்பட்டது மேலும் HNBFஇன் சிலாபம் கிளையின் ஊழியர்களும் எதிர்காலத்தில் பங்கேற்கவுள்ளவர்களுக்குமான வழிகாட்டல்களை வழங்குவதற்காக வருகை தந்திருந்தனர்.

HNBF சந்தைப்படுத்தல் பிரிவின் பிரதானி உதார குணசிங்க, HNBF பயிற்சிப் பிரிவின் பிரதானி அனுர உடவத்த மற்றும் HNBFஇன் சிலாபம் கிளையின் சிரேஷ்ட முகாமையாளர் ரசிக பிரேமலால் மற்றும் HNBF இன் சந்தைப்படுத்தல் மற்றும் பயிற்சி குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

“HNB FINANCE இல் உள்ள எங்கள் முக்கிய மதிப்புகளில் ஒன்று மக்களுக்கு சமூக கல்வியை வழங்குவதாகும். மூலதன முகாமைத்துவம் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களிடையே நிலையான மற்றும் கவனம் செலுத்தும் வகையில் நிதியறிவை ஊக்குவிப்பதன் மூலம் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என HNBFஇன் சந்தைப்படுத்தல் பிரிவின் பிரதானி உதார குணசிங்க தெரிவித்தார்.

“எமது பல தயாரிப்புகள் மற்றும் சேவைகள் மூலம் மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முனைவு வாடிக்கையாளர்களுக்கு நிதியளிப்பு மற்றும் அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்துடன், அவர்கள் சேமிக்கும் பழக்கத்திற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்தத் திட்டத்தின் மூலம், எமது பரந்து விரிந்துள்ள வாடிக்கையாளர் தளத்தின் நிதி அறிவை விரிவுபடுத்துகிறோம், அதே நேரத்தில் அவர்களின் முழுத் திறனையும் வளர்க்க உதவுகிறோம். இது ஒரு நிலையான மற்றும் பாதுகாப்பான பொருளாதாரத்திற்கு பங்களிக்க அவர்களுக்கு உதவும்.” என அவர் மேலும் கூறினார்.

நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் மாதாந்த செயலமர்வுகளின் தொடராக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. HNBFஇன் நிதிச் சேவைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிறுவனத்தின் நிலையான பொருளாதார உத்திகளை அடைதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தத் தொடர் மாதாந்தப் செயலமர்வுகள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Share with your friend
Exit mobile version