MyFees.lk இல் நீடித்த மீளச் செலுத்தும் திட்டங்களை வழங்கும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி American Express 

Share with your friend

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி American Express அண்மையில்  MyFees.lk உடன் கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனூடாக, American Express அட்டைதாரர்களுக்கு நாட்டிலுள்ள பல்வேறு கல்வி நிலையங்களுக்கான கல்விசார் கொடுப்பனவுகளை ஒன்லைன் ஊடாக செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், நீடித்த மீளச் செலுத்தும் திட்டத்தையும் வழங்குகின்றது. இந்தக் கட்டமைப்பினூடாக மேற்கொள்ளப்படும் சகல கொடுப்பனவுகளையும் 12 மாதங்களில் தவணை முறையில் மீளச் செலுத்தக்கூடிய வகையில் மாற்றியமைத்துக் கொள்ள முடியும். இதனூடாக அட்டைதாரர்களுக்கு 12 மாதங்களில் மீளச் செலுத்தும் வசதி வழங்கப்படுகின்றது. மேலும், ஒவ்வொரு நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி American Express Platinum மற்றும் Gold அட்டைதாரருக்கும் ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல்களின் போதும் 3x அங்கத்துவ வெகுமதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். மேற்படி சலுகைகள் 2021 நவம்பர் 30 ஆம் திகதி வரை செல்லுபடியாகும். இந்தப் பங்காண்மையினூடாக, நேஷன்ஸ் ட்ரஸ்ட் American Express அட்டையினால், தொடுகையற்ற கொடுப்பனவுத் தெரிவுகள் வழங்கப்படுவதுடன், பாதுகாப்பு மற்றும் சௌகரியம் போன்றனவும் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகின்றன.

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் அட்டைகள் மற்றும் நுகர்வோர் விவகாரங்களுக்கான சிரேஷ்ட உப தலைவர் நிலூக  குணதிலக கருத்துத் தெரிவிக்கையில், “அட்டைதாரர்களின் சௌகரியம் என்பது தொடர்பில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அதிகளவு கவனம் செலுத்துகின்றது. MyFees.lk போன்ற பிரத்தியேகமான சேவையுடனான எமது பங்காண்மையின் மூலமாக பாதுகாப்பு மற்றும் சௌகரியம் ஆகியன வழங்கப்படுகின்றன. பிள்ளைகளின் பாடசாலை, கல்லூரி மற்றும் உயர் கல்வி கட்டணங்களை பெற்றோர்களால் தமது வீடுகளில் பாதுகாப்பாக இருந்தவாறு செலுத்த முடியும். அட்டைதாரர்களுக்கு 12 மாதங்கள் வரை தவணை முறையில் மீளச் செலுத்தும் வசதியை வழங்கும் நெகிழ்ச்சித் தன்மையை வழங்குகின்றது. இதனூடாக நிதி நெகிழ்ச்சித்தன்மை மற்றும் சௌகரியம் ஆகியவற்றை வழங்குவதற்கான எமது அர்ப்பணிப்பு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி American Express என்பது அட்டைதாரர்களுக்கு தமது நிதித் திட்டமிடலுக்கான தங்கியிருக்கக்கூடிய பங்காளராக திகழ்வதுடன், செலவுகளை நிர்வகிக்கவும், அட்டைதாரர்களுக்கு வெகுமதிகளை வழங்கி உதவும் வகையிலும் அமைந்துள்ளது.“ என்றார்.

Convenienza Solutions இனால் வழங்கப்படும் MyFees.lk என்பது நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு கல்விசார் கட்டணங்களை வங்கிக்கு விஜயம் செய்யாமல் அல்லது கல்வியகத்துககு விஜயம் செய்யாமல், சௌகரியமாக செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

MyFees.lk இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஃபாயிக் ஃபாயிஸ் கருத்துத் தெரிவிக்கையில், “அசல் வாடிக்கையாளர் தேவைக்கு தீர்வளிக்கும் சேவை எனும் வகையில், MyFees.lk என்பது உலகப் புகழ்பெற்ற American Express கொடுப்பனவு தீர்வை வழங்க நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியுடன் கைகோர்த்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றது. நாட்டில் கல்விசார் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான முன்னணி கட்டமைப்பாக தம்மைப்பதிவு செய்துள்ள நிலையில், இந்தப் பங்காண்மையினூடாக American Express அட்டைதாரர்களுக்கு பெறுமதியுடன், சௌகரியமும் சேர்க்கப்படும். பாதுகாப்பான கொடுப்பனவு கட்டமைப்பு பொறிமுறையாகவும் அமைந்துள்ளது. MyFees.lk இனால் உரிய காலத்தில் கல்வி நிலையங்களுக்கு பணத்தைப் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், கொடுப்பனவுகளை சீரமைத்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகின்றது.” என்றார்.

American Express அட்டைதாரர்கள் தற்போது www.amex.myfees.lk எனும் இணையத்தளத்தை பார்வையிட்டு சௌகரியமாகவும் உடனடியாகவும் கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும். MyFees.lk உடனான பங்காண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய கல்வியகங்கள் தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்து கொள்வதற்கு www.americanexpress.lk/en/offers/education-offers எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும். நேஷன்ஸ் மொபைல் வங்கிச் சேவை app ஊடாக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அட்டைசார் சலுகைகள் தொடர்பில் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். இதனை iOS மற்றும் அன்ட்ரொயிட் கட்டமைப்புகளில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பற்றி

நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி பீஎல்சீ Business Today சஞ்சிகை தரவரிசையில் இலங்கையின் முதல் 15 வணிக நிறுவனங்களில் இடம் பிடித்துள்ளது. “மக்கள் மற்றும் வணிகங்களது குறிக்கோள்களையும் அபிலாஷைகளையும் ஒரு நிலையான வழியில் அடைவதற்கு நிதி சேவைகள் மற்றும் தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு உதவுவது” என்ற நோக்கத்தில் பயணிக்கும் வங்கி; தனிநபர் மற்றும் நிறுவனங்கள் என பல்வேறு வகையான வாடிக்கையாளர்களுக்கு வங்கித்துறை, நிதி தயாரிப்புகள் மற்றும் தொடர்புடைய சேவைகளை வழங்குகிறது. அதிநவீன டிஜிட்டல் வங்கி தொழில்நுட்பங்கள் மூலம் டிஜிட்டல் வலுவூட்டலில் கவனம் செலுத்திய வங்கி, பல புதுமையான வாடிக்கையாளர் மைய வங்கி தீர்வுகளான, நீட்டிக்கப்பட்ட வங்கி நேரம், 365 நாள் வங்கி மற்றும் FriMi – இலங்கையின் முதல் டிஜிட்டல் வங்கி அனுபவம் போன்றவற்றில் முன்னோடியாக உள்ளது. உன்னத மதிப்பு, சேவை வழங்குதல் மற்றும் அட்டை பாவனையாளர்களை பலனளிக்கும் அனுபவங்கள் மற்றும் வாய்ப்புகளுடன் இணைக்கும் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி பீஎல்சீ, இலங்கையில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டுகளுக்கான ஒரே சேவை வழங்குநராகும். நாடு முழுவதும் 96 கிளைகளை இயக்குகிற நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி 48 CDM இயந்திரங்களை உள்ளடக்கிய 127 இடங்களில் அமைந்துள்ள ATM வலையமைப்பையும், Lanka Pay வலையமைப்பின் ஊடாக 3,700 க்கும் மேற்பட்ட ATM களையும் கொண்டுள்ளது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply