NIBM REACH 2024 மாணவர்களின் மறைக்கப்பட்ட திறன்களை வெளிப்படுத்த தயார்

Share with your friend

கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வரும் முன்னணி கல்வி நிறுவனமான தேசிய வியாபார முகாமை நிறுவனம் (NIBM), மாணவர்களின் பல்வேறு மறைந்திருக்கும் திறன்களை வெளிப்படுத்தக்கூடிய ஒரு நிகழ்ச்சியான ‘NIBM REACH 2024’ இனை ஏற்பாடு செய்துள்ளது.

இரண்டாம் தடவையாக நடாத்தும் இந்நிகழ்ச்சி மாணவர்கள் தங்களுடைய மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தவும், வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளவும் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் இணையவும் ஒரு தளத்தை வழங்குகிறது.

NIBM, சமூகத்தில் புதுமை மற்றும் வலுவூட்டல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களை தங்கள் திறன்களை வெளிப்படுத்த இந்த நிகழ்வினை நடாத்துகிறது. கல்வி கற்றல் மற்றும் தொழில்முறை வெற்றிக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதன் மூலம் தொழில் வளர்ச்சி மற்றும் வலைப்பின்னல் ஆகியவற்றிற்கான வாய்ப்புகளை உருவாக்குவதை இது நோக்கமாகக்கொண்டுள்ளது.

NIBM இன் பணிப்பாளர் நாயகம், வைத்திய கலாநிதி, D.M.A குலசூரிய, “NIBM நிறுவனத்துக்குள், திறமை அனைத்து இடங்களிலும் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். இந்த திறமையை வளர்த்து அடுத்த தலைமுறை நட்சத்திரங்களை உருவாக்க உதவுவதே எங்கள் நோக்கம். NIBM REACH 2024 ஒரு போட்டியை விடவும் படைப்பாற்றல், ஆர்வம் மற்றும் ஒருவரின் கனவுகளைத் தொடர முடிவற்ற சாத்தியக்கூறுகளின் ஒரு மைல் கல்லாக அமையும்.

வளர்ந்து வரும் திறமையாளர்களுக்கு இந்த தளத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் மற்றும் எங்கள் மாணவர்கள் வழங்கும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளோம். இந்த நிகழ்வு NIBM இல் கற்பவர்களுக்கு வாய்ப்புகளை பெறவும், வெற்றிகரமான வாழ்க்கையை நோக்கி முதற் படிகளை எடுக்கவும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும்” என தெரிவித்தார்.

NIBM REACH 2024, பாடகர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் வாத்தியக் கலைஞர்கள் போன்ற பிரிவுகளைக் கொண்டிருக்கும். மேலும் இது அனைத்து வயது மற்றும் அனைத்து பின்னணியில் உள்ளவர்களுக்கும் வாய்ப்புகளை வழங்குகிறது. ஆகஸ்ட் 15 ஆம் திகதி தேர்வுகளும், ஆகஸ்ட் 29 ஆம் திகதி முதல் சுற்றும், செப்டம்பர் 5 ஆம் திகதி அரையிறுதிப் போட்டிகளும், செப்டம்பர் 19 ஆம் திகதி இறுதிப் போட்டி மியூசியஸ் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறும். மதிப்பிற்குரிய நடுவர் குழுவின் உயர் தர மதிப்பீட்டாளர்களாள் மதிப்பீடு செய்யப்படும்.

இலங்கையில் ஒரு முதன்மையான கற்றல் நிறுவனமாக, NIBM ஆனது உலகளாவிய போக்குகளுடன் வேகத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு உறுதிபூண்டுள்ளது. அதன் திட்டங்கள் பொருத்தமானவை மற்றும் முன்னோக்கிச் சிந்திக்கின்றன. NIBM நடைமுறை மூலம் அனுபவ கற்றலை வலியுறுத்துகிறது. புதுமை மற்றும் விமர்சன சிந்தனையை வளர்க்கும் மெய் உலக திட்டங்கள், அதிநவீன படிப்புகளை வழங்குவதன் மூலமும், சர்வதேச நிறுவனங்களுடன் கைகோர்ப்பதன் மூலமும், NIBM NIBM அதன் கற்பவர்களுக்கு கல்வி குறித்த உலகளாவிய கண்ணோட்டத்தை வழங்குகிறது. ஆரம்பத்திலிருந்து NIBM இல் கற்றவர்கள் சிறந்த எதிர்காலத்தை அடைந்துள்ளனர் மற்றும் வணிக உலகிற்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply