‘#Noගුටි சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை நிறைவுக்கு கொண்டு வரும் தேசிய திட்டம்” இரண்டாம் கட்டம் ஏப்ரல் 1 ஆம் திகதி காலியிலிருந்து கொழும்புக்கு யாத்திரையாக வருகை தரவுள்ளது. இலங்கையில் முதன் முறையாக “சிறுவர் பாதுகாப்பு யாத்திரை” எனும் நாமத்தில் இந்தத் திட்டம் அமையவுள்ளது. சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்தும் அமைப்பு (Stop Child Cruelty Trust) மற்றும் சிறுவர் பாதுகாப்பு ஒன்றியம் (CPA) ஆகியன இணைந்து ஏப்ரல் 2ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தை வந்தடையவுள்ளது.

கடந்த 18 மாத காலப்பகுதியில் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த 12 சிறுவர்களின் நினைவாக, ஏப்ரல் 1ஆம் திகதி, பன்னிரண்டு சவப் பெட்டிகளும் காலியிருந்து பேருவளை முதல் களுத்துறை ஊடாக கொழும்பு கோட்டையை வந்தடைந்து, ஏப்ரல் 2ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தை சேரவுள்ளது. இலங்கையின் முதலாவது சிறுவர் பாதுகாப்பு நலன்பேணல் தூதுவர்களான சாரங்க திசாசேகர, தினக்ஷி பிரியசாத், உமார சின்ஹவன்ச, ஹரித் விஜேரத்ன, ஆதித்யா வெலிவத்த, கலாநிதி. விசாகேச சந்திரசேகரம், கலாகீர்த்தி நிரஞ்சனி சண்முகராஜா, அபிஷேகா பெர்னான்டோ மற்றும் ஒடாரா குணவர்தன ஆகியோர் இந்த யாத்திரையில் பங்கேற்கவுள்ளனர்.

சிறுவர் பாதுகாப்பு ஒன்றியத்தின் இணை அழைப்பாளரும், சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்தும் அமைப்பின் ஸ்தாபக தலைமை செயற்பாட்டாளருமான வைத்தியர் துஷ் விக்ரமநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “சிறுவர் பாதுகாப்பு என்பது தேசிய மட்டத்தில் இடர்நிலையை எதிர்கொண்டுள்ளது. உங்கள் பிள்ளை வீட்டிலிருந்து வெளியே சென்று திரும்பி வரும் போது சவப் பெட்டியில் வருவதைப் போன்று மோசமான சம்பவம் இடம்பெற முடியாது. இந்த நிலை தொடர்பில் நம் நாட்டைச் சேர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும். 225 சிறுவர்கள் இணைந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘#225මඕන’ (225 ம் வேண்டும்) எனும் கோரிக்கையை நாடாளுமன்றத்தின் 225 அங்கத்தவர்களிடமும் முன்வைப்பார்கள். கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறும் நிகழ்வின் போது, தேசிய பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலில் சிறுவர் பாதுகாப்பையும் முக்கியமாக உள்வாங்குமாறு கோரி இந்த கோரிக்கை முன்வைக்கப்படும். முக்கிய நகரங்களில் பொது மக்களின் கையொப்பத்தைப் பெற்று, ஒன்லைனில் இது தொடர்பான மனுவும் முன்வைக்கப்படும். இந்த ஒப்பங்களைத் திரட்டுவதற்கு சிறுவர் பாதுகாப்பு நலன் பேணல் தூதுவர்களினதும் இலங்கை சிறுவர் பாதுகாப்பு நிபுணர்களினதும் ஆதரவு பெற்றுக் கொள்ளப்படும்.” என்றார்.

ஏப்ரல் 1 ஆம் திகதி பொது மக்கள் அனைவரையும் இந்த யாத்திரையில் இணைந்து கொள்ளுமாறு SCC அழைப்பதுடன், சமூகத்தில் சிறுவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதைப் பற்றி உணர்த்தும் பாடல் மற்றும் நாடக நிகழ்வுகளிலும் பங்கேற்குமாறும் கோரியுள்ளது. ஏப்ரல் 1 ஆம் திகதி காலை 9 மணிக்கு காலி பொது பேருந்து தரிப்பிடத்திலிருந்து இந்த யாத்திரை ஆரம்பமாகும். பேருவளையிலிருந்து (பொதுச் சந்தைக்கு முன்பாக) பி.ப. 1.20 மணிக்கும், களுத்துறையிலிருந்து (பேருந்து நிலையத்துக்கு முன்பாக) பி.ப. 4 மணிக்கும் ஆரம்பமாகும். ஏப்ரல் 2ஆம் திகதி இந்த நிகழ்வு கொழும்பு புகையிரத நிலையத்துக்கு முன்பாக காலை 9 மணிக்கு ஆரம்பமாகும். இறுதி நிகழவு சுதந்திர சதுக்கத்தில் பி.ப. 2.30 மணிக்கு வரலாற்று முக்கியத்துவமான முறையில் இடம்பெறும்.

இலங்கையில் சிறுவர் உரிமைகளை பேணி பாதுகாத்து ஊக்குவிப்பதில் அர்ப்பணிப்பான முதலாவது CPA ஐ நிறுவும் பணிகளை SCC மேற்கொண்டுள்ளது. இலக்கு வைக்கப்பட்ட விடயங்களை நோக்கி உறுதியாக செயலாற்றுவது என்பதனூடாக, சிறந்த வெற்றியை எய்தக்கூடியதாக இருக்கும் என்பதுடன், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவதிலும் பங்களிப்பு வழங்கும்.

சிறுவர் பாதுகாப்பு என்பது திரண்ட சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடாக அமைந்திருப்பதுடன், SCC/CPA இனால் தொடர்ந்தும் சுய ஆளுகையுடைய நடத்தை ஒழுக்கக் கோவை ஒன்று கட்டமைக்கப்பட்டு, சிறுவர் பாதுகாப்பு தொடர்பான உரிமைகளை பேணி ஊக்குவித்து, சமூகத்தில் மீள தாக்கத்துக்கு உள்ளாவதை தவிர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த நடவடிக்கையில் தம்மை ஈடுபடுத்த ஆர்வமுள்ளவர்கள் www.stopchildcruelty.com எனும் இணையத்தளத்தை பார்வையிட முடியும் என்பதுடன், Facebook பக்கத்தில் www.facebook.com/stopchildcruelty அல்லது info@stopchildcruelty.com எனும் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பை ஏற்படுத்தலாம்.