Site icon Eyeview Sri Lanka

NOLIMIT தனது NOLIMIT BONANZA மூலம் 300 பேருக்கு முழுமையான விலைப் பட்டியல் விலக்களிப்பு மற்றும் 30% வரையான தள்ளுபடியுடன் 30 ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

Share with your friend

இலங்கையின் மிகவும் பிரபலமான நவநாகரிக சில்லறை விற்பனைச் சங்கிலியான  NOLIMIT, NOLIMIT BONANZA வெகுமதித் திட்டத்துடன் தனது 30 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. 2022 செப்டெம்பர் 19 முதல் ஒக்டோபர் 18 வரை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் வகையில், NOLIMIT இல் கொள்வனவு செய்கின்றவர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு 30% வரை தள்ளுபடியைப் பெற்றுக்கொள்வார்கள். அதே சமயம் ரூபா 4,000 தொகைக்கு மேலான ஒவ்வொரு விலைப்பட்டியலும் அதிர்ஷ்டக் குலுக்கல் சீட்டிழுப்பொன்றுக்கு தகைமை பெறும். இதில் 300 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு அவர்களது விலைப்பட்டியலுக்கு முழுமையாக விலக்களிப்பு வழங்கப்படும். இதைவிட, அனைத்து Arapaima அங்கத்துவ உறுப்பினர்களுக்கும் 30 மேலதிக Arapaima புள்ளிகள் வழங்கப்படும். அதே நேரத்தில், எழுமாறாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ஷ்ட வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் இலவச பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொள்வார்கள். இவை அனைத்தும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை.

NOLIMIT நிறுவனத்தின் வணிக மூலோபாயம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கான தலைமை அதிகாரியான றனீஸ் ஷெரிப் அவர்கள் கருத்து வெளியிடுகையில், “நமது 30 வருட பயணத்தில் எங்களுடன் கைகோர்த்த மதிப்புமிக்க வாடிக்கையாளர்களை NOLIMIT BONANZA கௌரவித்து வெகுமதியளிக்கும் வகையிலும், பரந்த அளவில் வாடிக்கையாளர்களை கவர்ந்து அவர்களின் விசுவாசத்துடனான ஆதரவைப் பெறுவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறோம். அந்த வகையில், NOLIMIT BONANZA வெகுமதித்திட்டத்தை வழங்கியுள்ளோம். 30 வருடங்களாக இலங்கை மக்களுக்கு சேவையாற்றி, நாட்டின் மிகவும் பிரபலமான நவநாகரிக சில்லறை விற்பனைச் சங்கிலியாக எங்கள் ஸ்தானத்தை எட்டியுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள எமது விற்பனை காட்சியறைகளுக்கு வருகை தருமாறு அனைத்து இலங்கை மக்களுக்கும் நாம் மகிழ்ச்சியுடன் அழைப்பு விடுவதுடன், இங்கு அவர்கள் NOLIMIT BONANZA வரப்பிரசாதங்களை அனுபவிக்க முடியும். நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து, எங்கள் சமூகங்களுக்கு அவர்களின் நவநாகரிக மற்றும் ஆடைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சேவை செய்வதற்கான எங்கள் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

1992 ஆம் ஆண்டில் French Corner என்ற நாமத்துடன் தனது பயணத்தை ஆரம்பித்து, 2005 ஆம் ஆண்டில் NOLIMIT என்ற மாற்றத்தை படிப்படியாகத் தழுவியது. தெஹிவளையில் ஒரு சாதாரண விற்பனை நிலையமாக, வெறும் 5 ஊழியர்களுடன் ஆரம்பித்த இந்த வணிகம், தெஹிவளையில் உள்ள அதன் முக்கிய விற்பனைக் காட்சியறையின் தலைமையில், மிக விரைவில் நாடளாவிய ரீதியில் விற்பனைக் காட்சியறைகளைக் கொண்ட ஒரு சங்கிலியாக மலர்ந்தது. அதனைத் தொடர்ந்து மிக விரைவாக, மாபெரும் நவநாகரிக தொழில்துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக NOLIMIT உருவெடுத்ததுடன், வாடிக்கையாளர்களுக்கு அதிவிசாலமான சில்லறை வியாபார கட்டமைப்பினை வழங்கி பல மில்லியன் கணக்கானவர்களை தன்பால் ஈர்த்தது.

இன்று, NOLIMIT இலங்கை முழுவதும் 23 இடங்களில் தனது விற்பனை காட்சியறைகளைக் கொண்ட இலங்கையின் மிகப்பெரிய குடும்ப நவநாகரிக சங்கிலியாக வளர்ந்துள்ளது. 400,000 சதுர அடிக்கு மேல் சில்லறை வியாபார இட வசதியைத் தன்னகத்தே கொண்டுள்ள பெருமை அதனைச் சாரும். அதே நேரத்தில் அதன் ஆற்றல்மிக்க பணியாளர் அணியில் 1,500 க்கும் மேற்பட்ட நபர்களை உள்ளடக்கியதாக அது வளர்ந்துள்ளது. அதன் விற்பனைக் காட்சியறைகளின் வலையமைப்பில் சமீபத்தைய புதிய வரவாக, கொழும்பு சிட்டி சென்டரில் தனது புதிய விற்பனைக் காட்சியறையை NOLIMIT திறந்து வைத்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக, பல விருதுகளையும், பாராட்டுக்களையும் NOLIMIT பெற்றுள்ளது. 2009 முதல் 2021 வரை Brand Finance ஆல் நவநாகரிக சில்லறை வியாபாரத்தில் “மிகவும் அபிமானம் பெற்ற வர்த்தகநாமம்” என்ற தரப்பட்டியலில் பெயரிடப்பட்டது. Great Place to Work® மூலம் இலங்கையில் பணியாற்றுவதற்கான சிறந்த 25 நிறுவனங்கள் என தெரிவு செய்யப்பட்டமை, அதன் பணியாளர்கள் மீதான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. மேலும் இச்சங்கிலியின் சிறந்த நடைமுறைகள் மற்றும் செயல்முறைகளை அங்கீகரித்து JASTECA Taiki Akimoto 5S விருதுகள் நிகழ்வுளில் விருதுகளையும் வென்றுள்ளது. இந்த நிறுவனம் இன்னும் பல விருதுகள் மற்றும் பாராட்டுகளை வென்றுள்ளதுடன் மற்றும் LMD, Brands Annual, Brand Finance மற்றும் பல அங்கீகரிக்கப்பட்ட மற்றும் புகழ்பெற்ற அதிகார அமைப்புக்களால் பல்வேறு சிறந்த வர்த்தகநாமம் மற்றும் நிறுவன தரவரிசையில் தொடர்ச்சியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.


Share with your friend
Exit mobile version