Noyon Lanka இலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட 100% இயற்கை வர்ணமான Planetones, Control Unionஆல் சான்றளிக்கப்பட்டது

Share with your friend

அவர்களது மதிப்புச் சங்கிலியில் இரசாயனப் பொருட்களைப் முறையாக பயன்படுத்துவதை உறுதிசெய்யும் வகையில், Noyon Lanka (Pvt) Ltd (Noyon) சரிகைக்கான 100% இயற்கையான வர்ணமான Planetonesஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு இயற்கை வர்ணத்துக்கு Control Union சான்றிதழ் வழங்குவது இதுவே முதல் முறையாகும்.

ஏற்கனவே இரண்டு முன்னணி ஐரோப்பிய நவநாகரீக பிராண்டுகளுக்கு வணிகமயமாக்கப்பட்ட Noyonன் Planetones இயற்கை வர்ணமானது நிறங்களில் பொதுவாகக் காணப்படும் நடுநிலை நிறங்களுக்கு அப்பால் பரந்த அளவிலான 32 தொடர்களை வழங்குகிறது. Cranberry மற்றும் Achiote போன்ற இயற்கை வண்ண மூலங்கள் பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளமை முக்கிய விடயமாகும்.

Eco Dye Standard கட்டுப்பாட்டுச் சபையின் சான்றிதழுக்கு மேலதிகமாக, இந்த இயற்கைச் சாயகரைசலானது, அபாயகரமான இரசாயனங்களின் ஜீரோ டிஸ்சார்ஜ் (ZDHC) தர நிலைகளின் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது என்பதுடன் உற்பத்தித் தயாரிப்பு கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் பட்டியல் (MRSL) நிலை 1 முதல் நிர்ணயிக்கப்பட்ட தரங்களுடன் இணங்குகிறது. Control Unionனின் Eco Dye Standard சான்றிதழைப் பெற்ற முதல் நிறுவனம் Noyon என்பது குறிப்பிடத்தக்கது.

Noyon Lanka என்பது MAS ஹோல்டிங்ஸின் துணை நிறுவனமாகும், இது 2003இல் நிறுவப்பட்டது. இந்த தீர்வு குறித்து கருத்து தெரிவித்த Noyonஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி Ashiq Lafir, “எங்கள் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப திறன்களை பயன்படுத்தி, Noyon பல புத்தாக்கமான மற்றும் நிலையான தீர்வுகளை உருவாக்கியுள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களின் அனைத்து முக்கிய செயல்திறன் மற்றும் தரநிலைகளை எதிர்நோக்கும் போது, ​​எங்கள் தயாரிப்புகளின் எதிர்மறையான சுற்றுச்சூழல் தாக்கத்தை குறைக்க முடியும். இந்தப் பயணத்தில் இந்த சமீபத்திய தயாரிப்பு ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இது ஒரு நிலையான ஆடை உற்பத்தி இடமாக இலங்கையின் நிலையை மேம்படுத்தும் என நம்புகிறோம். எதிர்காலத்தில், எங்கள் முயற்சிகள் சாயங்களைப் பயன்படுத்தி மட்டுமே நிறமிடப்பட்ட ஒரு ஆடையை தயாரிப்பதில் கவனம் செலுத்துகின்றன.” என தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சித் திட்டம் (UNEP) மற்றும் Ellen MacArthur அறக்கட்டளை ஆகியவை உலகளவில் 20% கழிவுநீரை ஜவுளி சாயமிடுதல் மற்றும் சுத்திகரித்தலுக்கு என மதிப்பீடு செய்துள்ளதுன. செயற்கை சாயங்களுடன் ஒப்பிடும்போது, ​​இயற்கையான சாயமிடுதல் செயல்முறையின் போது குறைக்கப்பட்ட சலவை மூலம், Planetones முறையே 30% மற்றும் 15% நீர் மற்றும் சக்தி சேமிப்பை வழங்குகின்றன. இயற்கை கூறுகளின் உக்கும் தன்மையின் மூலம் நீரில் இரசாயனங்கள் சேர்வது குறைக்கப்பட்டு அதன் நிலைத்தன்மையை மேலும் விரிவுபடுத்துகிறது.

85% முதல் 95% வரையிலான வண்ணப் பொருத்தத்துடன், முக்கியமான செயல்திறன் மற்றும் தர அளவுருக்களைப் பராமரிக்கும் போது, ‘Planetones’ இயற்கை சாயக் கரைசல் நிலைத்தன்மையில் இந்த வரவேற்பைப் பெறுகிறது. இரண்டு இயற்கை ஆதாரங்கள் (ஒரே வகை இரண்டு பழங்கள் போன்றவை) ஒரே மாதிரியாக இல்லாததால், இயற்கை சாயங்களுக்கான குறிப்பிடத்தக்க பண்புகளாகும். வண்ணத்தன்மையின் அடிப்படையில் – துணியின் வண்ண பண்புகளை மாற்றும் திறன் அல்லது அருகில் உள்ள பொருட்களுக்கு வர்ணங்களை மாற்றும் திறன் ஒளிக்கு 2.5 – 3.5 மற்றும் பிற பொருட்களுக்கு 3.5 மதிப்பைக் கொண்டுள்ளது. இதேபோல், தொகுதிகளுக்கு இடையில் வண்ணம் மீண்டும் மீண்டும் 90% – 95% உயர் மதிப்பை அடைகிறது.

Planetones மற்றும் அதன் அறிவுசார் சொத்துக்கள் (IP) இலங்கையில் உள்ள பிற விநியோகச் சங்கிலி பங்காளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் மற்றும் அவர்களுக்கு, சான்றளிக்கப்பட்ட இயற்கையாக சாயமிடப்பட்ட எலாஸ்டிக்ஸ், துணி மற்றும் பாகங்கள் வழங்குவதற்கு அவர்களுக்கு முடியும்.

இந்த இயற்கை சாயத்தை உற்பத்தி செய்வது Noyonஇன் பேண்தகைமைக்கான ஒட்டுமொத்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும். மறுசுழற்சி செய்யப்பட்ட பொலித்தீன் டெரெப்தாலேட் (PET) போத்தல்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருட்கள் உட்பட, உக்கும் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் போன்ற சுற்றுச்சூழல் நட்பு சலுகைகளின் தற்போதைய தொகுப்பில் இது இடம்பெற்றுள்ளது.

மேலும் 2019 மட்டத்துடன் ஒப்பிடுகையில், Noyon அதன் முழுமையான உமிழ்வை 2021இல் 8.4 சதவிகிதம் குறைத்துள்ளது மற்றும் 2022இல் அவற்றை மேலும் 12.6 சதவிகிதமாக குறைக்க முயல்கிறது. நிறுவனம் தற்போது அதன் அபாயமற்ற கழிவுகளில் 50% மதிப்பை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது மற்றும் மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டை ஆதரிக்கிறது. நிறுவனம் பயன்படுத்தும் 100% சாயங்கள் மற்றும் இரசாயனங்கள் Bluesign அனுமதிக்கப்பட்டுள்ளது.

‘Planetones’ அறிமுகத்துடன் இணைந்து, Noyon காலி வனவிலங்கு பாதுகாப்புச் சங்கத்துடன் இணைந்து சிங்கராஜா வனப்பகுதிக்குள் புதிய தாவரங்கள் மற்றும் விலங்கு இனங்களை அடையாளம் காணும் சமூக அடிப்படையிலான பாதுகாப்புத் திட்டத்திற்காக இணைந்துள்ளது. புதிதாக அடையாளம் காணப்பட்ட ஒவ்வொரு இனத்தின் பெயரிலும் பெயரிடப்பட்ட நிலையான இயற்கை சாயங்களின் வரம்பை உருவாக்குவதை Noyon நோக்கமாகக் கொண்டுள்ளது மேலும் இந்த திட்டத்திற்கு இயற்கை சாயங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 1% நன்கொடை அளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Noyon தொடர்பில்:2004இல் ஸ்தாபிக்கப்பட்ட Noyon Lanka (Pvt) Ltdஆனது MAS குழும நிறுவனங்களின் ஒரு பகுதியாகும். அதன் தொடக்கத்தில் இருந்து, Noyon உலகளாவிய உள்ளாடைகள், நைட்வேர் மற்றும் செயல்திறனுக்கான உடைகளின் performance wear பிராண்டுகளுடன் செயற்பட்டு வருகிறது மற்றும் அதன் ஒப்பிடமுடியாத தயாரிப்பு தரம் மற்றும் நிலையான சாதனைகளுக்காக ஏராளமான சான்றிதழ்கள் மற்றும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. தற்போது, ​​Noyonனின் உற்பத்தி ஆலைகள் இலங்கை, இந்தோனேசியா மற்றும் சீனாவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply