Eyeview Sri Lanka

Omega Line நிறுவனம் CPM ஸ்ரீ லங்கா முகாமைத்துவ சிறப்பு விருதுகள் 2025 இல் வெற்றி வாகை சூடியது

Share with your friend

ஐரோப்பாவுக்கான இலங்கையின் மாபெரும் ஆடைகள் ஏற்றுமதியாளர்களில் ஒன்றான Oniverse குழும நிறுவனங்களில் (முன்னர் Calzedonia என அறியப்பட்டது) ஒன்றாக இயங்கும் Omega Line, அதன் நான்கு ஊழியர்களுக்கு அண்மையில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா முகாமைத்துவ தலைமைத்துவ சிறப்பு விருதுகள் 2025 இல் கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதனூடாக, ஆடைகள் உற்பத்தித் துறையில் சிறந்த தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதற்கான அதன் கீர்த்தி நாமத்தை மேலும் உறுதி செய்துள்ளது.

(இடமிருந்து) கனிஷ்க வீரசிங்க, தயாரிப்பு – உதவி பொது முகாமையாளர்; சார்மன் டெப், தயாரிப்பு திட்டமிடல் – உதவி பொது முகாமையாளர்; டேமியன் லேகம்கே, தயாரிப்பு – உதவி பொது முகாமையாளர்; மற்றும் சம்பத் வீரகோன், பிரதம மனித வளங்கள் அதிகாரி – செயற்பாடுகள்.

குறிப்பாக, செயற்பாடுகளுக்கான பிரதம மனித வளங்கள் அதிகாரி சம்பத் வீரகோன், ஆடைகள் உற்பத்தித் துறை – கூட்டாண்மை முகாமைத்துவ பிரிவில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டது மட்டுமன்றி, தேசிய மட்டத்தில் ஒட்டு மொத்த வெண்கல விருதையும் வெற்றியீட்டிருந்தார். அண்மையில் நடைபெற்ற 20 ஆவது தொழில் வழங்குனர் வர்த்தகநாமமிடல் விருதுகளில் ஆசியாவின் அதிசிறந்த மனிதவளங்கள் தலைமைச் செயற்பாட்டாளருக்கான கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, இந்த விருதையும் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். ஆடைத் தொழிற்துறையில் மக்கள் மூலோபாய செயற்பாட்டாளர் என்பது மட்டுமன்றி, இலங்கையின் பரந்த கூட்டாண்மை தலைமைத்துவத்திலும் அவரின் நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் சிறந்த ஊழியர்கள் மீது அக்கறை கொண்ட ஆடை ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக திகழும், நிறுவனத்தின் கீர்த்திநாமத்தை தொடர்ந்தும் வலிமைப்படுத்தும் பெறுமதிகள், புத்தாக்கம், உள்ளடக்கம் மற்றும் நிலைபேறான வளர்ச்சி போன்றவற்றை செயற்படுத்தும் தலைமை அதிகாரிகளை கட்டியெழுப்புவதற்கான Omega Line இன்  ஆழமான அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாகவும் அவரின் வெற்றி அமைந்துள்ளது.

அத்துடன், அந்தப் பிரிவில் இரண்டாமிடத்தை உற்பத்திப் பிரிவின் உதவி பொது முகாமையாளர் கனிஷ்க வீரசிங்க பெற்றுக் கொண்டதுடன், உற்பத்திப் பிரிவின் உதவி பொது முகாமையாளர் டேமியன் லேகம்கே மற்றும் உற்பத்தி திட்டமிடல் பிரிவின் உதவி பொது முகாமையாளர் சார்மன் டெப் ஆகியோர் மூன்றாமிடத்தைப் பெற்றுக் கொண்டனர்.

இந்த கௌரவிப்புகளினூடாக, Omega Line இன் தொடர்ச்சியான விருத்தி பற்றிய கலாசாரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மூலோபாய நோக்கு, அணியினரை ஊக்குவிப்பது மற்றும் புத்தாக்கத்தை முன்னெடுப்பது தொடர்பில் ஒவ்வொரு நிலையிலும் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. CPM ஸ்ரீ லங்காவினால் ஊக்குவிக்கப்படும் பெறுமதிகளுடன் நெருக்கமாக பொருந்தும் வகையில் இந்த சாதனைகள் அமைந்திருப்பதுடன், நோக்கத்தை நிஜமாக்கும் மற்றும் முகாமைத்துவ சிறப்பு, புத்தாக்கம் மற்றும் சமூக சேவை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வியாபார தலைவர்களை கௌரவிப்பதாகவும் அமைந்துள்ளது.

தேசிய பொருளாதாரத்தில் Omega Line முக்கிய பங்காற்றுவதுடன், தற்போது 7500 க்கும் அதிகமான ஊழியர்களை சந்தலங்காவ மற்றும் வவுனியா உற்பத்திப் பகுதிகளில் கொண்டு, வருடாந்தம் 100 மில்லியனுக்கு அதிகமான ஆடைகளை உற்பத்தி செய்கிறது. இலங்கையிலுள்ள தனது துணை நிறுவனங்களுடன் Omega Line, மொத்தமாக 450 மில்லியனுக்கு அதிகமான அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது. வருடாந்த ஏற்றுமதி பெறுமதி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமானதாக அமைந்துள்ளது. வருடாந்த ஏற்றுமதிகள் 200 மில்லியன் அலகுகளுக்கு அப்பாற்பட்டதாக அமைந்துள்ளது. 

மக்கள் விருத்தியில் அதன் முதலீடுகளில் தொழில்னுட்ப பயிற்சி, மென் திறன் மேம்படுத்தல், தலைமைத்துவம் மற்றும் அணியினரை கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் முறையாக கட்டமைக்கப்பட்ட செயற்திறன் மதிப்பாய்வுகள் மற்றும் உள்ளக பதவிநிலை உயர்வு வாய்ப்புகள் போன்றன அடங்கியுள்ளன. நிறுவனத்தின் மூலோபாயத்தில் ஊழியர் நலன்புரிச் செயற்பாடுகள் என்பது முக்கிய அங்கமாக அமைந்திருப்பதுடன், இலவச மருத்துவ பராமரிப்பு, சிக்கனமான போக்குவரத்து வசதிகள், சலுகை விலையில் உணவு வேளைகள் மற்றும் ஜிம் வசதிகள் மற்றும் விளையாட்டுத் திடல்கள் போன்ற பொழுது போக்கு வசதிகள் ஊழியர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. பணி-வாழ்க்கை சமநிலையை ஊக்குவிப்பதுடன், பணியாளர்களில் பெருமளவான பகுதியினர் பெண்களாக அமைந்திருக்கும் நிலையில், பாலின வலுவூட்டல் போன்றவற்றையும் Omega Line பின்பற்றுகின்றது.

இந்த முயற்சிகளுக்கான கௌரவிப்பு தொடர்ச்சித் தன்மை வாய்ந்ததாக அமைந்துள்ளது. உற்பத்தி மற்றும் தயாரிப்பு பிரிவில் சிறந்த 15 பணியிடங்களில் ஒன்றாக Omega Line கௌரவிக்கப்பட்டுள்ளதுடன், சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற 20 ஆவது தொழில்வழங்குனர் வர்த்தகநாமமிடல் விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஆசியாவின் சிறந்த தொழில்வழங்குனர் வர்த்தக நாமத்துக்கான விருதும் வழங்கப்பட்டிருந்தது.


Share with your friend
Exit mobile version