OPPO அடுத்த தலைமுறை Under-Screen கெமரா தொழில்நுட்பத்தை வெளியிடுகிறது – இது முழுத்திரையில் மூழ்கும் அனுபவத்தை வழங்குகிறது

Share with your friend

உலகளாவிய முன்னணி ஸ்மார்ட் சாதன தரக்குறியீடான OPPO, ஸ்மார்ட்போன்களுக்கான அடுத்த தலைமுறை Under-Screen Camera (USC) (திரையின் கீழா கெமரா) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வன்பொருள் புத்தாக்கம் மற்றும் OPPO இன் தனியுரிம AI algorithms ஆகிய சிறந்த அம்சங்களை இணைத்து, புதிய திரையின் கீழான கெமரா தீர்வை வழங்குகின்றது. இது ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவின் கீழ் முன்பக்க கெமராவை முழுத் திரையை பயன்படுத்தும்போதும் standby நிலையின்போதும் அதன் ஒருமைப்பாட்டையும் நிலைத்தன்மையையும் பேணியவாறு அமைக்கப்பட்டுள்ளது. நிலையான திரையின் தரம் மற்றும் கெமரா படத் தரம் ஆகியவற்றுக்கு இடையேயான சரியான சமநிலையை வழங்குவதன் மூலம், எந்தவொரு சமரசமும் இல்லாத திரையின் கீழான கெமரா தீர்வு இதில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய திரையின் கீழான கெமரா தீர்வானது, அதன் வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்திலிருந்தான, அதன் தொழில்நுட்பத்தை பாதிக்கும் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் உற்பத்தி தொடர்பான சவால்களை தீர்த்துள்ளது. அதன் முன்னேற்றங்களின்போது, திரையின் கீழ் கெமராவுக்கு மேலே காணப்படும் திரையானது, பகுதியளவில் சீரற்ற காட்சி வெளிப்பாடு, திரையில் கெமராவின் இடையூறால் ஏற்படும் மோசமான புகைப்படத் தரம் மற்றும் தயாரிப்பின் நம்பகத்தன்மை மற்றும் ஆயுள் போன்ற சிக்கல்களைத் தீர்ப்பது போன்றன அடங்குகின்றன. இவ்விடயங்களிலான பின்னர் ஏற்பட்ட மேம்பாடுகளுக்கு நன்றி செலுத்தியவாறு, மேம்படுத்தப்பட்ட திரையின் கீழான கெமரா தீர்வை வழங்க OPPOவினால் முடிந்தது. இது ஒரு முடிவிலிருந்து மறு முடிவு வரை, முழுத்திரை அனுபவத்தை புதிய நிலைகளுக்கு எடுத்துச் செல்கிறது.

இத்திரையில், அடுத்த தலைமுறை திரையின்-கீழான கெமரா தீர்வு, வடிவமைப்பு மற்றும் AI agorithms ஆகிய வழிமுறைகளில் OPPO பல புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துகிறது. புத்தாக்க பிக்சல் வடிவியல் (pixel geometry) ஆனது, கெமரா பகுதியில் கூட 400-PPI உயர் தெளிவுக் காட்சியை உறுதி செய்வதற்காக, பிக்சல்களின் எண்ணிக்கையை குறைக்காமல் ஒவ்வொரு பிக்சலின் அளவையும் குறைக்கிறது. வெளிப்படையான வயரிங் (Transparent wiring) மற்றும் புதிய வடிவமைப்பு மூலம் OPPO ஆனது, பாரம்பரிய திரை வயரிங் இலிருந்து வேறுபட்ட ஒரு புதுமையான வெளிப்படையான வயரிங் மூலம், சிறந்த காட்சி தரத்துடன் மிருதுவான காட்சி அனுபவத்தையும் வழங்குகின்றது.

இலத்திரனியல் புத்தகங்களை வாசித்தல், செய்திகளில் வலம் வருதல் அல்லது உலக வரைபடங்களை அணுகுவது போன்ற பயன்பாடுகளுக்கு, OPPO வின் அடுத்த தலைமுறை திரையின் கீழான கெமரா தொழில்நுட்பமானது, சிறிய எழுத்துருக்களின் துல்லியமான காட்சி, சிறந்த பாதுகாப்பு மற்றும் வடிவங்களின் விபரங்கள் மற்றும் வண்ணங்களின் பிரதிபலிப்பை வழங்கி மிக ஆழமான அனுபவத்தை வழங்குகின்றது.

பல்லாயிரக்கணக்கான படங்களை பயன்படுத்தி, ஒளியை வழங்கும் மூலத்தில் உள்ள வேறுபாட்டால் ஏற்படும் சிக்கல்களைக் கட்டுப்படுத்தும் பயிற்சியை, OPPO அதன் AI விலகல் குறைப்பு மாதிரிக்கு (AI diffraction reduction model) வழங்கியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தெளிவானதும், இயற்கையான தோற்றமுடைய படங்களை எடுக்க அனுமதிக்கிறது.

பாரிய திரைக்கு – உடல் விகிதம் மற்றும் புதிய ஸ்மார்ட்போன் வடிவ காரணிகளுக்கான நுகர்வோரின் கேள்வி அதிகரித்துள்ளதால், OPPO இத்துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அதிக முதலீடு செய்துள்ளது. OPPO 2018 ஆம் ஆண்டில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைத் ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை மூன்று தலைமுறை திரையின் கீழான கெமரா தீர்வுகளை வெளியிட்டுள்ளது. இந்த செயல்பாட்டில் 200 இற்கும் மேற்பட்ட காப்புரிமைகளுக்கு அது விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 2020ஆம் ஆண்டில், OPPO ஆனது தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு மேலும் பங்களிப்புகளை வழங்கியதுடன், சர்வதேச இலத்திரனியல் தொழில்நுட்ப ஆணைக்குழுவுக்கு (Electrotechnical Commission – IEC) திரையின் கீழ் கெமரா தொழில்நுட்பத்திற்கான அதன் முதலாவது முன்மொழியப்பட்ட தரத்தை சமர்ப்பித்தது. இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்தில் காட்சி பரிமாற்றம், பிரதிபலிப்பு, சீரான தன்மை, காமா திருத்தம், வண்ண மாற்றம் மற்றும் பிரகாசம் சிதைவு (display transmittance, reflectance, uniformity, Gamma correction, color shift, brightness decay) உள்ளிட்ட 7 முக்கிய தொழில்நுட்ப அளவீடுகளுக்கான பரிந்துரைகள் இணைக்கப்பட்டுள்ளன.

OPPO அதன் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை வன்பொருள் வடிவமைப்பு மற்றும் (algorithmic processing) (அல்காரிதமிக் செயலாக்க திறன்களை) அதன் திரையின் கீழான கெமரா தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்தி, உலகெங்கிலும் உள்ள பயனர்களுக்கு மிகவும் ஆழமான, உண்மையான முழுத்திரையின் கீழான கெமரா அமைப்பை கொண்டு வருவதற்கான இறுதி இலக்கை நோக்கி தனது பயணத்தை தொடரும்.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply