Eyeview Sri Lanka

OPPO அதன் முதன்மையான Find x5 தொடரை வெளியிட்டுள்ளது

Share with your friend

மொபைல் சாதனங்கள் மற்றும் அதன் துணைக்கருவிகளின் முன்னணி உற்பத்தியாளரான OPPO, அதன் ஸ்மார்ட்போன் புத்தாக்க கண்டுபிடிப்பு மற்றும் ப்ரீமியம் வடிவமைப்பில் மற்றுமொரு படி முன்னோக்கிச் செல்லும் வகையில் அதன் முதன்மையான Find X5 தொடரை வெளியிட்டுள்ளது. Find x5 தொடரானது, இத்தொழில்துறையின் முதன்முதலான புகைப்படவியல் அனுபவங்களுடன் நேர்த்தியான, நவீன நுட்பத்துடன் இணைந்த எதிர்காலத்திற்கான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

பிரத்தியேக புகைப்படவியல் நரம்பியல் அமைப்பாக கருதப்படும் Neural Processing Unit அம்சமும் இதில் உள்ளடங்குகின்றது. இது ஸ்மார்ட்போனில் வீடியோக்களை எடுப்பதிலுள்ள மிகப்பெரிய சவாலான இரவு நேர வீடியோ பதிவை இலகுவாக்குகிறது. அத்துடன் ஒப்பிடமுடியாத முதன்மையான இரட்டை IMX766 கெமரா தொகுதி, நிகரற்ற செயல்திறன், அதிவேக 5G இணைப்பு மற்றும் நம்பமுடியாத SUPERVOOC Flash Charging தொழில்நுட்பங்களை இது கொண்டுள்ளது.

OPPO உலகளாவிய சந்தைப்படுத்தல் தலைவர் William Liu இது தொடர்பில் தெரிவிக்கையில், “Find X5 Series ஆனது Find X தொடரை முற்றிலும் புதிய அழகான நிலைக்கு கொண்டு செல்கிறது. அழகியல் மற்றும் செயற்றிறன்களின் அடிப்படையில், வடிவமைப்பு, புகைப்படவியல், மின்கல தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் கையடக்கத் தொலைபேசி அனுபவத்தை புதிய எல்லைக்கு கொண்டு செல்கிறது”  என்றார்.

இரவு நேர வீடியோவை எடுப்பதானது, ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு பெரிய சவாலாகக் காணப்படுகின்றது. இதன் காரணமாக, இரவு நேர எண்ணற்ற அழகிய தருணங்கள், கைப்பற்றப்படாமல் அல்லது குறைந்த தரத்தில் சேமிக்கப்படுகின்றன. அதனாலேயே OPPO இரவு நேரத்தில் அனைத்து விபரங்களையும் பெறும் வகையிலான பிரத்தியேக புகைப்படவியலுக்காக imaging NPU, MariSilicon X இனை வடிவமைத்துள்ளது. MariSilicon X ஆனது, இன்றைய காலகட்டத்தில் கிடைக்கக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த AI கணனியியல் சக்தியை வழங்குவதோடு மட்டுமல்லாது, OPPO ஆராய்ச்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட AI noise reduction (AINR) செயலாக்கத்தையும் (algorithm) அதில் இயக்குகிறது.

இதன் விளைவாக, உண்மையான இரவு நேர வீடியோ ஆனது, தெளிவுத்திறனில் 4 மடங்கு முன்னேற்றத்தையும், குறைந்தளவான காட்சி துல்லியத்தன்மை இழப்பு மற்றும் சிறந்த வண்ண மீளுருவாக்கத்துடன், அன்ட்ரொய்ட் ஸ்மார்ட்போனில் 4K அல்ட்ரா நைட் வீடியோவை எடுப்பதற்கான சாத்தியத்தை முதன்முறையாக உருவாக்குகிறது. ஒவ்வொரு பிரேமும் புகைப்படத்தைப் போல மிக துல்லியமாக இருக்கும்.

wide மற்றும் ultra-wide கெமராக்கள் மூலம் சிறந்த 4K Ultra Night Video காட்சியை பதிவு செய்யலாம் என்பதனால், Find X5 Series ஆனது தொழில்துறையில் உள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ஆகிய இரண்டிலும் மிகச் சிறந்த wide மற்றும் ultra-wide புகைப்படவியல் தரத்தைக் கொண்டுள்ளது எனக் கூற முடியும்.

Find X5 Pro வின் முன்பக்கக் கெமராவிற்கான IMX709  சென்சரைத் தனிப்பயனாக்க Sony உடன் இணைந்து பணியாற்றி வரும் OPPO, சவாலான ஒளி நிலைமைகளிலும் கூட, முன்னெப்போதையும் விட செல்பிகள் சிறப்பாகத் தோற்றமளிக்கும் வகையில் MariSilicon X யினை ஒருங்கிணைத்துள்ளது. அத்துடன் மேலும் பல நண்பர்கள் புகைப்படத்திற்காக இணையும்போது, ​​செல்பி கெமரா தானாகவே 80 இலிருந்து 90 பாகை கோண வைட்-ஆங்கிளுக்கு மாறுவதன் மூலம், புகைப்படதில் அனைவரும் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.

Find X5 Pro ஆனது, 6.7 அங்குல ultra-clear வளைந்த AMOLED திரையைக் கொண்டுள்ளது. இது மிதமான வளைவுகள் மற்றும் ஊடறுக்கும் கோடுகளை அதன் மிருதுவான, அழகிய பின்புறத்திலும் அதனைத் தொடர்ந்து முன்புறம் வரை காட்சிப்படுத்துகிறது. WQHD+ தெளிவுத்திறன் மற்றும் 100% P3 வண்ண எல்லைகளுடன், Find X5 Pro வின் 10-bit திரையானது, 1 பில்லியனுக்கும் அதிகமான வண்ணங்களை வெளிப்படுத்தி, மென்மையான நிறங்கள் மற்றும் வண்ண மாற்றங்களை உருவாக்குகிறது. அதன் மூலம் நிறங்களில் மிகவும் நுட்பமான மாற்றங்களின் முழு ஆழத்தையும் எல்லை வரை காண்பிக்கிறது.

குறிப்பிட்ட வகையான ஒளியின் அதிகளவான வெளிப்பாடானது தூக்கத்தை பாதிப்பதுடன் கண்ணில் அழுத்தத்தையும் ஏற்படுத்தலாம். எனவே 8192-மட்ட திரை மங்கலாக்கத்தை Find X5 Pro வில் OPPO அறிமுகப்படுத்தியுள்ளது. இது வெவ்வேறு ஒளி நிலைகளில் கருவிழி சுருங்கி விரிவதற்கு ஏற்றாற் போல், அதன் வேகத்துடன் பொருத்தமாக இயங்குகிறது.

புதிய தலைமுறை, multicore Snapdragon 8 Gen 1 processor மூலம் Find X5 Pro இயக்கப்படுவதுடன், மிக பிரபலமான கேம்கள் மற்றும் செயலிகளைக் கூட கையாளும் வகையிலான ஆற்றலைக் கொண்டுள்ளது. ஒரு சிறிய, 4nm வகை உற்பத்திச் செயன்முறையின் அடிப்படையில், Qualcomm இன் ஒருங்கிணைந்த 2022 முதன்மையான GPU ஆனது, மேம்பட்ட AI திறன்களுடன் முந்தைய தலைமுறையை விட 30% அதிக செயல்திறன் மற்றும் 25% அதிக ஆற்றல் திறனை வழங்குகிறது.

அதன் உச்ச தரத்திலான சக்திக்கு மேலதிகமாக, Find X5 Pro ஆனது அடுத்த கட்ட மின்சக்தி முகாமைத்துவத்தை பேணியவாறு, மின்கல ஆயுளை அதிகரிப்பதற்கான முயற்சிகளை OPPO இரட்டிப்பாக்கியுள்ளது. பாரிய 5,000mAh இரட்டை கல மின்கல கொள்ளவானது Find X3 Pro வை விட 11% இற்கும் அதிக திறன் அதிகரிப்பை வெளிப்படுத்துகிறது.

மேம்படுத்தப்பட்ட 80W SUPERVOOC Flash-charging  தொழில்நுட்பத்தின் உதவியுடன், Find X5 Pro வில், கிட்டத்தட்ட முற்றாக நிறைவடைந்த மின்கலத்தை  12 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்யலாம், மேலும் 50W AIRVOOC உடன், இது 47 நிமிடங்களில் 100% வரை வயர்லெஸ் முறையில் சார்ஜ் ஆகின்றது.

OPPO வின் மனித தேவைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட பயனர் இடைமுகமான ColorOS 12.1 ஆனது அதன் மிக அழகான, உள்ளுணர்வு மற்றும் தனிப்பட்ட அனுபவத்தை வழங்குகின்றது.


Share with your friend
Exit mobile version