OPPO விற்கு 17 வயது : உலகளாவிய ஸ்மார்ட்போன் தரக்குறியீட்டின் பல ஆண்டு பயண பிரதிபலிக்கிறது

Share with your friend

ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் சாதனங்களின் உலகளாவிய முன்னணி உற்பத்தியாளரான OPPO, தனது 17ஆவது ஆண்டு நிறைவை செப்டெம்பர் 17 ஆம் திகதி கொண்டாடியது. கடந்த தசாப்தத்தில், OPPO ஆனது ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர் எனும் நிலையிலிருந்து, பல்வேறு பங்களிப்புகளை மேற்கொண்டுள்ளதன் மூலம் புத்தாக்கம் மற்றும் ஸ்மார்ட் சாதனத் துறைக்கு முதன் முதலான பல்வேறு விடயங்களை அறிமுகப்படுத்தி, ஸ்மார்ட் சாதன துறையில் பல படிகள் முன்னேற்றமடைந்துள்ளது. தனது பங்குதாரர்கள் மற்றும் பயனர்களுக்கு உயர் தரமானதும், அழகியல் ரீதியாக வடிவமைக்கப்பட்டதுமான தொழில்நுட்ப தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதன் மூலம் நிறுவனம் அதன் உலகளாவிய தடத்தை மேலும் விரிவாக்கம் செய்து வருகின்றது.

இந்த மைல்கல் பற்றி, OPPO ஸ்ரீலங்காவின் பிரதான நிறைவேற்று அதிகாரி பொப் லி தெரிவிக்கையில், “OPPO ஆனது அதன் 17 வருட வணிக நடவடிக்கைகளை பூர்த்தி செய்துள்ள இச்சந்தர்ப்பத்தில், இலங்கை வாடிக்கையாளர்கள், அதன் இரசிகர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் ‘நன்றி’ தெரிவிக்க விரும்புகிறேன். உங்கள் ஆர்வமே எமது புத்தாக்கத்திற்கான ஆர்வத்தைத் தூண்டியது. தரத்தில் எவ்வித குறையுமின்றி, கட்டுப்படியாகும் விலையில் உலகளாவிய தொழில்நுட்பத்தை இலங்கையிலுள்ள நீங்கள் தொடர்ந்தும் அணுகுவதை உறுதி செய்வதே எமது குறிக்கோளாகும்.” என்றார்.

OPPO ஸ்மார்ட்போன்கள் மற்றும் சாதனங்களின் கவரக்கூடிய சலுகைகள் மூலம் பல்வேறு நன்மைகளை வழங்கும் வகையில் 50 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில், கடந்த பல ஆண்டுகளில் அது விரிவாக்கமடைந்துள்ளது. அந்த வகையில் இவ்வருடத்தில் OPPO 5G, imaging மற்றும் VOOC Flash Charging ஆகிய முன்னணி தொழில்நுட்பங்களில் முன்னணி தொழில்நுட்ப முன்னேற்றங்களை அறிமுகப்படுத்தியிருந்தது. இவ்வருடம் ஷங்காயில் இடம்பெற்ற 2021 Mobile World Congress in Shanghai (MWCS) (உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில்) flash charging கூட்டாளர் மாநாட்டை OPPO நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2021 ஆனது, OPPO வின் Flash முன்முயற்சியினை, வாகனம் (FAW-Volkswagen), portable chargers (Anker), மற்றும் chip உற்பத்தி (NXP Semiconductors) போன்ற அந்தந்த துறையின் முன்னணியிலுள்ள புத்தாக்க கண்டுபிடிப்பார்களுடன் இணைந்து, பல்வேறு கண்டுபிடிப்புகளை கொண்டு வந்தது. குறித்த ஒவ்வொரு நிறுவனத்திற்கும் OPPO வின் காப்புரிமை பெற்ற வடிவமைப்புகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

OPPO தனது புதிதாக உருவாக்கப்பட்ட AR மென்பொருளான CybeReal ஐ அறிமுகப்படுத்தியிருந்தது. இது OPPO முழுநேர இடம்சார்ந்த கணனிமயமாக்கல் மூலம், Augmented Reality (AR) நிலையை அடுத்த நிலைக்கு மேம்படுத்துகிறது. அத்துடன் இவ்வாண்டில் OPPO Future Imaging Technology Launch Event (2021 OPPO எதிர்கால புகைப்பட தொழில்நுட்ப வெளியீடு) நிகழ்வையும் OPPO நடாத்தியிருந்தது. இதன்போது ஸ்மார்ட்போன் புகைப்பட தொழில்நுட்பத்தில் பல்வேறு முன்னேற்றகரமான Sensors, Modules, Algorithms போன்றவற்றை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

2021 இல், OPPO உலகின் முதலாவது 5G SA-Compatible eSIM (5G SA ஒருங்கிசையும் eSIM) இனை அறிமுகப்படுத்தியிருந்தது. இது பயனர்களுக்கு 5G SA வலைமைப்புகளால் வழங்கப்படும் மேம்பட்ட 5G அனுபவத்தை பெற வழி வகுப்பதுடன், பயனர்களுக்கும் தொலைபேசி வலையமைப்புக்கும் eSIM தொழில்நுட்பத்தின் நன்மைகளை வழங்கும்.

ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்திற்கு அது வழங்கியுள்ள பல்வேறு பங்களிப்புகளைத் தவிர, எதிர்கால கலைஞர்களை மேம்படுத்தும் வகையிலான “Renovators 2021” எனும் நிகழ்வை OPPO இவ்வருடம் நடாத்தியிருந்தது. 2021 Milan Design Festival (மிலான் வடிவமைப்பு விழா) விழாவிலும் OPPO பங்குபற்றியிருந்ததோடு, ‘Bamboo Ring – Weaving a Symphony of Lightness & Form’ (இலகுரக வடிவத்துடன் சிம்பனி அலையை உருவாக்கும்) ‘மூங்கில் வளையத்தை அதில் காட்சிப்படுத்தியிருந்தது.

OPPO ஶ்ரீ லங்கா, இலங்கைப் பாடகர்களான உமாரியா சின்ஹவன்ச மற்றும் அனுஷ்கா உதான லியனகே ஆகிய இரண்டு உள்நாட்டு கலைஞர்களுடன் இணைந்து, இலங்கையின் முதலாவது முழுமையான மாய நிகர் (fully virtual) இசை நிகழ்வை நடாத்தியிருந்தது. இதன் மூலம் கொவிட் தொற்றுநோய் பரவலுக்கு மத்தியிலான ஊரடங்கு காலத்தில் அதன் இரசிகர்களை அது மகிழ்வித்தது. அனைவரையும் உற்சாகப்படுத்தவும், மக்களை அவர்கள் தங்களது வீடுகளுக்குள் இருப்பதை ஊக்குவிக்கும் பொருட்டும் நடாத்தப்பட்ட இந்நிகழ்வு வெற்றிகரமாக அமைந்திருந்தது. தற்போதைய சூழ்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு உரிய வசதியை வழங்குவதை உறுதி செய்யும் வகையில், OPPO பல அற்புதமான தயாரிப்புகளை, விற்பனைக்கு பின்னரான பராமரிப்பு சேவைகளுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply