Site icon Eyeview Sri Lanka

OPPO 2021 இலும் தனது வெற்றிப் பாதையை தொடர்கிறது

Share with your friend

கடந்து வந்த 2021ஆம் ஆண்டு ஒரு சவாலான ஆண்டாக இருந்தபோதிலும், திறன் மற்றும் புத்தாக்கத்துடன் முன்னோக்கிச் செல்வதற்கு அந்த வருடத்தில் பல வாய்ப்புகள் ஏற்பட்டதாக, முன்னணி கையடக்கத் தொலைபேசி மற்றும் உபகரணங்கள் உற்பத்தி தரக்குறியீடான OPPO தனது சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2021 ஆனது, OPPO வின் வணிகத்தில் 17ஆவது ஆண்டைக் குறிக்கின்றது. குறிப்பாக ஒரு கையடக்கத் தொலைபேசித் தயாரிப்பாளராக இருந்து, கடந்த பத்து ஆண்டுகளில் தொழில்துறையில் ஒரு முன்னோடியாக அதன் பயணத்தை பிரதிபலிக்கிறது.

2021 ஆம் ஆண்டில், OPPO அதன் முதன்மையான Find X3 Pro ஸ்மார்ட்போனுக்காக ‘EISA BEST PRODUCT ADVANCED SMARTPHONE 2021-2022’ எனும் மதிப்பைப் பெற்றது. இது தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, அதன் சிறப்பான அர்ப்பணிப்புக்கு சான்றாக விளங்குகின்றது. முன்னணி வீட்டுப் பாவனை மற்றும் இலத்திரனியல் உபகரண விற்பனையாளரான Abans PLC உடனான கூட்டாண்மையின் 5ஆவது ஆண்டு நிறைவை இலங்கையில் OPPO கொண்டாடியதுடன், அதன் கூட்டாண்மை தொடர்பான மேலும் மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தைப் புதுப்பித்துள்ளது.

கடந்த வருட பயணம் குறித்து கருத்துத் தெரிவித்த XINDA Lanka (OPPO Sri Lanka) வின் பிரதான நிறைவேற்று அதிகாரி Bob Li, “எமது உள்ளூர் வாடிக்கையாளர்களிடமிருந்து அதிகரித்து வரும் ஆதரவு மற்றும் விசுவாசத்திற்காக நாம் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். 2022ஆம் ஆண்டில் தொழில்நுட்பத்தை மலிவு விலையிலும் மற்றும் அனைவரும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கான எமது நோக்கிற்கு அமைய, உங்களுக்கு மேலும் சிறந்ததை வழங்க நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

புதிய ஆண்டின் தொடக்கத்தில் ஒரு புதிய அற்புதமான தயாரிப்பை அறிமுகப்படுத்துவதைப் பற்றி Bob Li ஒரு சிறிய துப்பை வழங்கினார். அதாவது, அறிமுகமாகவுள்ள அதன் இணையற்ற திறன்களைக் கொண்டு உள்ளூர் சந்தையில் அது சிறந்த வரவேற்பைப் பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

OPPO 2021 ஆம் ஆண்டில் பல சுவாரஸ்யமான புத்தாக்க கண்டுபிடிப்புகளை வெளியிட்டது. குறிப்பாக நிகழ்நேர இடம்சார்ந்த கம்ப்யூட்டிங் AR மென்பொருளான CybeReal, அடுத்த தலைமுறை திரைக்கு அடியிலான கெமரா தொழில்நுட்பம் (Under Screen Camera – USC), அன்ட்ரொய்ட் 12 இல் இயங்கும் முதல் OEM களில் ஒன்றான ColorOS12 இயங்குதளம், self-designed Imaging NPU MariSilicon X, OPPO-வினால் தனியாக மேம்படுத்தப்பட்ட Spark Micro Projector மற்றும் bespoke diffraction optical waveguide display திரை ஆகியவற்றைக் கொண்ட OPPO Air Glass ஆகியவற்றை இதில் குறிப்பிடலாம்.

உலகளவிய ரீதியில், OPPO தனது மடிக்கக்கூடிய முதலாவது முதன்மையான ஸ்மார்ட்போனான OPPO Find N இனை, நான்கு வருட விரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குப் பின்னர் கடந்த வருடம் அறிமுகப்படுத்தியிருந்தது. நேர்த்தியான வெளித் தோற்றம் மற்றும் பயனருக்கு உகந்த அனுபவம் ஆகிய அம்சங்களுடன் இலங்கையில் F19 Proவை OPPO வெளியிட்டது. இணையற்ற கேட்டல் அனுபவத்தைக் கொண்ட OPPO Air True Wireless Earphones, ஸ்டைலுடனான செயல்பாடுகளை விரும்புவோருக்காக புதிய OPPO A16 ஆகியனவும் அறிமுகமானது.

இவ்வருடத்தில் OPPO வின் ஏனைய குறிப்பிடத்தக்க சாதனைகளாக, Parisian Grand Slam Roland-Garros உடன் பங்குதாரராக இணைந்த முதல் ஸ்மார்ட்போன் தரக்குறியீடு எனும் பெயரை தனதாக்கியமை, தொழில்நுட்பத்தின் மூலம் கலை மற்றும் கலாசாரத்தை மேம்படுத்த OPPO Renovators 2021 இனை நடாத்தியமை, பிரபல கட்டடக் கலைஞரான Kengo Kuma உடன் இணைந்து, மிலன் பேஷன் வாரத்தின் போது மிலனின் Cortile dei Bagni முற்றத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ‘Bamboo Ring’ (Weaving a Symphony of Lightness & Form) இனை உருவாக்கியமை ஆகியன அடங்குகின்றன. அத்துடன் Riot Games உடன் கூட்டு சேர்ந்து League of Legends உலக சம்பியன்ஷிப் 2021 இற்கு அனுசரணை வழங்கியமை, 2021 ஆம் ஆண்டு ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்தின் பிரதான அனுசரணையை வழங்கியமை. OPOP ஐசிசியின் உலகளாவிய கூட்டாளர்களில் ஒன்றாகும் என்பதுடன், 2016 முதல் பல சம்பியன்ஷிப்கள் மற்றும் போட்டித் தொடர்களுக்கு அது அனுசரணை வழங்கியுள்ளது.


Share with your friend
Exit mobile version