Site icon Eyeview Sri Lanka

OPPO Future Imaging Technology 2021 பல்வேறு தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் வெளியீடு

Share with your friend

உலகின் முன்னணி ஸ்மார்ட் சாதன தரக்குறியீடுகளில் ஒன்றான OPPO, அதன் சமீபத்திய கண்டுபிடிப்புகளை வெளியிடும் நிகழ்வான, 2021 OPPO Future Imaging Technology நிகழ்வு அண்மையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. புகைப்பட தொழில்நுட்பங்கள் தொடர்பான Sensors, Modules, Algorithms போன்ற பல மேம்பட்ட அம்சங்கள் இதில் வெளியிடப்பட்டன. RGBW sensor, 85-200mm Continuous Optical Zoom, Five-axis OIS தொழில்நுட்பம் மற்றும் OPPO வின் மேம்பட்ட AI algorithms களின் கலவையுடன் சமீபத்திய திரையின் கீழான கெமரா (under-screen camera) தொழில்நுட்பம் உட்பட பல்வேறு புகைப்பட தொழில்நுட்பங்கள் தொடர்பான விடயங்கள் இதில் அறிமுகப்படுத்தப்பட்டன.

OPPO தனது உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திறன்களை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் தொடர்ந்தும் தனது கவனத்தை செலுத்தி வருகின்றது. OPPO தற்போது இந்தியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் ஆறு ஆராய்ச்சி நிறுவனங்களையும் ஐந்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (R&D) மையங்களையும் கொண்டுள்ளது. எதிர்காலத்தில், OPPO தனது வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல புதுமைகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும், தொழில்துறையில் உள்ள பல்வேறு பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பதன் மூலமும் சிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த புதிய RGBW சென்சரானது, உயர்தர உற்பத்தி மற்றும் செயலாக்க தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. OPPO இன் 4-in-1 pixel algorithm மூலம், சென்சரின் வண்ண வெளிப்பாடு மிகக் குறிப்பிடும் அளவில் அதிகரித்துள்ளது. அத்துடன், தொழிற்துறையில் முன்னோடியான, DTI pixel isolation தொழில்நுட்பம் sub-pixel crosstalk இனை குறைப்பதன் மூலம் புகைப்படங்களின் தரத்தை மேம்படுத்துகிறது. மேலும் பல திறன்களைக் கொண்ட இந்த சென்சர் 2021 ஆம் ஆண்டின் 4ஆவது காலாண்டில் இருந்து OPPO தயாரிப்புகளில் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப்படவுள்ளது.

OPPO 85-200mm Continuous Optical Zoom (தொடர்ச்சியான வில்லை மூலமான உருப்பெருக்க) தொழில்நுட்பம் சிறந்த உருப்பெருக்கும் திறனை வழங்கும் அதே நேரத்தில், OPPO Five-axis OIS ஆனது தெளிவான புகைப்படங்களை வழங்க உதவுகிறது. வன்பொருள் மட்டத்தில் அடிப்படைத் தொகுதி மேம்படுத்தப்பட்டு, இப்புதிய 85-200mm Continuous Optical Zoom தொகுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மற்றுமொரு புத்தாக்க கண்டுபிடிப்பு, Five-axis OIS ஆகும். இது இயக்கத் தரவை கைரோஸ்கோப்பில் இருந்து கணினி புரொசசருக்கு அனுப்புவதோடு, அதை பகுப்பாய்வு செய்து algorithms ஊடாக உரிய உப பிரிவுகளாக பிரிக்கிறது. இத்தரவு பின்னர் லென்ஸ் மற்றும் பட சென்சருக்கு அனுப்பப்படும். இவை முறையே ball-bearing மோட்டார்கள் மற்றும் shape memory alloys மூலம் இயக்கப்படுகின்றன. OPPO Five-axis OIS தொழில்நுட்பமானது, வணிக ரீதியாக 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலிருந்து பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

OPPO உருவாக்கியுள்ள சமீபத்திய algorithms ஆனவை, திரையின் கீழான கெமரா தொழில்நுட்பத்தில் காட்சித் திரை மற்றும் கெமரா தரத்தை சமநிலைப்படுத்த உதவுகின்றன. எதிர்கால ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படும் திரையின் கீழான கெமரா தொழில்நுட்பத்தை OPPO இதன்போது அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வெளிப்படையாக தெரியும் கேபிள்களுடன் பூரணமாக்கப்பட்ட வகையில் வரும் இது, கண்களைக் கவரும் காட்சி அனுபவத்தை வழங்குகிறது.

இவை தவிர, diffraction reduction, anti-condensation, HDR, AWB தொடர்பான AI algorithms தொகுப்பையும் OPPO அறிமுகப்படுத்தியது. இவை அனைத்தும் under-screen camera தொழில்நுட்பத்தை மேம்படுத்த உதவுகிறது. பல்லாயிரக்கணக்கான புகைப்படங்களை முன்னோடியாக பயன்படுத்தி, தயாரிக்கப்பட்டுள்ள OPPO AI diffraction reduction மாதிரியானது, தெளிவான மற்றும் இயற்கையான படங்களை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

OPPO Sri Lanka பற்றி

முன்னணி ஸ்மார்ட்போன் நாமமான OPPO, அதன் முதலாவது ஸ்மார்ட் போனை 2008 இல் அறிமுகப்படுத்தியதில் இருந்து, அழகியல் திருப்தி மற்றும் புதுமையான தொழில்நுட்பம் ஆகியவற்றை இணைத்து இடைவிடாமல் தொடர்ந்து வருகிறது. இன்று, OPPO தனது வாடிக்கையாளர்களுக்கு Find மற்றும் Reno தொடர்களின் கீழான பரந்த அளவிலான ஸ்மார்ட் சாதனங்களை வழங்குகிறது, ColorOS இயங்குதளம், அதே போன்று OPPO Cloud மற்றும் OPPO + போன்ற இணைய சேவைகள். OPPO, 40 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் இயங்குகிறது. உலகளாவிய ரீதியில் 6 ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 5 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் அத்துடன் லண்டனில் ஒரு சர்வதேச வடிவமைப்பு மையத்தையும் கொண்டுள்ளது. OPPO இன் 40,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாழ்வியலை உருவாக்க அர்ப்பணித்துள்ளனர். 

2015 இல், இலங்கையில் செல்பி மையப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியதிலிருந்து, புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் நுண்ணறிவு மென்பொருள்களுக்காக, OPPO அதன் எல்லைகளை விரிவுபடுத்துவதோடு, அதன் முதன்மை ‘F’ தொடர் மற்றும் பிரபலமான Reno தொடர் மூலம் பல மொடல்கள் மூலம், பரந்துபட்ட நுகர்வோர் அபிலாஷைகளை பூர்த்தி செய்கிறது. OPPO Sri Lanka ஆனது, அபான்ஸ், சிங்ககிரி, டயலொக், டாராஸ் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட OPPO விற்பனையாளர்களுடன் வலுவான கூட்டிணைப்பைக் கொண்டுள்ளதுடன், அவை OPPO நாடு முழுவதும் உள்ள இலங்கையர்களை சென்றடைய உதவுகின்றன.


Share with your friend
Exit mobile version