OPPO Renovators 2021: வளர்ந்து வரும் கலைஞர்களுக்கான திட்டம்அறிமுகம்

Share with your friend

உலகளாவிய இளளஞர்களின் ஆக்கபூர்வமான கனவுகளுக்கான தளம்

உலகளாவிய முன்னணி ஸ்மார்ட் சாதன தரக்குறியீடான OPPO வளர்ந்து வரும் கலைஞர்கள் தொடர்பான அதன் திட்டத்தின் 3ஆவது மறு திட்டமான OPPO Renovators 2021 (புதுப்பிப்பாளர்கள்) திட்டத்தினை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. OPPO Renovators 2021 ஆனது உலகெங்கிலும் உள்ள கலை மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கான போட்டியாக மட்டுமல்லாமல், இளம் படைப்பாளிகளுக்கு கலை மற்றும் தொழில்நுட்பத்துடன் எதிர்காலம் தொடர்பில் தைரியமாக கற்பனை செய்வதற்கான ஒரு தளமாகவும் செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Renovators திட்டமானது, உலகளவில் இடம்பெறுவதால், செயலாக்கத்தில் ஈடுபடும் சமூகமொன்று OPPO வினால் உருவாக்கப்படுதோடு, வளர்ந்து வரும் கலைஞர்கள் புகழ்பெற்ற கலைஞர்களிடமிருந்து வழிகாட்டுதலையும் உத்வேகத்தையும் இதன் மூலம் பெறலாம். சர்வதேச தளங்களில் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்தலாம் என்பதுடன் வாழ்நாளில் ஒரு முறை கிடைக்கும் அரிய தொழில் வாய்ப்புகளையும் இதன் மூலம் அணுகலாம்.

OPPO Renovators 2021 ஆனது இளம் படைப்பாளர்கள் அவர்களின் படைப்பாற்றலை வெளிக்காட்டவும், கலை மூலம் தொழில்நுட்பத்தின் சாத்தியங்களை கற்பனை செய்யவும் ஊக்குவிக்கிறது. இத்திட்டத்தின் வர்த்தகநாம ஆரம்பிப்பாளரும், OPPO வின் பிரதித் தலைவரும், உலகளாவிய சந்தைப்படுத்தல் தலைவருமான William Liu தெரிவிக்கையில், “OPPO எப்போதும் இளம் தலைமுறையின் சக்தியை நம்புவதுடன், அவர்களது படைப்பாற்றல் இளம் கலைஞர்களின் புத்திசாலித்தனத்தை உலகம் காண வேண்டுமென்றும் விரும்புகிறது. அதற்கடுத்த படியாக உத்வேகம், இன்றைய இளைஞர்களிடமிருந்து உலகத்தை மாற்றும் ஆற்றல், ஆக்கபூர்வமான சிந்தனையைத் தூண்டுதல் போன்ற எம்மால் முடிந்த அனைத்தையும் இதன் மூலம் மேற்கொள்ள விரும்புகிறோம். ” என்றார்.

பல்வேறுமட்டன போட்டிகளுடன், இவ்வாண்டின் கருப்பொருளான ஒளியை ஆராய எல்லையற்ற வழிகள்

இவ்வருடத்தின் Renovators திட்டத்தின் கருப்பொருள் ‘ஒளி’ ஆகும். உலகின் சக்தி மூலமாகவும், பெரும்பாலான உயிரினங்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகவும், அன்பு மற்றும் நம்பிக்கை போன்ற நேர் கருத்தின் வெளிப்பாடுகளை அடையாளப்படுத்த ஒளி எப்போதும் பயன்படுத்தப்படுகிறது. ஒளியின் கதகதப்பு மற்றும் வெளிச்சத்துடன், OPPO அமைதியான மற்றும் நம்பிக்கையின் உணர்வை உருவாக்க எதிர்பார்க்கிறது, இளம் படைப்பாளர்களை கலையின் எல்லைகளை மீறி அவர்களின் படைப்பாற்றலுக்கு ஒளியேற்றுவதை ஊக்குவிக்கிறது.

ஒளியின் கருப்பொருளின் கீழ் இடம்பெறும், OPPO Renovators 2021 ஆனது, ART TECH (கலை தொழில்நுட்பம்) மற்றும் ART TOY (கலை விளையாடப்பொருள்) எனும் இரண்டு தொழில்துறை ரீதியான போட்டி வகைகளை உள்ளடக்கியுள்ளது.  அத்துடன் படைப்பாற்றல் கொண்டவர்களை இலக்காகக் கொண்ட, போர்ட்ரைட் புகைப்படப் பிடிப்பு (Portrait Capture) போட்டியும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ART TECH பிரிவில், இளம் கலைஞர்கள் தொழில்நுட்பம் மற்றும் கலையின் இணைவை எல்லையற்ற வகையில் ஆராயலாம் என்பதுடன் ART TOY பிரிவில், கலைஞர்கள் OPPO வின் சின்னமான, ஒல்லி (Ollie) இனை, பொழுதுபோக்காக சேகரிக்கக்கூடிய பொம்மை வடிவமைப்பாக தங்கள் சொந் கற்பனை திறனை காண்பிக்க அழைப்பு விடுக்கப்படுகிறார்கள். அத்துடன் Portrait Capture பிரிவில், புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் மூலம் தங்கள் சொந்த ஆற்றலை வெளிப்படுத்தி மனிதர்களின் கதைகளை சமர்ப்பிக்கலாம்.

நாளைய பிரகாசம் மிக்க கலைஞர்களுக்கான விருதுகள் மற்றும் உலகளாவிய அடைவுகள்

OPPO Renovators 2021 திட்டத்தில், OPPO வின் உலகளாவிய வளங்களின் மூலம் திறமையான கலைஞர்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அது தனது பங்களிப்பை வழங்கும். பல்வேறுபட்ட பரிசுகள் மற்றும் விருதுகளுக்கு மேலதிகமாக, OPPO Renovators 2021 வில், தேர்ந்தெடுக்கப்பட்ட கலைப்படைப்புகள் லண்டன் டிசைன் பெஸ்டிவல் (London Design Festival) மற்றும் துபாய் வேர்ல்ட் எக்ஸ்போ (Dubai World Expo) போன்ற உலகளாவிய கண்காட்சிகளில் அவற்றை காட்சிப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதுடன் உலகளாவிய ஒன்லைன் கண்காட்சிகளிலும் அது தொடர்ச்சியாக வெளிப்படுத்தப்படும். மேலும், OPPO Renovators 2021 இல் பங்கேற்கும் இளம் வடிவமைப்பாளர்கள், OPPO வின் ஒப்பந்த வடிவமைப்பாளர்களாக மாறுவதற்கான வாய்ப்ப்பையும் பெறுவார்கள். இதன் மூலம் அவர்களின் ஆக்கபூர்வமான யோசனைகள், மேலும் உணர்வளிக்கப்பட்டு வணிக வாய்ப்புகளை பெறும்.

போட்டியின் மற்றொரு சிறப்பம்சம் யாதெனில், OPPO Renovators 2021 ஆனது உலகின் தலைசிறந்த கலை மற்றும் வடிவமைப்பு நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்படும் ஒரு நிகழ்வு மட்டுமல்லாது, அதன் நடுவர்கள் குழாமானது, உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களின் ஆதரவையும் கொண்டுள்ளது. புகழ் பெற்ற சர்வதேச வடிவமைப்பாளர் காஷிவா சாட்டோ (Kashiwa Sato), Video Art நிறுவுனர்களில் ஒருவரான Gary Hill, ஓடியோவிஷுவல் கலைஞர் Ryoichi Kurokawa மற்றும் தரக்குறியீட்டு ஆலோசகர் Tommy Liஆகியோர் இக்குழுவில் அடங்குகின்றனர்.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் OPPO Renovators 2021 இல் பங்கேற்க, OPPO Renovators 2021 உத்தியோகபூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்: https://campus.oppo.com/en/. அனைத்து கலைப்படைப்புகளும் 2021 ஓகஸ்ட் 29, 20:00 GMT 24:00 மணிக்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இறுதி முடிவுகள் செப்டெம்பர் 18, 2021 க்கு முன் அறிவிக்கப்படும்.


Share with your friend