இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் வடிவமைப்பாளரான Prime Lands Residencies PLC (PLR), பேராசிரியர். ஆனந்த ஜயவர்தனவை சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக நியமித்துள்ளது. 2025 செப்டெம்பர் 4 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனம் தனது இலாகாவை விரிவாக்கம் செய்யும் நிலையில், செயற்பாட்டு சிறப்பில் புதிய நியமங்களை ஏற்படுத்த எதிர்பார்க்கும் சூழலில், இந்த நியமனத்தினூடாக, உலகத் தரம் வாய்ந்த கூட்டாண்மை ஆளுகை மற்றும் மூலோபாய வளர்ச்சிக்கான Prime Lands Residencies PLC (PLR) இன் அர்ப்பணிப்பு மேலும் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற கல்விமானும், கூட்டாண்மைத் துறையில் அனுபவம் பெற்றவருமான பேராசிரியர் ஜயவர்தன திகழ்வதுடன், கூட்டாண்மை ஆளுகை, மூலோபாயம், இடர் முகாமைத்துவம், தொழில்னுட்ப முகாமைத்துவம், செயற்திட்ட முகாமைத்துவம், ESG மற்றும் திறன் விருத்தி போன்ற Prime Lands Residencies PLC (PLR) இன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அத்தியாவசியமான அனுபவங்களை தன்வசம் கொண்டுள்ளார்.
தற்போது மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் சிவில் பொறியியலில் சிரேஷ்ட பேராசிரியராக இவர் திகழ்வதுடன், HNB அசூரன்ஸ் பிஎல்சி மற்றும் மதர் லங்கா மையம் ஆகியவற்றின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராகவும் திகழ்கிறார். இலங்கை மத்திய வங்கியின் பங்காளர் ஈடுபாட்டு குழுவின் அங்கத்தவராக இவர் செயலாற்றுவதுடன், CA ஸ்ரீ லங்காவின் கூட்டாண்மை ஆளுகை செயற்குழுவின் அங்கத்தவராகவும் திகழ்கிறார்.
பேராசிரியர் ஜயவர்தனவின் அறிவினூடாக, Prime Lands Residencies PLC (PLR) இனால் வளர்ந்து வரும் சந்தை போக்குகள், நிலைபேறாண்மை செயற்பாடுகள், வியாபார மாதிரியுடன் புத்தாக்கத்தை ஒன்றிணைத்தல் மற்றும் இலங்கையின் போட்டிகரமான ரியல் எஸ்டேட் துறையில் தொடர்ச்சியான வெற்றிகரமான செயற்பாட்டில் நிறுவனத்தை நிலைநிறுத்துவதில் ஆதரவளிக்கப்படும்.
கொமர்ஷல் வங்கியின் முன்னாள் தவிசாளர் எனும் வகையில், வங்கியின் வரலாற்றில் மிகவும் சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் அவற்றை வெற்றிகரமாக கடந்து வருவதற்கு அவர் வெற்றிகரமான வழிகாட்டல்களை வழங்கியிருந்தார். மொரட்டுவ பல்கலைக்கழகத்திக் உப வேந்தர், தேசிய விஞ்ஞான மையத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பல பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் சேவையாற்றிய தலைமைத்துவ அனுபவத்தை அவர் கொண்டுள்ளார்.
இவர் பட்டய பொறியியலாளர் என்பதுடன், சர்வதேச நிபுணத்துவ பொறியியலாளருமாவார். இலங்கை பொறியியலாளர் நிறுவகம், இலங்கை செயற்திட்ட முகாமையாளர்கள் நிறுவகம் மற்றும் விஞ்ஞானங்களுக்கான இலங்கை தேசிய நிறுவகம் ஆகியவற்றில் அங்கத்துவத்தையும் கொண்டுள்ளார். இலங்கை பணிப்பாளர்கள் நிறுவகம், இலங்கை விஞ்ஞான முன்னேற்ற சம்மேளனம் மற்றும் இலங்கை கட்டமைப்பு பொறியியலாளர்கள் சங்கம் ஆகியவற்றில் அங்கத்துவத்தையும் இவர் கொண்டுள்ளார். இவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் தொழில்முயற்சியாண்மையில் NDB வங்கியினால் பரிந்துரைக்கப்பட்டிருந்ததுடன், இலங்கை பொறியியலாளர்கள் நிறுவகத்தின் முன்னாள் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் ஜயவர்தன, மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் (சிவில்) இளமானிப் பட்டத்தைப் (1983) பெற்றுள்ளதுடன், ஐக்கிய இராஜ்ஜியத்தின் Loughborough University of Technology இலிருந்து நிர்மாணத்துறையில் முதுமானிப்பட்டத்தையும் (1986), அதே பல்கலைக்கழகத்திடமிருந்து நிர்மாண முகாமைத்துவத்தில் PhD பட்டத்தையும் (1990) பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி செயற்பாட்டாளராக திகழும் Prime Group, 30 வருட கால அசைக்க முடியாத நம்பிக்கையை கட்டியெழுப்பியுள்ளது. தனது மரபின் அங்கமாக, தொடர்மனைப் பிரிவில் நம்பிக்கையை வென்ற நாமமாக Prime Lands Residencies PLC நிறுவப்பட்டதுடன், கொழும்பையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் 45 க்கும் அதிகமான திட்டங்களை பூர்த்தி செய்துள்ளது. மேலும் 5 நிர்மாணத் திட்டங்களை தற்போது முன்னெடுத்த வண்ணமுள்ளதுடன், 2 திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதனூடாக வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை போன்றவற்றில் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.