Site icon Eyeview Sri Lanka

Prime Lands Residencies PLC, 3.7 பில்லியன் ரூபா இலாபமாகப் பெற்று சாதனைப்படைத்து 2021/22 நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 708 மில்லியன் ரூபாவை வரிக்கு பிந்தைய லாபமாக ஈட்டியுள்ளது

Share with your friend

இலங்கையின் முன்னணி காணி கட்டிட விற்பனை நிறுவனமான பிரைம் குழுமத்திற்குச் சொந்தமான Prime Lands Residencies PLC (PLR), பொருளாதார மற்றும் சமூக ரீதியாக மிகவும் சவாலான காலப்பகுதியில் தனது சிறந்த நிதிச் செயற்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டுள்ளதுடன், அதன் இரண்டாம் காலாண்டு இலாபத்தை 151% அதிகரித்துள்ளதோடு, PLRஇன் இலாபம் 2.4 பில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பானது முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 86% அதிகரிப்பாகும்.

மீளாய்வுக்கு உட்பட்ட காலப்பகுதியில் PLRஇன் வரிக்கு முந்தைய இலாபம் 573 மில்லியன் ரூபாவாகவும், வரிக்குப் பிந்திய இலாபம் 506 மில்லியன் ரூபாவாகவும் அமைந்திருந்தது. இதன்படி, இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் பதிவான 201 மில்லியன் ரூபாவுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 151% அதிகமாகும்.

“Prime Lands Residencies PLC (PLR) 2021/22 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 2.4 பில்லியன் ரூபாவை இலாபமாக ஈட்டி அதன் தொடர்ச்சியான நிதி நிலைத்தன்மையையும் வளர்ச்சியையும் நிர்வகித்தது. பொருளாதார மற்றும் சமூக ரீதியாக மிகவும் சவாலான காலப்பகுதியில் அதன் நிதி மற்றும் செயல்பாட்டு அளவுகோல்களின் உச்சநிலையை சந்திக்க முடிந்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வளர்ச்சியடைந்து வரும் நிதிச் செயல்திறன், எங்கள் தயாரிப்பு போர்ட்ஃபோலியோவில் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும் மதிப்பை வழங்குவதில் எங்கள் வணிக உத்திகளின் ஸ்திரத்தன்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் விவேகத்தை பிரதிபலிக்கிறது என்று நான் நம்புகிறேன்.” என பிரைம் குழுமத்தின் தலைவர் பிரேமலால் பிராக்மணகே தெரிவித்தார்.

“முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த வட்டி விகிதங்கள் காரணமாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் நிதிச் சேவைகளுக்கான குறைந்த வட்டி விகிதங்கள் காரணமாக நுகர்வோர் காணி கட்டிடங்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்தக் காரணிகளை வைத்து, குறிப்பாக இலங்கையில் மிகவும் நம்பகமான வீட்டுவசதி மற்றும் காணி கட்டிட மேம்பாட்டு வர்த்தக நாமமான Prime Lands Residencies நீண்ட காலத்திற்கு மேலும் நிலையான வளர்ச்சி வீதத்தை அடைய முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன்.’ என அவர் மேலும் தெரிவித்தார்.

2021/22 நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் 802 மில்லியன் ரூபா வரிக்கு முந்திய இலாபம் மற்றும் 708 மில்லியன் ரூபா வரிக்குப் பிந்திய இலாபத்துடன் 3.7 பில்லியன் ரூபா மொத்த இலாபமாக நிறுவனம் பெற்றுள்ளது. முந்தைய நிதியாண்டின் முதல் பாதியுடன் ஒப்பிடும்போது 2021/22 நிதியாண்டின் முதல் பாதியில் 30மூ இலாப வரம்பைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. இந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் வருவாய் ரூ. 0.78ஆக அதிகரித்துள்ளது.

Moody’s முதலீட்டு சேவையின் துணை நிறுவனமான ICRA Ltdஇன் துணை நிறுவனமான ICRA Lanka வழங்கும் “[SL] A- (Stable)” மதிப்பீட்டை நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வென்ற இலங்கையின் ஒரேயொரு காணி கட்டட விற்பனை நிறுவனமாக Prime Lands Residencies PLC நிறுவனத்தினால் முடிந்துள்ளது. செப்டம்பர் 2021இல், Prime Lands Residencies PLC அதன் முதல் பொதுக் கூட்டத்தை, ஒன்லைனில் (Virtually), நிறுவனத்தின் முன்னணி பங்குதாரர்களின் பங்கேற்புடன் நடத்தியது. PLRஇன் மிகவும் வெற்றிகரமான ஆரம்ப பொதுப் பங்கு விநியோகத்தை (IPO) தொடர்ந்து 2020/21 நிதியாண்டின் இறுதியில், Prime Lands Residencies PLCஆனது அதன் பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 40 சதம் வீதம் 375 மில்லியன் ரூபாய் ஈவுத்தொகையை செலுத்த முடிந்தது.

இலங்கையின் புகழ்பெற்ற பொறியியலாளர் மற்றும் NJ Consultantsஇன் முகாமைத்துவப் பணிப்பாளரான நொயெல் ஜோசப், வீடமைப்பு மற்றும் காணி கட்டட விற்பனைத் துறையில் PLRஇன் விரைவான வளர்ச்சி மற்றும் புத்தாக்கங்களை வலுப்படுத்துவதற்காக Prime Lands Residencies PLCஇன் பணிப்பாளர் சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். 32 ஆண்டுகளுக்கும் மேலான விரிவான அனுபவத்துடன், பல வெளிநாட்டு கட்டுமானத் திட்டங்களுக்குப் அவர் பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரைம் குழுமம்இலங்கையின் காணி கட்டட விற்பனை துறையில் சர்வதேச கடன் தரமான ICRA [A-] நிதி நிலைத் தன்மையைப் பெற்ற ஒரேயொருரு குழுமமான பிரைம் குழுமம் காணி மற்றும் கட்டட மேம்பாட்டுத் துறையில் சுமார் 25 வருடகால அனுபவத்தைக் கொண்ட முழுமையான இலங்கை வர்த்தக குழுமமாகும். பிரைம் குழுமம் LMD சஞ்சிகையினால் 2019 ஆண்டில் நாட்டின் வர்த்தகங்கள் மத்தியில் கௌரவமான வர்த்தக நாமங்கள் அடங்கிய நிறுவனங்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டது. அத்துடன் பிரைம் குழுமத்தின் தலைவர் மற்றும் அதன் துணை தலைவி ஆகியோரை LMD சஞ்சிகையினால் 2019ஆம் ஆண்டில் நாட்டின் சிறந்த 100 வர்த்தகங்களைச் சேர்ந்த ‘Realty Visionary’ and ‘Power Woman’இனால் மதிப்பீடு செய்யப்பட்டதுடன், பிரபலமான PropertyGuru Asia Property Awards விருது வழங்கும் நிகழ்வில் ‘Best Developer’ மற்றும் ‘Best Luxury Condo Development’ என்ற விருதுகளையும் வெல்வதற்கு பிரைம் குழுமத்திற்கு முடிந்தது. Asia One சஞ்சிகையினால் கௌரவிக்கப்படும் ஆசியாவின் விசேட இலச்சினைகளுக்குள் இடம்பிடித்துள்ளதுடன் 2018ஆம் ஆண்டு இலங்கைகயில் சிறந்த தொழில்முனைவோர் என்ற அந்தஸ்தையும் பிரைம் குழுமம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.


Share with your friend
Exit mobile version