Eyeview Sri Lanka

Prime Residencies இன் The Palace’s புதிய Community Kitchen – பாரம்பரியம், ஒன்றிணைவு மற்றும் நவீன வசிப்பிடம் ஆகியவற்றுக்கான மையமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது 

Share with your friend

Prime Residencies தனது கம்பஹா, மிரிஸ்வத்த பகுதியில் அமைந்துள்ள The Palace வதிவிடத் தொகுதியில், நவீன வசதிகள் படைத்த Community Kitchen ஐ ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. குடும்பம், பாரம்பரியம் மற்றும் ஒன்றிணைவு ஆகியன அடங்கிய, இலங்கையின் வாழ்க்கைமுறையை பிரதிபலிக்கும் பகுதிகளை உருவாக்குவதில் Prime கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த மைல்கல் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது.  

Community Kitchen என்பது அதிகளவு இடவசதி கொண்ட, சகல வசதிகளையும் உள்ளடக்கிய நவீன சாதனங்கள் மற்றும் வைபவங்களை முன்னெடுக்கக்கூடிய இடப்பகுதிகளைக் கொண்ட வளாகமான அமைந்துள்ளது. திருமணங்கள், சமய கொண்டாட்டங்கள், சமூக-மட்ட பரந்த கொண்டாட்டங்கள், சமூக நிகழ்வுகள் மற்றும் வதிவோரினால் ஏற்பாடு செய்யப்படும் ஒன்றுகூடல்கள் போன்றவற்றை முன்னெடுக்கும் வசதியை இது கொண்டுள்ளது.

சௌகரியம் என்பதற்கு அப்பால், இந்த புதிய சேர்மானத்தினூடாக Prime Residencies’ இன் இலங்கையின் கலாசாரத்துக்கு பொருந்தும் நிர்மாணத்திட்டங்களை முன்னெடுக்கும் கொள்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. உணவு மற்றும் ஒன்றிணைவு போன்றன குடும்ப வாழ்வின் மையமாக அமைந்திருக்கும் நாட்டில், Community Kitchen இனால் அதற்கான பிரத்தியேகமான இடவசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனூடாக வசிப்போருக்கு வாழ்வின் முக்கியமான மைல்கற்களை பாரம்பரிய அம்சங்கள் மற்றும் நவீன வாழிட அம்சங்களுடன் கொண்டாடும் வசதி கிடைத்துள்ளது. ஏற்கனவே காணப்படும் வைபவ மண்டபம் மற்றும் இதர வசதிகளுடன் பொருந்தும் வகையில் இது அமைந்துள்ளதுடன், கலாசார பரிமாற்றம், குடும்ப பாரம்பரியங்களை ஊக்குவிப்பது மற்றும் அயலவர்களுடன் பந்தங்களை மேம்படுத்துவதற்கும் வாய்ப்பளிக்கிறது.

கொழும்பு – கண்டி பிரதான வீதியிலிருந்து 100 மீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள The Palace, 200க்கும் அதிகமான அலகுகளை விற்பனை செய்துள்ளது. அதனூடாக செயற்திட்டத்தின் மீதான உறுதியான நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், Prime Residencies’ இன் கீர்த்தி நாமமான இலங்கையின் நம்பிக்கையை வென்ற வடிவமைப்பாளர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. Community Kitchen இற்கு அப்பால், வசிப்போருக்கு, தோட்டக் கட்டமைப்புகள், சிறுவர் விளையாட்டு பகுதிகள் மற்றும் பரந்த நிகழ்வு பகுதிகள் போன்றவற்றை அனுபவிக்கவும் முடியும். இவற்றுடன், இலங்கையரின் வாழ்க்கைமுறைக்கு பொருத்தமான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

Community Kitchen இன் அறிமுகத்தினூடாக, Prime Residencies இன் பரந்த நோக்கான – தொடர்மனைகள் நிர்மாணிப்பு என்பதற்கு அப்பால் சென்று, இணைப்பை ஏற்படுத்தும், கலாசார ரீதியில் வேரூன்றிய சமூகங்களை உருவாக்குவது என்பது பிரதிபலிக்கப்பட்டுள்ளது. நெகிழ்வான கொடுப்பனவுத் திட்டங்கள் மற்றும் மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க நிதிவசதியளிப்பு தெரிவுகளினூடாக, The Palace இன் வீட்டு உரிமையாண்மை என்பது அணுகக்கூடியதாக அமைந்திருப்பதுடன், நவீன வசிப்பிடம் மற்றும் கொண்டாட்டம் ஆகியவற்றுக்காக வடிவமைக்கப்பட்ட சமூகத்தில் அங்கம் பெறும் எனும் விலைமதிப்பில்லாத அனுகூலத்தையும் வசிப்போருக்கு வழங்கும். மேலதிக தகவல்களுக்கு The Palace ஐ தொடர்பு கொள்ளவும் 0701 087 087.


Share with your friend
Exit mobile version