Site icon Eyeview Sri Lanka

Rakuten Viber தனது பிந்திய Augmented Reality (AR) உட்புகுத்தப்பட்ட Viber Lens ஐ இலங்கையில் அறிமுகப்படுத்தியது

Share with your friend

அடிப்படையான அரட்டைகளுக்கு “நோ“ சொல்லவும், புதிய Viber Lens  அம்சத்துடன் கூடிய ஈடுபாடுமிக்க தொடர்பாடல்களுக்கு “ஹலோ“ சொல்லவும் 

குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சகபாடிகளுடன் நாளாந்த உரையாடல்கள் மற்றும் சுதந்திரமான, இலகுவான தொடர்பாடல்களில் பயனர்களுக்கு ஆக்கபூர்வமான வெளிப்பாட்டை வழங்குவதில் முன்னணியான செயலிகளில் ஒன்றான Viber, அரட்டைகளின் போது மேலும் விசித்திரம் மற்றும் வர்ணங்களை வழங்கும் வகையில் Viber Lens அம்சத்தை இலங்கையில் அண்மையில் அறிமுகப்படுத்தியது. 

இன் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப கம்பனியான உடன் இணைந்து செயலியில் உள்ள கமராவுக்கு augmented reality ஊடாக முதல்தொகுதி Viber Lenses இல் விலங்குகளின் முகம்மூடிகள், கற்பனை தோற்றங்கள், பிட்மோஜி வடிவங்கள் மற்றும் பயனர்களுக்கு விருப்பமான Viber வடிவங்கள் என 30 கமரா பில்டர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த பொழுதுபோக்கான அம்சம் நிச்சயமாக குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இடையிலான அரட்டைகளில் விளையாட்டுத்திறனை உட்புகுத்தும்.  Viber கமராவை அரட்டையில் செயற்படுத்தி, விருப்பமான ஒரு lens ஐ தெரிவுசெய்வதன் ஊடாக Viber Lens ஐ இலகுவில் நிறுவிக்கொள்ளலாம். பயன்படுத்துபவர்கள் இந்த அம்சத்தின் பயன்பாட்டின் ஊடாகத் தமக்கு விருப்பமான படத்தை அல்லது ஒரு வீடியோவை எடுப்பதன் ஊடாக  வேடிக்கையான நேரத்தை ஆரம்பிக்க முடியும்.

தம்மை வெளிப்படுத்தும், மாறும் மற்றும் உண்மையான உரையாடல்கள் என வரும்போது பயனர்களுக்கு முடிவற்ற தெரிவுகளை வழங்குவது என்ற இலக்கிற்கு உண்மையாக இருக்கும் வகையில், இந்த வேடிக்கையைத் தொடர்ந்தும் பேணும் நோக்கில் ஒவ்வொரு மாதமும் ஆகக் குறைந்தது 20 மேலதிக லென்ஸ்களை அறிமுகப்படுத்தவும் Viber திட்டமிட்டுள்ளது.  பயனர்கள் தமக்கு விருப்பமான வர்ணம் மற்றும் திரையில் தென்படும் ஸ்டிக்கர் என்பவற்றை மாற்றுவதற்கு சில லென்ஸ்கள் அனுமதியளிக்கும்.

முக்கியமான விடயத்துக்கு அல்லது உங்களுக்கு விருப்பமான விளையாட்டு அணிக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் பங்குதாரர்களான உலக சுகாதார ஸ்தாபனம் (WHO), இயற்கைக்கான உலகாளவிய நிதியம் (WWF), FC Barcelona ஆகியவற்றின் வர்த்தகநாம லென்ஸ்களையும் தெரிவுசெய்ய முடியும்.

”இந்தத் தொழில்நுட்டபத்தை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக எமது பயனர்கள் தமது படைப்பாற்றல் மூலம் சாதாரணமான தொடர்பாடல்களை பொழுதுபோக்கு நிறைந்ததாக மாற்றுவதற்கு Viber Lens உதவியாக இருக்கும். அவர்கள் யாருடன் பேசுகிறார்களோ அவர்களுடன் தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் எவ்வாறு பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதற்கு இது அதிக சுதந்திரத்தை அளிப்பதுடன், சிறு வேடிக்கையையும் வழங்குகிறது” என Rakuten Viber இன் APAC இற்கான சிரேஸ்ட பணிப்பாளர் டேவிட் ரிசே தெரிவித்தார். ” Snap கூட்டாண்மையின் ஊடாக உருவாக்கப்பட்டுள்ள மிகவும் முன்னேற்றகரமான இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் புதிய வகையிலா குறுத்தகவல் அனுப்புவதற்கு வழியை ஏற்படுத்துவதுடன், இந்த செயலியின் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள், வீடியோக்கள்,  புகைப்படங்கள் யாவற்றுக்கும் உயர்தரத்திலான பாதுகாப்பை வழங்குவதிலும் அர்ப்பணிப்புடன் இருப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

”எமது புதிய Viber Lens அறிமுகப்படுத்தலுடன் AR ற்கான எல்லைகளை நாம் நீடிக்கின்றோம். தற்போதைய தொற்றுநோய் சூழல் கரணமாகக் குடும்பங்களிலிருந்து பிரிந்துள்ள எமது பயனர்கள் தொடர்புகளில் இருப்பதற்கும், மறக்கமுடியாத தருணங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் அர்த்தபுள்ள வழிகளை விரும்புகின்றனர்” என இன் தலைமை வளர்ச்சி அதிகாரி அனா சனாமென்ஸ்கயா தெரிவித்தார். ” Viber Lens வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு கற்பனா சக்தியை வழங்கும்.  இது எதிர்காலத்தில் எங்கள் தயாரிப்புகளுக்கு புதுமையான மற்றும் அற்புதமான புதிய சேர்த்தலின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” எனவும் தெரிவித்தார்.

தொடர்புகளைப் பேணுவது தற்பொழுது சிக்கல் நிறைந்தது அல்ல. எனினும், Viber Lens உடன் மேலும் மகிழ்ச்சியாகவும், இயக்கசக்தியுடனும் இருக்கவும். இது iOS (Viber version 15.5.5 and up)  மற்றும் Android (Viber version 15.8.0.15 and up) ஆகியவற்றில் கிடைக்கவுள்ளது. இது அறிமுகப்படுத்தப்பட்டதும் AR மாயாஜாலத்தை அனுபவிப்பதற்கு பயனர்கள் இன் 16.0 தொகுப்பை அல்லது அதற்கு மேற்பட்ட தொகுப்பை  அப்டெட் செய்யவேண்டும். 

Rakuten Viber பற்றி : 

Rakuten Viber நாங்கள் மக்களை இணைக்கிறோம். அவர்கள் யார், அல்லது அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது முக்கியமல்ல. எங்கள் உலகளாவிய பயனர் தளம் ஒருவருக்கொருவர் அரட்டைகள், வீடியோ அழைப்புகள், குழு செய்தி அனுப்புதல் மற்றும் அவர்களுக்கு பிடித்த வர்த்தகநாமங்கள் மற்றும் பிரபலங்களுடன் புதுப்பிப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற பல அம்சங்களுக்கான அணுகலைக் கொண்டுள்ளது. எங்கள் பயனர்களின் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ள பாதுகாப்பான மற்றும் இலவச சூழல் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். 

Rakuten Viber, Rakuten Inc இன் ஒரு பகுதியாகும். ஈ-வர்த்தகம் மற்றும் நிதிச் சேவையில் உலகின் முன்னணியாளராகும். இது FC Barcelona வின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு சனல் என்பதுடன் Golden State Warriors அதிகாரப்பூர்வ உடனடி செய்தி மற்றும் அழைப்பு பயன்பாட்டுப் பங்காளராகும்.
மேலதிக தகவல்களுக்கு lana@viber.comஊடாக எம்மைத் தொடர்புகொள்ளவும்.


Share with your friend
Exit mobile version