Eyeview Sri Lanka

Red Bull Records ஊடாக யொஹானியின் புதிய தனிப்பாடல் “MOVING ON” வெளியீடு

Share with your friend

“மெனிகே மகே ஹிதே” எனும் பாடல் மூலம் அண்மையில் இலங்கையில் மாத்திரமன்றி இந்தியா உள்ளிட்ட உலகெங்கிலும் புகழடைந்த யொஹானி தனது “MOVING ON” எனும் பெயரிடப்பட்டுள்ள பாடலொன்றை வெளியிட்டுள்ளார். 

Red Bull Records லேபல் மூலம் உலகம் முழுவதுமுள்ள இரசிகர்களுக்காக இது வெளியிடப்பட்டுள்ளது. இந்த Red Bull Records  கூட்டாண்மை இலங்கை கலைஞர் ஒருவரின் உலகளாவிய ரீதியிலான பாரிய நடவடிக்கை என்பதுடன், இலங்கை கலைஞர் ஒருவர் இந்நிறுவனத்துடன் இணைந்து ஒரு படைப்பை வெளியிடுவது இதுவே முதல் முறையுமாகும். அதன்படி, இந்த பாடல் இலங்கை இசைத் துறையில் இதுவரை சந்தித்த மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான மைல்கல் ஆகும்.

Pop, R&B, hip-hop, உள்ளிட்ட பாடல் வகைகளை விஞ்சும் வகையிலான “MOVING ON” பாடலானது, கிட்டார் மூலம் பல்வேறு வளைவு நெளிவுகளை காண்பித்து வெளியிடப்பட்டுள்ளதுடன், அதிர்வலைகளை ஏற்படுத்தும் பொப் மெலடிகளை ரப் பாலமாக மாற்றும் இயற்கை நெறியை தகர்க்கும் சக்தியை அது கொண்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளுக்கு இடையில் வேறுபாடு காண்பிக்காது மாற்றமுறும், யொஹானியின் தனிப் பாணியின் ஒவ்வொரு பக்கத்தையும் இந்த பாடல் பிரதிபலிக்கிறது. அத்துடன் சொனிக் ரசவாதம் மற்றும் கணிக்க முடியாத ஆற்றலுக்கான அவரது வெளிப்பாட்டை இது விளக்குகிறது.

“எனக்கு இது ஒரு சோகமான பாடல் எனும் உணர்வை ஏற்படுத்தவில்லை.” என்று இப்பாடலைப் பற்றி யொஹானி கூறுகிறார். “இது வாழ்க்கையை எப்புள்ளியிலிருந்தும் நம்பிக்கையுடன் ஆரம்பிக்கலாம் என்பதை காண்பிக்கிறது. இதில் நீங்கள் உங்கள் சக்தியை ஆழமாக தழுவுகிறீர்கள். இது அதிர்வை ஏற்படுத்தி, உங்களை அதற்கு நடனமாட வைக்கும். ஆயினும் அது இலங்கைத் தன்மையின் அதிர்வலைகளைக் கொண்டுள்ளது.” என்றார்.

“MOVING ON” ஆனது ஒரு அற்புதமான இசை வீடியோவுடன் அமைந்துள்ளது. யொஹானி பல்வேறு இடங்களைச் சேர்ந்த சில நண்பர்களுடன் சேர்ந்து, வாழ்க்கையின் இடையூறுக்குப் பின்னரான சாதகமானதும், மீளெழுச்சி அடைவதுமான உற்சாகமான காட்சிகளை உள்ளடக்கியதாக இது அமைந்துள்ளதுடன், எந்நேரத்திலும் நீங்கள் நடனமாட வேண்டும் என்றும் அது விதிக்கிறது. டிலஞ்சன் செனவிரத்னவினால் எழுதி இயக்கப்பட்ட இந்த இசை காணொளியானது உள்ளூர் பாடல் பதிவு நிறுவனமான Pettah Effect மற்றும் தயாரிப்பு பங்குதாரரான Theewra ஆகியோரின் கூட்டு முயற்சியாகும். வீடியோவை இங்கே பார்வையிடுங்கள். 

Red Bull Records லேபல் வழியாகவும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இவ்வருடம் இவ்வகையில் உலகளாவிய கலைஞர்களின் தொடர்ச்சியான வெளியீடுகளில் சமீபத்திய தனிப்பாடலாக இது அமைகின்றது. “இலங்கையின் இசையை உலகிற்கு எடுத்துச் செல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். Red Bull உடனான இந்த கூட்டாண்மையானது, என்னுடைய இசை வாழ்க்கைக்கும் இது என்னுடைய இசை வாழ்க்கைக்கும் பெரிய உதவியாக இருக்குமென நான் நம்புகிறேன்.” என்கிறார் யொஹானி.

யோஹானியின் அசல் பாடல்களின் கவர் மற்றும் மேஷ்-அப் பாடல்கள் குறுகிய காலத்தில் இலங்கையில் மிகவும் பிரபலமடைந்ததுடன், அவர் தற்போது YouTube, TikTok, Instagram, Facebook ஆகியவற்றில் மிகவும் பிரபலமான இலங்கை பாடகி ஆவார். அவரது திறமை மற்றும் பிரபலம் காரணமாக, அவர் Red Bull கச்சேரியில் பாட அழைக்கப்பட்டார், அங்கு அவர் பல்வேறு சிங்கள பாடல்களை மேஷ்-அப்களைப் பாடி சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தார். 

ஸ்ட்ரீமிங் / பதிவிறக்கம் செய்ய https://rbr.ffm.to/movingon ஐப் பார்வையிடவும்

வீடியோவை https://www.youtube.com/watch?v=m-2QE1ZB_iM இல் பார்க்கவும்


Share with your friend
Exit mobile version