Samsung 8K தொழில் நுட்பம் ஆனது TV யின் எதிர்காலத்திற்கு முன்னோடியாகத் திகழ்கின்றது

Share with your friend

கொழும்பு, 02 நவம்பர் 2023 – அகில உலக தொலைக்காட்சித்   தொழில்நுட்பதில் முன்னணி நிறுவனமான Samsung Electronics ஆனது, அதன் தொழில்துறையினில் மேலும் அடுத்த எல்லைகளை எட்டுவதற்கான திடதீர்மானத்துடன் தனது நடையினை முன்னெடுக்கின்றது.  புதுமையினைப் படைப்பதில் புகழ்பெற்ற வரலாறு கொண்ட மற்றும் சிறந்த காட்சித் தரத்திற்கான தனது இடைவிடாத தேடலுடன், Samsung TV ஆனது அதன் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சிக்கு தொடர்ந்தும் வழியினைக் காட்டி வருகின்றது. இன்று, Samsung ஆனது இல்லங்களில் பேசப்படும் ஓர் பெயராக நிமிர்ந்து நிற்கின்றது, காட்சித் தரத்திற்கான புதிய தரநிலைகளை அமைத்து, Ultra High Definition (UHD) திரைகளின் சகாப்தத்தினை  அறிமுகப்படுத்துகின்றது.

அதன் புத்தாக்கங்கள் தொடர்பான வரலாறு.

1977 ஆம் ஆண்டில், Samsung ஆனது கொரியாவில் தனது முதல் வர்ணத் தொலைக்காட்சியான Colour Economy TV ஐ அறிமுகப்படுத்தியது, இது நாட்டினில் வர்ணத் தொலைக்காட்சி சகாப்தத்தினை அறிமுகப்படுத்தியது. இம் முன்னோடி சாதனையானது Samsung ஆனது எதிர்காலத்தில் தொலைக்காட்சி தொழில்நுட்ப முன்னோடியாகத் திகழ்வதற்கு அஸ்திவாரம் இட்டது.  2009 ஆம் ஆண்டில், Samsung ஆனது தனது பிரமிக்கவைக்கும் LED டிவியினை அறிமுகம் செய்து வைத்தது. இது  ​ஒப்பற்ற காட்சித் தரத்தினை வழங்குவதற்காக ஒளி-உமிழும் டையோட்களை (LED) இணைத்து, TV தொழில்நுட்பத்தின் குறிப்பிடத்தக்க மைல்கல்லையும் கடந்து செல்வதனைக்  எடுத்துக்காட்டுகின்றது. 

2017 ஆம் வருடத்தினில், Cadmium-Free Quantum Dot தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் QLED TV ஐ Samsung ஆனது அறிமுகப்படுத்தியது,   100% வர்ணத்திலும், ஒப்பிட முடியாக்  காட்சித் தரத்துடனும்  கிடைக்கப்பெற்றது.  இது தொழில்துறையில் தொழில்நுட்பத் தலைவனாக Samsung இன் நிலையினை உறுதிப்படுத்தியது. 2018 ஆம் ஆண்டு மற்றுமோர் குறிப்பிடத்தக்க அறிமுகத்தினை மேற்கொண்டு, Samsung QLED 8K ஐ வெளியிட்டது, அதன் தனியுரிம Quantum Dot தொழில்நுட்பத்துடன் 8K தெளிவுத்திறனை ஒன்றிணைத்தது.  இவ்வகை TV இல் Direct Full Array மற்றும் 8K AI Upscalling ஆகியவை இடம்பெற்றுள்ளன, இது 8K சகாப்தத்தின் ஆரம்பத்தினைக் குறிக்கின்றது.

எதிர்காலத்தினை உற்றுநோக்கும் போது, ​​2020 ஆம் வருடத்தினில், Samsun ஆனது உலகிலேயே  முதல் முதலாக விளிம்பற்ற  TV  ஐ வெளியிட்டது.  Display முழுவதும் சுற்றயுள்ள விளிம்புகளினை முற்றுமாக நீக்குகின்றது. ஓர் அண்டிற்குப் பின்னர், Samsung ஆனது Quantum Mini LED Display களில் நிறுவப்பட்ட Neo QLED 

தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்தது.  இது ஒரு தொழில்துறையின் முதல்வனாகத் தனது நிலையினை மேலும் உறுதிப்படுத்தியது.  புதுமைக்கான Samsung இன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, நுகர்வோருக்கு அவர்களின் அதிகரித்து  வரும் தேவைகளினைப் பூர்த்தி செய்யும் அதிநவீன தயாரிப்புகளை வழங்குவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பு என்பவற்றினை  அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.

தெளிவான படத் தரத்திற்கான பிரயத்தனம்.

தொலைக்காட்சித் துறையினில் Samsung இன் வெற்றியின் அடிப்படையானது தெளிவான படத் தரத்தினை பாவனையாளர்களுக்கு வழங்க அவர்கள் இடைவிடாமல் முயல்வது தான். H/W ஆய்வு கூடத்தினைச் சார்ந்த Youngseok Han அவர்ககளின் கூற்றுப்படி, பாவனையாளர்கள் திரையினில் தோன்றக்கூடிய காட்சிகளினை நேரடியாகப் பார்ப்பது போன்ற உணர்வினை வழங்குவதென்பது, ​​”ஓர் தரமான காட்சி வழங்கீடு எனக்கூறலாம்”, இது பாவனையாளர்களுக்கு யதார்த்த உணர்வினை உருவாக்குகின்றது. இவ் அளவிற்கு   காட்சியின் தரத்தினை எட்டுவதற்கு, உயர் தெளிவுத்திறன், அதிக ஒளிர்வு, சிறந்த வர்ணங்களின் வெளிப்பாடு மற்றும் நன்கு சீரமைக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல காரணிகள் பின்னணியினில் செயல்படுகின்றன.

படத்தின் தரத்தினை மேம்படுத்துவதன் சமநிலை குறித்தான முக்கியத்துவத்தினை Han அவர்கள் வலியுறுத்தினார், பல்வேறு தொழில்நுட்பங்கள் எவ்வாறு ஒன்றிணைந்து படம் ஒன்றின் உருகுலைவினை குறைக்கின்றன, வர்ணங்கள்  துல்லியமாக மீளாக்கம்செய் செய்யப் படுகின்றன, மிகத் தெளிவான படங்களுக்கான  கூர்மையான மாறுபாட்டை உருவாக்குகின்றன, மேலும் திரையில் மென்மையான இயக்கத்தை உறுதிப்படுத்துகின்றன.

சிறந்த காட்சித் தரத்தினை வழங்குவதில் Samsung இன் அர்ப்பணிப்பு ஆனது அவர்களின் 2023 Neo QLED TV யில் தெளிவாகத் தெரிகின்றது.  இதில் புதுமையான Real Depth Enhancer தொழில்நுட்பம் ஆனது சேர்க்கப்பட்டுள்ளது. இத்  தொழில்நுட்பம் மனித நடத்தை பற்றிய புரிதலோடு சம்மந்தப் பட்டதாகும். பொருட்களை அவற்றின் பின்னணியில் இருந்து பிரிக்க AI ஐப் பயன்படுத்துகின்றது, அதிக ஆழமான உணர்வை உருவாக்குகின்றதோடு திரையினில் படங்களை உண்மையிலேயே Pop ஆக்குகின்றது. Neo Quantum Matrix Pro தொழில்நுட்பமானது Quanthum Mini LED களை மிகவும் நுட்பமாகக் கட்டுப்படுத்துவதன் மூலம் சிறந்த காட்சித் தெளிவினை மேம்படுத்துகின்றது, இதன் மூலம் காட்சி அனுபவத்தினை மிகச் சிறந்த உயரத்திற்கு  எடுத்துச்  செல்கின்றது.

8K தொழில்நுட்பம் ஆனது நவீன யுகத்தில்.

இவ் உலகானது தற்காலத்தினில் புதிய உள்ளடக்கம் எனும் கலாச்சாரத்தினை நோக்கிப் பயணிக்கின்றது. ஆயிரக்கணக்கான புதிய ஊடகத் தொகுப்புகள் ஆனது வித்யாசமான பல்வேறு தளங்களில் இருந்து நாளாந்தம் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. 8K தொழில்நுட்பத்தின் எழுச்சியானது, அதி-உயர் தெளிவுத்திறன் கொண்ட உள்ளடக்கத்தினை உருவாக்கவும் மற்றும் அவற்றினை அனுபவிக்கவும் யாவருக்கும் உதவுகின்றது. Picture Quality Solution ஆய்வுக்கூடத்தின் முதல்வரான Sangmin Lee அவர்கள் சமூக ஊடக சேனல்களில் 8K உள்ளடக்கத்தின் வளர்ச்சி மற்றும் 8K இல் Digital கலைப்படைப்புகளை உருவாக்குதல் தொடர்பாக எடுத்துரைத்தார்.

2023 Neo QLED TV இல் “YouTube Videos in 8K” அம்சத்தைச் சேர்த்துக் கொண்டுள்ளதாகவும், பாவனையாளர்கள் 8K உள்ளடக்கம் மற்றும் NFT படங்கள் போன்ற Digital கலைப்படைப்புகளை இலகுவாக அனுபவிக்க நிச்சயம்  உதவும் என Lee அவர்கள்  மேலும் குறிப்பிட்டார். Samsung ஆனது  உள்ளடக்கம்  தொர்பாக பின்னணியில்  ஓர்  உந்து சக்தியாக உள்ளது, 8K மன்றத்தினை வழிநடத்துகின்றது, இது 8K தரநிலைகளை உருவாக்குவதனையும் 8K உள்ளடக்கத்தை   விரிவுபடுத்துவதனையும்  இலக்காகக் கொண்ட சர்வதேச  இலாப நோக்கற்றதோர்  அமைப்பாகும். 

காட்சிகளின் தரமும் அவற்றின்  எதிர்காலமும்.

Samsung 8K சகாப்தத்தில் காட்சித்தரமானது அதன் எல்லைகள் தொடர்பாகத் தொடர்ந்தும்  முன்னேறி வருவதனால், Samsung இன்  தொலைக்காட்சி வல்லுநர்கள் குழுவானது அதன் பாவனையாளர்களுக்கு  சிறந்த காட்சி  அனுபவத்தினை வழங்குவதில்   கவனம் செலுத்துகின்றது.

Youngseok Han அவர்கள் படத்தின் தரத்தினை “நிஜத்தினை விடவும் மேலும் உண்மையானதாக” மாற்ற அதன் நிரல் நெறிமுறைகளினையும் மற்றும் கூறுகளையும் மேம்படுத்துவதனை நோக்காகக் கொண்டுள்ளது. Hyunchul Song முடிந்தவரை அனைத்துப் பாவனையாளர்களுக்கும் உயர்தர அனுபவங்க  ளினை  வழங்கத்  தயாரிப்புகளை மேம்படுத்த Samsung ஆனது  முயற்சிக்கின்றது. Sangmin Lee    இன் இறுதி இலக்கானது உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கும்   அப்பாற்பட்ட சிறந்த படத் தரத்தினை வழங்குவதாகும், பார்வையாளர்களுக்கு யதார்த்தத்தினை விடவும் நிஜமாகத் தோன்றும் அனுபவங்களினை  வழங்குவதாகும்.

இறுதியாக் கூறுமிடத்து, Samsung இன் புதுமையான தொழில்நுட்பங்கள் தொலைக்காட்சி தொடர்பானவற்றினை மீள்-வரையறை செய்து, காட்சித்  தரத்திற்கான புதிய தரநிலைகளினை நிறுவியுள்ளனர்.  புதுமை நோக்கிய Samsung நிறுவனத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் வித்யாசமான பாவனையாளர் அனுபவங்களை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்புப் போன்றன  தொழில்துறையினை   முன்னோக்கி  நகர்த்துகின்றன.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply