Samsung Sri Lanka  கெலக்ஸி A03s களை பெரிய 6.5அங்குல இன்ஃபினிட்டி- வி டிஸ்ப்ளே, 5000mAh பற்றரிபட்டரி மற்றும் கைரேகை சென்சாருடன் அறிமுகப்படுத்துகிறது

Home » Samsung Sri Lanka  கெலக்ஸி A03s களை பெரிய 6.5அங்குல இன்ஃபினிட்டி- வி டிஸ்ப்ளே, 5000mAh பற்றரிபட்டரி மற்றும் கைரேகை சென்சாருடன் அறிமுகப்படுத்துகிறது
Share with your friend

இலங்கையின் முதற்தர ஸ்மார்ட் போன் வர்த்தக நாமமான, Samsung அண்மையில் கெலக்ஸி A03s அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. Samsung இன் ஏ-சீரிஸில், கெலக்ஸி A03sஇல் 6.5 அங்குல இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே, 13MP டிரிபிள் ரியர் கெமரா, பாரிய 5000 mAh பெற்றரி, சக்திவாய்ந்த Octa-core MediaTek P35 பிரசஸர் உடன் கைரேகை சென்சார் கொண்டுள்ளது. ஹேஸ் மற்றும் மெட் டிசைன் மற்றும் மேலும் புதுமையான அம்சங்கள் பலவற்றை கொண்டுள்ளது. அத்துடன் இதில் பல விசேட சிறப்பம்சங்கள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.   

Galaxy A03s மூன்று கெமரா கட்டமைப்பை தன்னகத்தே கொண்டுள்ளது. இது துல்லியமான மற்றும் தெளிவான காட்சி அம்சங்களை கொண்ட படங்களை எடுக்க உதவுகிறது. பின்புறத்தில், Galaxy A03s நாள் முழுவதும் தெளிவான படங்களை எடுப்பதற்கான 13MP பிரதான கெமராவைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் 2MP மெக்ரோ லென்ஸ் நெருக்கமான காட்சிகளை எடுக்கிறது. 2MP ஆழம் கொண்ட கெமரா கெமரா அற்புதமான உருவப்படக் காட்சிகளையும், உங்கள் மனம் கவர்ந்தவர்கள், விலங்குகள் அல்லது உங்கள் உணவினை நீங்கள் படம் பிடிப்பதற்கு உதவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.   

இதுதவிர Galaxy A03s உங்கள் புகைப்படங்களை அலங்கரிக்கவும் லைவ் ஸ்டிக்கர்களுடன் உங்கள் புகைப்படங்களைத் தனிப்பயனாக்குவதற்கு பல்வேறு வழி முறைகளை ஏற்படுத்தி தருகின்றது. 5MP முன் கெமராவனது லைவ் நடவடிக்கைகளுக்கேற்ற வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், இதிலுள்ள பில்டர்ஸ் மற்றும் ஏனைய மெமராக்கள் உங்களுக்கு சிறந்த செல்ஃபி படங்களை எடுத்து மகிழ்வதற்;கு உதவும்.  

 ‘இலங்கையின் கெலக்ஸி குடும்பத்திற்கு அதன் சமீபத்திய புதிய படைப்பை அறிமுகப்படுத்துவதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எமது பரந்த அளவிலான கெலக்ஸி ஸ்மார்ட் போன்கள் நுகர்வோருக்கு புதுமையான அனுபவங்களை வழங்குகின்றன. இந்த புதிய அறிமுகம் எமது வாடிக்;;கையாளர்களது மனங்களை கொள்ளை கொள்ளும்’ என சம்சுங் இலங்கையின் முகாமைத்துவ பணிப்பாளர் கெவின் சுங்சு யூ தெரிவித்தார். 

கெலக்ஸி A03s உங்களுக்கு தெளிவான காட்சி அனுபவத்தை வழங்கி, 6.5 அங்குல         HD+ இன்ஃபினிட்டி- வி டிஸ்ப்ளேயை 20:9 விகிதத்துடன் தடையின்றி பார்க்க உதவும். இது ஆழமான பார்வைக்கான அனுபவத்தை உங்களுக்கு தரும் என்;பதுடன் நீங்கள் பயணம் செல்லும்போது அநேகர் இதனை பார்த்து மகிழ்வதற்கான சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தித் தரும்.  

நீண்ட காலம் நீடிக்கும் தன்மை கொண்ட 5000mAh பெற்றரியானது நீங்கள் நீண்டநேரம் தொலைபேசியில் நேரத்தை செலவிடுவதற்கு தேவையான சார்ஜ் சக்தியை வழங்கும். அதனால் உங்கள் தொலைபேசியை சார்ஜ் செய்வதற்கு நீங்கள் குறைந்த நேரத்தை செலவிடுவது போதுமானது.  

மேம்படுத்தப்பட்ட Octa-Core MediaTek Helio P35 பிரசசர், கெலக்ஸி A03s உரிய செயற்திறனை உறுதி செய்கின்றது. நீங்கள் பல்வேறு செயலிகளை ஒரே தடவையில் பயன்படுத்தும்போதும் குறைந்தளவு மின்நுகர்வே இதற்கான செலவாகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Galaxy A03s ஆனது அன்ட்ரொய்ட் 11 மற்றும் One UI 3.1 கோருக்கான ஒத்துழைப்பை வழங்கும் அதேநேரம், இரவு நேரத்தில் வசதியாக பார்ப்பதற்கான அனுபவத்தை வழங்கும் நைட் மோட்டையும் கொண்டுள்ளது. அத்துடன் இது ஒரு பக்க கைரேகை சென்சருடன் வருகின்றமையும் குறிப்பிடத்த்ககது.

Galaxy A03s நேர்த்தியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது பிடிப்பதற்கு வசதியான மற்றும் கவர்ச்சிகரமான haze மற்றும் matt அமைப்பை கொண்டுள்ளது. Galaxy A03s இல் சம்சுங்; ஹெல்த், சம்சும் மெம்பர்ஸ் மற்றும் ஸ்மார்ட் சுவிச் ஆகிய சேவைகள் உள்ளன. அத்துடன் இவை அனைத்துக்கும் மேலதிகமாக நான்;கு ஆண்டுகளுக்கு பாதுகாப்பு அப்டேட்களையும் வழங்கின்றமை விசேட அம்சமாகும்.   

கெலக்ஸி A03s 3GB+32GB ரகம் ரூ.29,999 மற்றும் 4GB+64GB  ரகம் ரூ.33,999 இற்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. இதனை கறுப்பு, நீலம் ஆகிய இரண்டு நிறங்களில் பெற்றுக்கொள்ளலாம்.  

இந்த கெலக்ஸி A03s நாடு முழுவதுமுள்ள ஜோன் கீல்ஸ் ஒபிஸ் ஒட்டோமேஷன் மற்றும் சொஃப்ட்லொஜிக் மொபைல் டிஸ்டிபியூசன் அதிகாரம் பெற்ற முகவர்களிடம் பெற்றுக்கொள்ளலாம். இதுதவிர சொஃப்ட்லொஜிக் ரிட்டைல், சிங்கர், சிங்ஹகிரி, தம்ரோ மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான டயலொக் மற்றும் மொபிடெல் உட்பட சம்சுங் ஈ-ஸ்டோர் (samsungsrilanka.lk), MySoftlogic.lk மற்றும் Daraz.lk உட்பட அனைத்து அதிகாரம் பெற்ற முகவர்களிடம் கொள்வனவு செய்யலாம்.  

நீங்கள் எங்கு, எப்போது இருந்தாலும் உங்களுக்கு சேவை வழங்க நாம் தயார்.  Samsung Galaxy ஸ்மார்ட் போன் ஒன்றை கொள்வனவு செய்ய தீர்மானிக்கும் உங்களுக்கு என்றுமே மனதில் அமைதி நிலவும். Samsung Members app ஊடாக உங்கள் கையடக்க தொலைபேசியின் செயற்திறனை அதிகரிக்க இலகு என்பதுடன் உங்களுக்கு மேலும் உதவி தேவைப்படும் பட்சத்தில் எமது ஹொட்லைன் சேவை ஊடாக உங்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒத்துழைப்பும் கிடைக்கும்.    

‘அதிக அன்பிற்குரிய இலக்ரோனிக்ஸ் வர்த்தகநாமம்’ என்ற பெயரை பினான்ஸ் லங்கா மேற்கொண்ட ஆய்விக்கமைய சம்சுங் தொடர்ச்சியாக மூன்றாண்டுகள் வென்றெடுத்தது. இலங்கையின் முதற்தர ஸ்மார்ட் ஃபோன் வர்த்தக நாமமான சம்சுங், இலங்கையின் அனைத்து வயதுகளையும் சேர்ந்த வாடிக்கையாளர்களின் மனங்கவர் தொலைபேசியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: