Eyeview Sri Lanka

‘Sanasro Residencies’ குடியிருப்பாளர்களின் சொகுசான வாழ்க்கைக்கு SLT-Mobitel Fibre மூலம் வலுவூட்டல்

Share with your friend

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, சிரிலக் டிரேடிங் அன்ட் டிவலப்மன்ட் (பிரைவட்) லிமிடெட் உடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதனூடாக சிரிலக் டிரேடிங் நிறுவனத்தின் பிந்திய தொடர்மனைத் தொகுதியான ‘Sanasro Residencies’க்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க SLT-MOBITEL முன்வந்துள்ளது.

சிரிலக் டிரேடிங் பணிப்பாளினி நதீகா திசாநாயக்க, சிரிலக் டிரேடிங் முகாமைத்துவ பணிப்பாளர் நிஷ்சங்க தஹநாயக்க, ஸ்ரீ லங்கா ரெலிகொம் மேல் மாகாண மத்தி பொது முகாமையாளர் சேதன அத்தநாயக்க, ஸ்ரீ லங்கா ரெலிகொம் வியாபார அபிவிருத்தி முகாமையாளர் கெளும் பிரியந்த மற்றும் ஸ்ரீ லங்கா ரெலிகொம் சந்தைப்படுத்தல் அதிகாரி கசுனி தில்ஹாரா ஆகியோர் காணப்படுகின்றனர்.

கொஸ்வத்த பகுதியில் நிறுவப்படும் சிரிலக் டிரேடிங் நிறுவனத்தின் புதிய தொடர்மனைத் தொகுதியாக ‘Sanasro Residencies’ அமைந்துள்ளது. பிரத்தியேகமான முறையில் வடிவமைக்கப்பட்ட 42 அலகுகளைக் கொண்ட இந்தத் தொடர்மனைத் தொகுதி, ‘Wake up in a secure environment to a breathtaking view surrounded by the city highlights the skyline’ எனும் தொனிப் பொருளைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த காட்சியமைப்புகளுடன், சிறந்த வாழ்க்கை முறைக்கு அவசியமான சௌகரியம் மற்றும் சொகுசு ஆகியவற்றை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. ரிசோர்ட் பாணியிலமைந்த நீச்சல் தடாகம், ஜிம் வசதிகள், ஜொகிங் திடல் மற்றும் CCTV மற்றும் தீ அலாரம்கள் போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் Sanasro Residencies கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா ரெலிகொம் மேல் மாகாண மத்தி பொது முகாமையாளர் சேதன அத்தநாயக்க மற்றும் சிரிலக் டிரேடிங் அன்ட் டிவலப்மன்ட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் நிஷ்சங்க தஹநாயக்க ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வில் இரு நிறுவனங்களினதும் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.

நவீன வசதிகள் கொண்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகள் இன்றி எந்தவொரு சொகுசு தொடர்மனையும் பூர்த்தியை எய்தாது என்பதைப் புரிந்து கொண்டு, SLT-MOBITEL உடன் தொடர்பை ஏற்படுத்தி, Sanasro Residencies குடியிருப்பாளர்களுக்கு நவீன தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகளை அணுகுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்துள்ளது. இன்றைய நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த முடிவதுடன், ஸ்மார்ட் இல்ல வசதிகளை கொண்டிருக்கவும் அவர்களுக்கு ஏதுவாக அமைந்திருக்கும்.

SLT-MOBITEL இனால் ஸ்மார்ட் கட்டடத்துக்கு அவசியமான பின்புல கட்டமைப்பு வழங்கப்படுவதுடன், அதனூடாக குடியிருப்பாளர்களின் சாதாரண வாழ்க்கைக்கு எதிர்காலத்தில் முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கல் ஏற்படுத்தப்படும். 


Share with your friend
Exit mobile version