இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத்துறை கூட்டுநிறுவனமான DIMO நிறுவனத்தின் வலுசக்தி பிரிவான DIMO Energy, அதன் ஏழு தசாப்தங்களுக்கும் மேலான நீண்ட கால பங்காளியான Siemens உடன் இணைந்து, உள்நாட்டுக்குள்ளும், ஏற்றுமதி சந்தைகளுக்குமான SIEMENS SIVACON S8, SIEPAN 8PU Low Voltage (LV) Power Distribution Boards மற்றும் Motor Control Centres (MCC) தயாரிப்புகளை உற்பத்தி செய்ய கைகோர்த்துள்ளது.
DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், மின்சக்தி மற்றும் வலுசக்திப் பிரிவிற்குப் பொறுப்பானவருமான விஜித் புஷ்பவெல இது பற்றி கருத்து தெரிவிக்கையில், “இலங்கையிலும் உலக சந்தையிலும் Low Voltage Power Distribution Boards இற்கான அதிக கேள்வியே, DIMO Energy நிறுவனம் Panel உற்பத்தித் துறையில் நுழைவதற்கு காரணமாக அமைந்துள்ளது. உட்கட்டமைப்பு மேம்பாடு, வலுசக்திக்கான கேள்வி அதிகரிப்பு மற்றும் உள்நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை ஊக்குவித்தல் போன்ற அரசாங்க முயற்சிகளை தேசிய ரீதியில் ஈடுசெய்வதை DIMO Energy நிறுவனம் எதிர்பார்க்கிறது. அத்துடன், சர்வதேச அளவில் வளர்ந்து வரும் சந்தைகளுக்குள் நுழைவதையும், உலகளாவிய வலுசக்தி மாற்றத்தில் பங்கேற்பதையும், மேம்பட்ட வலுசக்தி மற்றும் வலுசக்தித் தீர்வுகளை ஏற்றுமதி செய்வதையும் DIMO Energy நோக்கமாகக் கொண்டுள்ளது.” என்றார்.
Siemens உடனான இந்த கூட்டாண்மையானது, நிறுவனத்தின் உற்பத்தித் திறன்களை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதோடு, Siemens வர்த்தகநாமத்தின் கீழ், SIVACON S8 மற்றும் SIEPAN 8PU ஆகியவற்றை தயாரிக்க DIMO Energy இற்கு அனுமதியளிக்கிறது. SIEMENS SIVACON S8 ஆனது, சிக்கலான மற்றும் பாரிய அளவிலான தொழில்துறை பயன்பாடுகளுக்கு ஏற்றதாகும். அதே நேரத்தில் SIEPAN 8PU சிறிய அளவிலான தொழில்துறை பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, மிக உயர்தர உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப இந்த Panel கள் தயாரிக்கப்படுகின்றன. IEC 61439-1 போன்ற சர்வதேச தரங்களுக்கு இணங்கியவாறு, இந்த Panel கள் மக்கள் மற்றும் கட்டமைப்பு ஆகிய இரண்டினதும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதோடு, பல்வேறு பயன்பாடுகளுக்கு மிகவும் பொருத்தமானவையாக காணப்படுகின்றன.
முதற்கட்டமாக, மாலைதீவு, பங்களாதேஷ் மற்றும் ஆப்பிரிக்க பிராந்தியம் போன்ற ஏற்றுமதிச் சந்தைகளில் DIMO Energy அதன் கவனத்தை செலுத்தவுள்ளது.
Siemens இனால் பயிற்றுவிக்கப்பட்ட மிகவும் அனுபவம் வாய்ந்த பொறியியலாளர்களின் திறன்களால் DIMO Energy நிறுவனத்தின் உற்பத்திக்கான நிபுணத்துவம் ஆதரவளிக்கப்படுகிறது. இது LV Panel கள் மிக உயர்ந்த தொழில் தரத்தில் உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்கிறது.
DIMO Energy நிறுவனத்திற்கு அதிநவீன தொழில்நுட்பங்களுக்கான அணுகலை, Siemens உடனான கூட்டாண்மை வழங்குவதுடன், Siemens இன் உலகளாவிய நற்பெயரையும், சந்தையில் அது கொண்டுள்ள அங்கீகாரத்தையும் DIMO Energy நிறுவனத்திற்கு வழங்குகிறது. இந்த மூலோபாய ஒத்துழைப்பானது, நவீன மின் விநியோக கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் செயற்படுத்துதல், உரிய மின் விநியோகம், நஷ்டத்தைக் குறைத்தல் மற்றும் நாடு முழுவதும் நம்பகமான மின்சாரத்தை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளைக் கொண்டுவருகிறது. மேலும் இது புத்தாக்க தயாரிப்பு கண்டுபிடிப்புகளுக்கு அப்பால் சென்று திறன் மேம்பாடு மற்றும் அறிவு பரிமாற்றத்திற்கும் பங்களிப்புச் செய்கிறது. நவீன வலுசக்தி மற்றும் வலுசக்திக் கட்டமைப்புகளை நிர்வகிக்க உள்ளூர் தொழில்வல்லுநர்கள் மற்றும் பொறியியலாளர்களிடையே நிபுணத்துவத்தை வளர்ப்பதன் மூலம், தொழில்துறையை மேம்படுத்தப்படுகிறது.
Siemens உடனான DIMO நிறுவனத்தின் நீண்ட கால பங்காளித்துவத்தின் மைல்கற்களாக, 1958 இல் சுன்னாகத்தில் முதலாவது மின்னுற்பத்தி நிலையத்தை நிறுவியமை மற்றும் 1995 இல் Grid துணை மின்னுற்பத்தி நிலையத்தை அமைத்தமை போன்றவற்றைக் குறிப்பிடலாம். 2019 இல் DIMO-Siemens கூட்டு முயற்சியின் முன்னெடுப்பு மற்றும் 2020 இல் Siemens உடன் இணைந்து DIMO Lumin Power Panel ஒன்றிணைத்தல் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டமை ஆகியனவற்றை இந்தப் பயணத்தின் அண்மைய மைல்கற்களாக குறிப்பிடலாம்.
இந்த சமீபத்திய மூலோபாய கூட்டாண்மை மூலம், பாதுகாப்பான மற்றும் உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்யும் புத்தாக்கமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் DIMO Energy ஆனது முன்னணியில் திகழ விரும்புகிறது. எதிர்காலத்தில், இலங்கையின் முன்னணி LV power distribution board உற்பத்தியாளராக மாறும் நோக்கத்துடன், பரந்த அளவிலான சர்வதேச சந்தைகளை கவரும் வகையில் தனது பிரசன்னத்தை விரிவுபடுத்த DIMO Energy திட்டமிட்டுள்ளது.