SLAM Power Solutions தனியார் நிறுவனத்துக்கு சிறந்த சேவை வழங்குநருக்கான BWIO விருது

Share with your friend

இலங்கையின் புதுப்பிக்கத்தக்க மற்றும் நிலைபேறான வலுசக்தி துறைக்கு ஏற்புடைய உற்பத்தி மற்றும் சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமான SLAM Power Solutions தனியார் நிறுவனம் Business World International Organization அமைப்பு ஏற்பாடு செய்து BWIO விருது விழாவில் வலுசக்தி/புதுப்பிக்கதக்க சக்தி பிரிவின் பாரியளவிலான பிரிவின் சிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்குநருக்கான பிளெடினம் விருதை வென்றுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் தலைமையில் தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற விருது விழாவில் மேற்படி நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு மனோஜ் தாரக்க மற்றும் உதவிப் பொது முகாமையாளர் திரு லஹிரு உதயங்க ஆகியோர் விருதை பெற்றுக் கொண்டனர்.

2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட SLAM Power Solutions இன்றளவில் இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தி துறையின் முன்னணி நிறுவனமாகும். FIMER S.P.A (இத்தாலி), VICTRON Energy (நெதர்லாந்து), ABB (சுவிட்சலாந்து) மற்றும் ENERSYS (அமெரிக்கா ஐக்கிய இராச்சியம்) ஆகிய நிறுவனங்களின் அதிகாரம் பெற்ற பங்காளர் மற்றும் சேவை வழங்குநராக செயற்படுகின்ற மேற்படி நிறுவனம் உயர் தரத்திலான உற்பத்தி மற்றும் சேவைகளை வழங்கி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெரியளவில் வென்றுள்ளது. ABB, FIMERVICTRON, JINKO மற்றும் ENERSYS போன்ற உலகப் புகழ் பெற்ற வர்த்தகநாமங்களின் கீழ் உற்பத்தி செய்யப்படுகின்ற ஏராளமான உற்பத்திகளை நிறுவனம் சந்தைப்படுத்துகிறது. வீடமைப்பு, வணிக மற்றும் கைத்தொழில் கட்டடங்கள், பயன்பாட்டு மற்றும் மைக்ரோகிரீட் போன்ற பிரிவுகளுக்குரிய புதுப்பிக்கத்தக்க மற்றும் நிலைபேறான சக்திக்கு பொருத்தமான உற்பத்திகளை சந்தைப்படுத்தி வரும் SLAM Power Solutions பரந்துபட்ட துறைகளை சேர்ந்த ஏராளமான வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குகிறது. அவற்றில் Smart Solar Inverters, Solar PV Modules, Hybrid / Off-Grid Inverters மற்றும் Battery / Energy Storage சார்ந்த உற்பத்திகள் பிரதான இடத்தை வகிக்கின்றன. அச்சகல உற்பத்திகளும் உயர் தரத்திலான தொழில்நுட்பம் மற்றும் வினைத்திறனை கொண்ட தர நியமங்களுக்குட்பட்டவை ஆகும். அனுபவமிக்க பொறியியலாளர்களுடன் கூடிய முழுமையான வசதிகளை கொண்ட பழுதுநீக்கல் நிலையமொன்றையும் கொண்டுள்ள இந்நிறுவனம் நாளுக்கு நாள் மாறி வரும் வலுசக்தி தேவைகளுக்கு மிகவும் உகந்த உற்பத்திகளை வழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply