SLIIT நிபுணத்துவ மேம்பாட்டுத் திட்டங்கள் பங்கேற்பாளர்களுக்குப் புதிய அறிவு மற்றும் திறனை வழங்கி எதிர்கால வாழ்க்கையை உருவாக்க உதவுகிறது

Share with your friend

மாறிரும் உலகம் மற்றும் எதிர்கால தொழிலுக்கு சிறந்த அறிவு மற்றும் திறனை வழங்கும் வகையில் SLIIT நிபுணத்துவ மேம்பாட்டுத் திட்டம் (Professional Development (PDP)) நிகழ்ச்சித் திட்டம் பெருநிறுவன வாடிக்கையாளர்கள் மற்றும் மாணவர்களுக்குத் தொழில்துறை சான்றிதழ் குறுகியகால பாடத்திட்டம் மற்றும் செயலமர்வுகளை வழங்குகிறது. 

தகவல் தொழில்நுட்பம், வணிகம் மற்றும் பொறியியல் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் SLIIT  நிபுணத்துவ மேம்பாட்டுத் திட்டம் ஆனது ஒரு நாள் செயலமர்வு முதல் இரண்டு வருடத் திட்டம் வரை பரந்துபட்ட அளவில் திறனை வழங்குகிறது. PDP திட்டமானது மாணவர்கள், பெருநிறுவனத் துறையினர், முப்படையினர், பொது நிறுவனங்கள், மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர் தமது தொழிலை மீண்டும் கண்டுபிப்பதற்கு தமக்குக் காணப்படும் திறனை மேலும் வளர்ப்பதற்கு அல்லது புதிய அறிவைப் பெற்றுக் கொள்வதற்கு இது வழிவகுக்கிறது. 

SLIIT  நிபுணத்துவ மேம்பாட்டுத் திட்டமானது பங்குபற்றுபவர்களுக்குத் தற்பொழுது காணப்படும் மாறிவரும் வேலைத்தளம் அல்லது வணிக உலகத்திற்குத் தேவையான தொழில்துறை சார்ந்த பெறுமதிசேர் திறன்களைப் பெற்றுக்கொள்ள வழியேற்படுத்துகிறது. குறிப்பாக இளங்கலைமானிப் பட்டப் படிப்பு அல்லது தொழில் சார்ந்த தனிநபர் திட்டத்தில் ஏற்கனவே சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, SLIIT  PDP பாடநெறிகள் புகழ்பெற்ற நிறுவனத்தில் இருந்து வழங்கப்படும், அவர்களின் எதிர்காலப் பயணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடி வகையில் உத்திகள் வழங்கப்படுகின்றன. 

இன்றைய உலகத்தில் வெற்றிகரமாக இருப்பதற்குத் தேவையான திறன் மற்றும் நிபுணத்துவத்தை வழங்கும் வகையில் இன்றுவரை SLIIT  PDP ஆனது 25ற்கும் அதிகமான பாடநெறிகளை வழங்கி வருகிறது. மிகவும் பிரபல்யம் மிக்க பாடநெறிகள் Oracle Certified Java Program, Graphic Design and Multimedia Program, Web Development Program, Software Quality Assurance Professional Program, CCNA Routing and Switching V7, Certificate Program in IT Applications, Project Management, Digital Marketing Program, Certificate in Microsoft Office-Batch, Cyber Security and Digital Forensics Program, Certificate Programme in Python – 3 and AWS Academy Cloud Foundations Programmeஆகியவற்றை உள்ளிடக்கியதாக முன்னெடுக்கப்படுகின்றன. 

மேலும், தனிப்பயனாக்கப்பட்ட செயலமர்வுகள் தனிப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. முன்னதாக HSBC, கல்வித் துறை, ஓய்வூதியத் திணைக்களம் உள்ளிட்ட அரசாங்க அமைச்சுக்கள் போன்ற பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்காக SLIIT  PDP தனிப்பயனாக்கப்பட்ட அமர்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.

PDP பாடநெறிகள் முக்கியமாக கொழும்பில் உள்ள SLIIT  மெட்ரோ வளாகத்தில் நடத்தப்படுகின்றன, தற்போது திட்ட முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டம் மாலபேயிலுள்ள பிரதான வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. PDP அமர்வுகள் கண்டி மற்றும் மாத்தறை வளாகங்களிலும் நடத்தப்படும் அதேநேரம், சில தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சிகள் யாழ்ப்பாணம் மற்றும் குருநாகலில் நடத்தப்படுகின்றன. தொற்றுநோய் மற்றும் தற்போதைய சூழ்நிலை காரணமாகப் பெரும்பாலான கற்பித்தல் செயற்பாடுகள் ஒன்லைனில் நடத்தப்படுகின்ற போதும், வேண்டுகோள்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் SLIIT  பங்கேற்பாளர்கள் பாடநெறிகளில் நேரில் கலந்துகொள்வதற்கான தெரிவையும் வழங்குகிறது.

எந்தவொரு மாணவரும் 16 வயதைப் பூர்த்திசெய்திருந்து, குறைந்தபட்ச தேர்ச்சியுடன் க.பொ.த சாதாரணதத்தைப் பூர்த்தியடைந்திருந்தால் PDP திட்;டத்தைத் தொடரக் கூடிய வகையில் இதன் நுழைவுத் தேவை எளிமையாகக் காணப்படுகிறது. நிபுணத்துவம் கொண்ட SLIIT  விரிவுரையாளர் குழுவினால் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேநேரம் பாடத்திட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு தொழில்துறையில் ஆழமான புரிதலைக் கொண்ட வருகைதரு விரிவுரையாளர்கள் மற்றும் தொழில்துறை விற்பன்னர்களிடமிருந்தும் அறிவுறுத்தல்ள் வழங்கப்படும்.

PDP திட்டத்தை மேலும் மெருகூட்டும் வகையில் எதிர்காலத்தில் NVQ தரம் 3 திட்டங்களை வழங்குவதை SLIIT  நோக்காகக் கொண்டுள்ளது. மாணவர்கள் ஆகக் கூடியது இரண்டு வருட காலப் பகுதியில் டிப்ளோமா திட்டத்தைப் பூர்திசெய்ய முடிவதுடன், NVQ தரம் 4ற்குச் செல்ல முடியும். SLIIT  PDP ஆனது, தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு பராமரிப்பாளர் திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளது. SLIIT  PDP திட்டத்துக்கான கட்டணங்கள் 5,000 ரூபா முதல் 100,000ரூபா எல்லையிலேயெ காணப்படுகின்றன.

தொடர்பான மேலதிக தகவல்களை https://www.sliit.lk/professional-programms/என்ற இணையத்தளத்தின் ஊடாக அல்லது 077 330 00 66 அல்லது 077 965 73 99 என்ற தொiபேசி இலக்கங்களின் மூலம் மற்றும் pdpcontact@sliit.lk என்ற மின்னஞ்சல் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும். 


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply