Site icon Eyeview Sri Lanka

SLIIT பிஸ்னஸ் ஸ்கூல், நிலைபேறான மற்றும் டிஜிட்டல் வணிகம் 2022 தொடர்பான முதலாவது சர்வதேச மாநாட்டை நடத்துவதுடன், சிறந்த விருதுகளுடன் முயற்சிகளை அங்கீகரிக்கிறது

Share with your friend

தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஆய்வுகளை நடத்துதல் மற்றும் அறிவைப் பரப்புவது என்ற நோக்கத்தைத் தொடரும் வகையில் SLIIT பிஸ்னஸ் ஸ்கூல், டிசம்பர் 01 மற்றும் டிசம்பர் 02ஆம் திகதிகளில் நிலைபேறான மற்றும் டிஜிட்டல் வணிகம் 2022 சர்வதேச மாநாட்டை International Conference on Sustainable and Digital Business 2022 (ICSDB) நடத்துகிறது. நிலைபேறான மற்றும் டிஜிட்டல் வணிக முயற்சிகளுக்கு வழங்கிய ஒத்துழைப்புக்களை அங்கீகரிக்கும் வகையில் தெரிவுசெய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கு ICSDB சிறப்பு விருதுகளும் இம்மாநாட்டில் வழங்கப்படவுள்ளமை தனித்துவமான முன்னுதாரணமாகும். 

உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்கள் மற்றும் பயிற்சி செய்பவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள், நடைமுறைகள், கருத்துகள் மற்றும் சவால்களை ஒத்த எண்ணம் கொண்ட பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ள ‘டிஜிட்டல் நிலைப்புத்தன்மையை நோக்கி’ என்ற தொனிப்பொருளில் நடைபெறும் இந்த இரு நாள் அங்குரார்ப்பண மாநாடு உதவியாக இருக்கும்.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் புகழ்பெற்ற முக்கிய பேச்சாளர்கள் வரிசையில் எக்செட்டர் பல்கலைக்கழகத்தின் (Exeter University) சிறப்புநிலைப் பேராசிரியர் ஜோன் பெசன்ட், கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் (University of Cambridge) பிஸ்னஸ் ஸ்கூலின் பேராசிரியர் ஜெய்தீப் பிரபு, பெர்பெக் லண்டன் பல்கலைக்கழகத்தின் (Birkbeck, University of London) பேராசிரியர் முத்து.டி சில்வா ஆகியோர் அடங்கியுள்ளனர். பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ், SLIIT மாலபே கம்பஸின் பிரதான கேட்போர் கூடம் என்பவற்றில் இந்த இரண்டு நாள் மாநாடு நடைபெறுகிறது. 

இந்த மாநாடு பல்வேறு தொழில் துறைகளைச் சேர்ந்த முன்னணி CXOக்கள் மற்றும் பயிற்சிபெற்ற முகாமையாளர்கள் மாத்திரமன்றி இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்களை ஈர்க்கும் வகையில் அமையும் என்பதுடன், நிலையான மற்றும் டிஜிட்டல் வணிகத்தின் கருப்பொருள்களின் கீழ் தங்கள் நுண்ணறிவு, வெற்றிக் கதைகள் மற்றும் ஆராய்ச்சியின் முடிவுகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு தளமாகவும் இது அமையும். 

இந்த மாநாடு தொடர்பில் SLIIT பிஸ்னஸ் ஸ்கூலின் பிடாதிபதி பேராசிரியர் சமந்தா தெலிஜ்ஜகொட கருத்துத் தெரிவிக்கையில், ICSDB ஆனது போக்கை நிர்ணயிக்கும் ஒன்றாகவும், எதிர்வரும் வருடங்களில் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் மாநாடாகவும் அமையும் என்றார். இந்த மாநாட்டின் ஒவ்வொரு அம்சத்திலும் காணப்படும் வித்தியாசம் மற்றும் அவற்றின் தரம் என்பன நிச்சயம் இதனை நினைவில் பதியும் நிகழ்வாக மாற்றும் என அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.

புதுப்புனைவுத் திறன், தொடர்ச்சியான தன்மை, நோக்கம், நடைமுறைப்படுத்தல் மற்றும் நன்மைகள் போன்ற விடயங்களில் ICSDB சுட்டெண் அளவுகோல்களின் கீழ் டிஜிட்டல் வர்த்தக முயற்சியை ஆரம்பித்து பல்வேறு பங்குதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில் செயற்பட்டுள்ள இலங்கை நிறுவனங்களை அங்கீகரிப்பதை நோக்கமாக டிசம்பர் 01ஆம் திகதி ICSDB சிறப்பு விருதுகள் வழங்கப்படவுள்ளன. தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய பிரிவுளின் கீழ் ICSD சிறப்பு விருதுகள் வழங்கப்படவுள்ளன. தொழில்துறையில் உள்ள பயிற்சிபெற்ற முகாமையாளர்கள், தொழில்துறையின் பிரதிநிதிகள், கல்வியியலாளர்கள் உள்ளிட்ட நிபுணத்துவம் மிக்கவர்களை உள்ளடக்கிய நடுகவர்கள் குழு வெற்றியாளர்களைத் தெரிவுசெய்துள்ளது.

முதலாவது ICSDB மாநாட்டின் பிரதான அனுசரணையாளராக சம்பத் வங்கி இணைந்திருப்பதுடன், டிஜிட்டல் புத்தாக்கப் பங்காளராக Enadoc நிறுவனமும், CodeGen International மற்றும் சியாம் சிட்டி சீமெந்து ஆகியன தங்கப் பிரிவின் கீழ் அனுசரணையாளர்காளகவும், CIMA Sri Lanka மற்றும் Unitech Labs ஆகியன வெள்ளிப் பிரிவின் கீழ் அனுசரணையாளர்களாகவும் இணைந்துள்ளனர். மாநாட்டின் உத்தியோகபூர்வ பத்திரிகை அனுசரணையாளராக Daily FT பத்திரிகையும், கல்விசார் பங்காளராக Emerald Publishing நிறுவனமும் இணைந்துள்ளன. 

SLIIT என அறியப்படும் இலங்கை தககவல் தொழில்நுட்ப நிறுவனம் 1999ஆம் ஆண்டு நிறுவப்பட்டதுடன், இலங்கையிலுள்ள அரச சார்பற்ற பல்கலைக்கழங்களில் அதிக மாணவர்களை உருவாக்கியதாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது கணினி, வணிகம், பொறியியல், கட்டடவடிவமைப்பு, மனிதநேயம் மற்றும் சமூக விஞ்ஞானம் ஆகிய துறைகளில் இளமானி, முதுகலைமானிப் பட்டப் பாடநெறிகளை வழங்கி வருகிறது. உயர்தரப் பத்திரிக்கைகளில் வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை, சர்வதேசப் பல்கலைக்கழகங்களுடனான உறவுகள் மற்றும் தரமான பட்டதாரிகளின் வெற்றியின் மூலம் பிராந்திய ரீதியாகப் பெற்றுள்ள நற்பெயர், அறிவு சார்ந்த பல்கலைக்கழகமாக மாறுவதற்கான SLIIT இன் முயற்சிகள் ஆகியவை இதற்கு வலுவான சான்றுகளாக அமைகின்றன.


Share with your friend
Exit mobile version