இலங்கையில் முன்னெடுக்கப்பட்டிருந்த சிறந்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் முயற்சிகளை கௌரவிக்கும் வகையில் The SLIM DIGIS 2.4 விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது, சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சிக்கு (CDB) இரு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. சமூக பொறுப்புணர்வு நோக்கு – அடிப்படையிலான சந்தைப்படுத்தல் திட்டத்துக்காக eShift க்கு வெள்ளி விருதும், நிலையான வைப்பு ஊக்குவிப்பு பிரச்சாரத் திட்டமான ‘Deposit Like No Other’ என்பதற்காக வங்கியியல்/நிதியியல் பிரிவில் சிறந்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் திட்டத்துக்கான வெண்கல விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

இந்த விருதுகள் வழங்கும் இரவு நிகழ்வில், நிலைபேறாண்மை, புத்தாக்கம் மற்றும் அர்த்தமுள்ள வாடிக்கையாளர் ஈடுபாடு போன்றவற்றில் தொடர்ந்தும் இடைவெளிகளை நிவர்த்தி செய்வது என்பதில் CDB காண்பித்திருந்த அர்ப்பணிப்பு கௌரவிக்கப்பட்டிருந்தது. வெள்ளி விருதை வென்ற eShift திட்டம், அறிவு பகிர்வு, EV charging மற்றும் EV மாற்றம் போன்றவற்றில் EV வெளிப்படுத்தியிருந்த பரந்த கட்டமைப்பாக அமைந்திருந்தது. நாட்டினுள் நிலைபேறான போக்குவரத்து தீர்வுகளை துரிதமாக மேம்படுத்துவதற்கான CDB இன் உறுதியான அர்ப்பணிப்பை இந்த வெற்றி வெளிப்படுத்தியிருந்தது. வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தொடர்பாடல் திட்டமாக அமைந்திருந்த நிலைபேறான வைப்புகளுக்கான Deposit Like No Other என்பதற்கு வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. பெருமளவு போட்டிகரத்தன்மை வாய்ந்த சூழலில் சந்தையில் வரவேற்பைப் பெற்றமைக்காக இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் திட்டங்களை அறிமுகம் செய்திருந்ததனூடாக, CDB இனால் அதன் வியாபார இலக்குகள் வெற்றிகரமாக எய்தப்பட்டிருந்ததுடன், வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள நீண்ட தாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
CDB இன் பிரதம விற்பனைகள் மற்றும் டிஜிட்டல் வியாபார அதிகாரியான ஹசித தசநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “CDB இனால் முன்னெடுக்கப்பட்ட நோக்கத்துக்கமைவான சந்தைப்படுத்தல் திட்டங்களுக்கு இந்த பெருமைக்குரிய விருதுகள் கிடைத்துள்ளமை உண்மையில் மகிழ்ச்சியளிக்கின்றன. சிறந்த வாடிக்கையாளர் புரிந்துணர்வினூடாக இந்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் சூழல் வழிநடத்தப்பட்டிருந்தது. சந்தைப்படுத்தலுக்காக டிஜிட்டல் கட்டமைப்புகளை பயன்படுத்துவது அதிகரித்திருந்தமையினூடாக தொடர்பாடல் தகவல்களை சுலபமாக கொண்டு செல்ல முடிந்திருந்தது. CDB இன் தெளிவான, நோக்குடைய தகவல் பரிமாற்ற சந்தைப்படுத்தல் திட்டத்தினூடாக, வாடிக்கையாளர்களின் பெறுமதிகளுடன் பொருந்துவது வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், தாக்கம் நிறைந்த, நீடித்திருக்கும் இணைப்புகளை கொண்டிருந்தது.” என்றார்.
இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தினால் (SLIM) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த SLIM DIGIS விருதுகளினூடாக, இலங்கை முழுவதிலும் சிறந்த டிஜிட்டல் சந்தைப்படுத்தல் முயற்சிகள் கௌரவிக்கப்பட்டிருந்தன. அதனூடாக, நாட்டின் தொடர்ச்சியான முன்னோக்கிய பயணம் வெளிப்படுத்தப்பட்டதுடன், இலங்கையின் டிஜிட்டல் கட்டமைப்பின் தரமும் உயர்த்தப்பட்டிருந்தது. இந்த விருதுகளினூடாக CDB இன் வர்த்தக நாம அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், விழிப்புணர்வு, உரையாடல்கள் மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாடு போன்றவற்றை முன்னெடுப்பதற்கு டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் கொண்டுள்ள அர்ப்பணிப்பும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
நிலைபேறாண்மை மற்றும் சமூக தாக்கம் ஆகியவற்றில் CDB இன் கூட்டாண்மை வழிநடத்தல் என்பது இந்த விருதுகளினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளன. தொழில்நுட்ப புரட்சியில் நிறுவனத்தின் உறுதியான கவனம் செலுத்துகையினூடாக, நாட்டின் சில முதல் புத்தாக்க அம்சங்களை வெளிப்படுத்த வழிகோலியுள்ளதுடன், இலங்கையில் காணப்படும் சிறந்த நான்கு வங்கிசாரா நிதிச்சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் வரிசையில் CDB க்கு தலைமைத்துவத்தை கொண்டிருக்கவும் உதவியுள்ளது. அர்த்தமுள்ள வாடிக்கையாளர் ஈடுபாட்டில் தாக்கம் செலுத்தும் சமூக பொறுப்பு வாய்ந்த சந்தைப்படுத்தல் தீர்வுகளை உருவாக்கியுள்ளதனூடாக, மக்கள், புவி, இலாபம் என்பவற்றில் கவனம் செலுத்தும் CDB இன் உறுதியான பயணம் மேலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.