தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL இன் முழு உரிமையாண்மையில் இயங்கும் SLT Digital Services (Pvt) Limited (SLT-DIGITAL), வருட இறுதி வாடிக்கையாளர் அமர்வை ‘Connecting Businesses to Grow’ எனும் தலைப்பில் ஏற்பாடு செய்திருந்தது. டிஜிட்டல் நாளிகைகளினூடாக வியாபாரங்களுக்கு நிலைபேறாண்மையை எய்தக் கூடிய வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த அமர்வு அமைந்திருந்தது.
இலங்கையின் பெருமளவான வியாபார தொழில்முயற்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தனர். நாட்டின் வளர்ச்சியில் பங்களிப்புச் செலுத்தும் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களின் முக்கியத்துவத்தைக் கவனத்தில் கொண்டு, அந்த வியாபாரங்களுக்கு தமது தினசரி செயற்பாடுகளை அதிகளவு வினைத்திறனான வகையில் முன்னெடுப்பதற்கு உதவக்கூடிய தீர்வுகளை SLT-DIGITAL காட்சிப்படுத்தியிருந்தது.
SLT-DIGITAL இனால் வியாபாரங்களுக்கு தமது டிஜிட்டல் பிரசன்னத்தை வலிமைப்படுத்தி, டிஜிட்டல் சந்தையில் மாற்றியமைப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. அதனூடாக, உயர்தர ஒன்லைன் ஊக்குவிப்புப் பிரச்சாரத்திட்டங்களை முன்னெடுப்பது, செயன்முறைகளை தன்னியக்கமயப்படுத்தும் ஆற்றல், உறுதியான வாடிக்கையாளர் உறவுகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பல் மற்றும் உயர் தரமான இணைப்புத்திறன் தீர்வுகள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.
பெறுமதி சேர்ப்பு செயன்முறையின் அங்கமாக, டிஜிட்டல் விபரக்கோவைகள், இணையத்தள வடிவமைப்புகள், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், ஆக்கபூர்வ பொருளடக்கங்கள், Automobile.LK டிஜிட்டல் விபரக்கோவை உள்ளம்சங்கள் மற்றும் FortArc கேமிங் கட்டமைப்பு போன்றன பற்றியும் வாடிக்கையாளர்களுக்கு விளக்கப்பட்டிருந்தன.
SLT Digital Services (Pvt) Ltd இன் பிரதம நிறைவேற்று அதிகாரி உபுல் மஞ்சநாயக்க பிரதான விளக்கவுரையின் போது, நிறுவனத்தின் வியாபார மாற்றியமைப்பு மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுவதற்காக தமது தீர்வுகளை மீளக்கட்டமைத்திருந்தமை தொடர்பில் உரையாற்றியிருந்தார். SLT-MOBITEL குழுமத் தவிசாளர் ரொஹான் பெர்னான்டோவும், தற்போதைய வியாபாரங்களின் உள்ளம்சம் தொடர்பில் தமது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்ததுடன், நுண், சிறு,நடுத்தர மற்றும் பாரியளவு வியாபாரங்களுக்கு சேர்க்கப்படும் பெறுமதி சேர்ப்பு தொடர்பிலும் விளக்கமளித்திருந்தார். குழும பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் செனெவிரட்ன மற்றும் குழும நிதி அதிகாரி சஞ்ஜீவ சமரநாயக்க ஆகியோரும் வாடிக்கையாளர்களுடன் சந்திப்புகளை ஏற்படுத்துவதற்காக பிரசன்னமாகியிருந்தனர்.
B2B வியாபாரப் பிரிவில் எதிர்காலத்தில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய முறைகள் தொடர்பில் குரூப் ஸ்மார்ட் சொலுஷன்ஸ் பொது முகாமையாளர் கல்ஹார கமகே, ‘Transformed Product Portfolio of Digital Directories and e-Commerce capabilities for B2B’ எனும் தலைப்பில் விளக்கமளித்திருந்ததுடன், டிஜிட்டல் விபரக்கோவையான automobile.lk இன் ஆற்றல்கள் தொடர்பில் வர்த்தக அபிவிருத்தி மற்றும் நிகழ்வுகளுக்கான சிரேஷ்ட பொது முகாமையாளர் ருவன் விஜேதுங்க விளக்கமளித்திருந்தார்.
ஷெர்ரி பேக்கரி இக்யுப்மன்ட் சப்ளையர்ஸ் (பிரைவட்) லிமிடெட் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ருஹாரா கன்கானிகே, SLT-DIGITAL வியாபார விபரக் கொத்தினால் வழங்கப்பட்ட சேவைகளினூடாக தமது சொந்த நிறுவனத்தின் முன்னேற்றங்கள் மற்றும் அனுகூலங்கள் தொடர்பான உள்ளம்சங்களை வழங்கியிருந்தார்.
SLT Digital உடன் ஈடுபாட்டைப் பேணும் வியாபாரங்களுக்கு, SLT-MOBITEL இனால் வழங்கப்படும் ஈடுபாட்டுக்கு மேலதிகமாக, பல்வேறு டிஜிட்டல் மற்றும் விளம்பர சேவைகளுக்கான ஒரே சேவை வழங்குநரின் பல்வேறு அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
விளம்பரத்துறைக்கு ஒப்பற்ற திரண்ட தயாரிப்புகள் வழிமுறையை வழங்கும் டிஜிட்டல் சேவை வழங்குநராக SLT Digital திகழ்கின்றது. இதன் ஒன்லைன் தளமான http://www.rainbowpages.lk இனால் தினசரி 10,000 ஒன்லைன் விருந்தினர்கள் பதிவு செய்யப்படுகின்றனர். வியாபாரங்களுக்கு தமது பிரசன்னத்தை மேலும் வியாபித்துக் கொள்ளக்கூடிய வகையில், அச்சிடப்பட்ட விபரக்கொத்து, டிஜிட்டல் விபரக்கொத்து, மொபைல் App, eBook, அழைப்பு நிலையங்கள் (SLT 1212, Mobile 444), IVR ஊக்குவிப்புகள், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், சமூக ஊடக விளம்பரம் மற்றும் இணையத்தள வடிவமைப்பு போன்றனவும் காணப்படுகின்றன. மேலும், பட்டியலிடப்பட்ட சப்ளையர்களுக்கு அரசாங்கத்தின் விலைமனுக்கோரல்களுக்கு விலைமனுக்களை சமர்ப்பிப்பதற்கான தகைமையும் கிடைக்கும்.
மேலதிக தகவல்களுக்கு அழைப்பு நிலையத்துடன் 1212 உடன் அல்லது 0112 399 399 உடன் தொடர்பு கொள்ளலாம். அல்லது www.rainbowpages.lk எனும் இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.