SLT-MOBITEL இன் கல்விப் பிரிவான SLT Training Centre (SLTTC)இனால் மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த BEng (Hons) பட்டக்கற்கைகளை தொடரும் வகையில் University of Hertfordshire UK உடன் கைகோர்த்துள்ளது. இதனூடாக பொறியியல் சவால்களுக்கு மாணவர்கள் முகங்கொடுக்கும் வகையில் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு தீர்வுகளை வடிவமைக்கும் வகையில் அறிவை மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

University of Hertfordshire இனால் பெருமைக்குரிய BEng (Hons) பட்டக் கற்கையை தொடர்வதற்கு, ஆகஸ்ட் மாத மாணவர் ஆட்சேர்ப்பில் இணைந்து கொள்ளுமாறு SLTTC மாணவர்களை அழைத்துள்ளது. இந்தக் கற்கை இலங்கையில் நவீன வசதிகள் மற்றும் தொழில்நுட்ப ஜாம்பவானாகிய SLT-MOBITEL இன் தொழில்நுட்ப வசதிகளையும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
மேலும், தெற்காசிய பிராந்தியத்தில் University of Hertfordshire இன் BEng (Hons) பொறியியல் பட்டக் கற்கைகளை வழங்கும் ஏக அங்கீகாரத்தை SLTTC கொண்டுள்ளதுடன், ISO 9001:2015 கடுமையான நியம சான்றிதழ்களின் பிரகாரம் செயலாற்றுகின்றது.
வொஷிங்டன் அக்கோர்ட்டினால் Electrical Electronic Engineering பிரிவில் ஐக்கிய இராஜ்ஜியத்தில் காணப்படும் 21ஆவது பல்கலைக்கழகமாக University of Hertfordshire தரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சிறந்த கற்பித்தல், வசதிகள் மற்றும் வியாபார பங்காண்மைகளைக் கொண்ட பல்கலைக்கழகமாகவும் அமைந்துள்ளது. இதனூடாக மாணவர்களுக்கு திறன்கள், அறிவு மற்றும் தொழில்முயற்சியாண்மை பண்புகள் போன்றன வழங்கப்படுகின்றன. இதனூடாக மாணவர்களுக்கு இலகுவாக தாம் தெரிவு செய்யும் துறைகளில் தமது தொழில் வாழ்க்கையை வெற்றிகரமாக முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும்.
University of Hertfordshire இனூடாக மாணவர்களுக்கு BEng (Hons) in Electrical and Electronic Engineering, BEng (Hons) in Electronics and Communication Engineering and BEng (Hons) in Electronics and Computer Engineering பொறியியல் துறையில் பட்டங்களைத் தொடர்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
இந்தப் பாடவிதானத்தினூடாக மாணவர்களுக்கு இலத்திரனியல் கொள்கைகள் பற்றிய அறிவைக் கட்டியெழுப்பிக் கொள்ள முடிவதுடன், தமது கனவுத் தொழில்நிலைகளை எய்துவதற்கு அவற்றை அடித்தளமாக்கிக் கொள்வதற்கு ஏதுவாக அமைந்திருக்கும். பட்டப்படிப்பை பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு தமது திறனை மேம்படுத்திக் கொள்வதற்காக, ஆறு மாதகால தொழிற்துறை பயிற்சித் திட்டத்தை தொடரும் வாய்ப்பு SLT-MOBITEL இனால் வழங்கப்படும்.
மாணவர்களுக்கு தமது இலக்குகளை எய்த ஆதரவளிக்கும் வகையிலும், நிதி சுமையையும் கவனத்தில் கொண்டு, University of Hertfordshire UK இல் மாஸ்டர்ஸ் கற்கையை தொடர்வதற்கு 20 சதவீதம் விலைக்கழிவு வழங்கப்படும்.
BEng (Hons) கற்கை மற்றும் மாஸ்டர்ஸ் கற்கையை மாணவர்கள் பூர்த்தி செய்ததன் பின்னர், மாணவர்களுக்கு ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் அவுஸ்திரேலியாவில் இரண்டு வருடங்களுக்கான தொழில்புரியும் வீசாவைப் பெற்றுக் கொள்ளும் தகைமை கிடைக்கும்.
மேலும், SLTTC இனால் க.பொ.த உயர் தர பெறுபேறுகளின் அடிப்படையில் 30% வரையான புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. ஆர்வமுள்ள மாணவர்கள் முதல் வருடத்துக்கான கற்கைநெறியைத் தொடர தமது க.பொ.த. உயர்தரப் பெறுபேறுகளுடன் ஆரம்பிக்கலாம். மேலும், NDT, NDES, HNDE போன்ற பொறியியல் டிப்ளோமாக் கற்கைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு, பல்கலைக்கழகத்தின் அனுமதி தேவைப்பாடுகளின் பூர்த்தியின் அடிப்படையில், கற்கைநெறியின் முதல் மற்றும் இரண்டாம் வருட கற்கைகளுக்கான தவிர்ப்புகளை பெறும் தகைமைகளை கொண்டிருப்பார்கள்.
தற்போது, இலங்கையில் காணப்படும் முன்னணி கல்வியகங்களில் ஒன்றாக SLT Training Centre ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், இளம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிபுணர்களின் விருத்திக்காக பெருமளவு பங்களிப்பை வழங்கி, தேசத்தை தொழில்நுட்ப மையமாக மாற்றுவதற்கு அவசியமான பங்களிப்பை வழங்குகின்றது. University of Hertfordshire இன் BEng (Hons) பட்டக் கற்கை இதற்கு ஆதரவளிப்பதாக அமைந்திருப்பதுடன், சிறந்த உள்நாட்டுச் சூழலில் இந்த சர்வதேச தகைமையை பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அமைந்திருக்கும்.
மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் 0112956633 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.slt.lk/training எனும் இணையத்தளத்தைப் பார்க்கலாம்.