Eyeview Sri Lanka

SLT-MOBITEL இன் eSim சேவைகளுடன் ஒப்பற்ற அனுகூலங்கள் வழங்கப்படுகின்றன

Share with your friend

SLT-MOBITEL தனது நவீன eSIM சேவையுடன் வலையமைப்பில் இணைந்து கொள்வதற்கான இலகுவான மற்றும் ஒப்பற்ற வசதியை வழங்குகின்றது. SLT-MOBITEL இன் ஒப்பற்ற 4G இணைப்புத்திறன் மற்றும் நாடளாவிய பரந்த வலையமைப்பு போன்றவற்றினூடாக, வாடிக்கையாளர்களுக்கு சில நிமிடங்களினுள் எங்கிருந்தாலும் இணைந்து கொள்ளக்கூடிய வசதியை வழங்குகின்றது.

SLT-MOBITEL eSIM இனால் SIM அட்டை ஒன்றை கொண்டிருக்க வேண்டிய தேவை இல்லாமல் செய்யப்படுவதுடன், புதிய வாடிக்கையாளர்களுக் தமது தெரிவுக்குரிய இணைப்புகளை டிஜிட்டல் முறையில் செயற்படுத்திக் கொள்ளும் வசதியை வழங்குகின்றது. இந்த சிக்கல்களற்ற தீர்வினூடாக, சௌகரியம் வழங்கப்படுவது மாத்திரமன்றி, சர்வதேச டிஜிட்டல் மயமாக்கம் மற்றும் நிலைபேறாண்மை முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்படுகின்றன. வீட்டிலிருந்தால் அல்லது பயணம் செய்கையில், SLT-MOBITEL இன் சிறந்த வலையமைப்பினூடாக வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற டேட்டா வேகங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

SLT-MOBITEL eSIM சேவைகளுடன் இணைந்து கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட eSIM இணைப்புகளை கொண்டிருக்கும் வசதியை அனுபவிக்க முடியும். மாறுபட்ட இணைப்புத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. பணிக்கு, வீட்டுக்கு அல்லது வெளிநாடுகளில் ரோமிங் செய்வதற்கு என வாடிக்கையாளர்கள் தமது வாழ்க்கைமுறை மற்றும் தெரிவுகளுக்கேற்ப இணைப்பை மாற்றியமைத்துக் கொள்ளலாம். மேலும், வாடிக்கையாளர்கள் இலவச 15GB எனிடைம் டேட்டா மற்றும் எந்த வலையமைப்புக்கும் 100 நிமிடங்கள் உரையாடும் வசதியை பெறுவார்கள். இந்த மட்டுப்படுத்தப்பட்ட சலுகை, வலையமைப்புடன் இணைந்து கொள்ளும் அனைவருக்கும் வழங்கப்படுவதுடன், SLT-MOBITEL இன் ஒப்பற்ற வலையமைப்பு அனுபவத்தை அனுபவிப்பதற்கு சிறந்த ஆரம்பத்தை வழங்குவதாக அமைந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் www.mobitel.lk/esim எனும் இணையத்தளத்துக்கு விஜயம் செய்து, அவசியமான தகவல்களை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை அப்லோட் செய்து, கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் ஊடாக கொடுப்பனவு செயன்முறையை பூர்த்தி செய்து eSIM சேவையை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். SLT-MOBITEL eSIM உடன் உங்களின் சாதனம் பொருந்தக்கூடியதா என்பதை அறிந்து கொள்வதற்கு, உங்கள் தொலைபேசியில் *#06# டயல் செய்யவும். உங்களுக்கு Embedded Identity Document (EID) இலக்கம் கிடைத்தால், உங்கள் சாதனம் eSIM-பாவனைக்கு பொருத்தமானது. ஒன்லைனில் இணைத்துக் கொள்ளும் செயன்முறையின் போது, SLT-Mobitel 555 Any Data Combo Plan, Social Chill Plans அல்லது Aviator Plans போன்ற பெருமளவு அனுகூலங்களையும் வெகுமதிகளையும் வழங்கும் திட்டங்களிலிருந்து தமது தெரிவுக்கமைய பொருத்தமானதை தெரிந்து கொள்ளலாம்.


Share with your friend
Exit mobile version