Site icon Eyeview Sri Lanka

SLT-MOBITEL லிபர்டி பிளாஸா குடியிருப்பாளர்களுக்கு நவீன இணைப்புத்திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட தகவல் தொடர்பாடல் தீர்வுகளை ஏற்படுத்தியுள்ளது

Share with your friend

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, லிபர்டி பிளாஸா தொகுதியின் உரிமையாளர்களான கொழும்பு லான்ட் அன்ட் டிவலப்மன்ட் கம்பனி பிஎல்சியுடன் கைகோர்த்து, லிபர்டி பிளாஸாவின் குடியிருப்பாளர்களுக்கு அதிவேக ஃபைபர் இணைப்புகள் மற்றும் நவீன தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் ஆகியவற்றைப் பெற்றுக் கொடுக்க முன்வந்துள்ளது.

SLT பிரதம பிராந்திய வியாபார அதிகாரி இமந்த விஜேகோன், லிபர்டி பிளாஸா நிர்வாக சங்கத்தின் அங்கத்தவர் பெடி வீரசேகர ஆகியோர் கைச்சாத்திடப்பட்ட உடபடிக்கையை பரிமாறிக் கொள்கின்றனர்.

இதற்கான உடன்படிக்கையில் SLT இன் பிரதம பிராந்திய விற்பனை அதிகாரி இமந்த விஜேகோன் மற்றும் லிபர்டி பிளாஸா சங்கத்தின் அங்கத்தவரான பெடி வீரசேகர ஆகியோர் கைச்சாத்திட்டதுடன், இந்நிகழ்வில் இரு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையின் புகழ்பெற்ற கலப்பு அபிவிருத்தித் தொகுதிகளில் ஒன்றாக லிபர்டி பிளாஸா கருதப்படுவதுடன், கொழும்பின் மையப்பகுதியில் குடியிருப்பாளர்களுக்கு பணியாற்றுவது, தங்குமிடம் மற்றும் சொப்பிங் போன்ற அனுபவங்களை வழங்குகின்றது. இந்த தொகுதி 160,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டிருப்பதுடன், 300 க்கும் அதிகமான விற்பனைப் பகுதிகள், அலுவலகங்கள் மற்றும் வதிவிடப்பகுதிகள் போன்றவற்றுடன், 250க்கும் அதிகமான வாகனத் தரிப்பிட வசதிகளையும் கொண்டுள்ளது.

SLT இன் பிரதம பிராந்திய விற்பனை அதிகாரி இமந்த விஜேகோன் கருத்துத் தெரிவிக்கையில், “சொப்பிங், அலுவலக இடவசதி மற்றும் வதிவிடம் ஆகியவற்றுக்கான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக லிபர்டி பிளாஸா அமைந்துள்ளது. லிபர்டி பிளாஸா நிர்வாக சங்கத்துடன் இணைந்து, அடுத்த தலைமுறை ஃபைபர் வலையமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்துள்ளதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். SLT-MOBITEL இன் நவீன வசதிகள் படைத்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளினூடாக, ஒன்றிணைக்கப்பட்ட தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்பதுடன், plug-and-play இணைப்புத்திறன், அதிகளவு பயன்படுத்தக்கூடிய அடர்த்தி மற்றும் சகல குடியிருப்பாளர்களின் சமகால மற்றும் எதிர்கால தேவைகளுக்கான நீண்ட கால அடிப்படையிலான பெறுமதி சேர்ப்பு போன்றன வழங்கப்படும்.” என்றார்.

SLT-MOBITEL’ இன் மேம்படுத்தப்பட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதியுடன், குடியிருப்பாளர்களுக்கு கிடைக்கும் அனுகூலங்கள் எல்லைகளற்றவையாக அமைந்துள்ளன. அலுவலகங்களுக்கு நவீன தொழில்நுட்பம், அதிவேக இணைய வசதி மற்றும் குரல் தீர்வுகள் போன்றவற்றை பெற்றுக் கொள்ள முடிவதுடன், எதிர்காலத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் இவை அமைந்துள்ளன. லிபர்டி பிளாஸா குடியிருப்பாளர்களுக்கு நவீன தொழில்நுட்பத்தினூடாக டிஜிட்டல் வாழ்க்கை முறையை அனுபவிக்கக்கூடியதாக இருக்கும் என்பதுடன், ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களினூடாக, ஒன்லைன் கேமிங் மற்றும் பல அம்சங்களை அனுபவிக்க முடியும். அத்துடன் உலகத் தரம் வாய்ந்த PEO TV களிப்பூட்டும் அம்சங்களையும் அனுபவிக்கக்கூடியதாக இருக்கும்.

இந்த முன்னேற்றம் தொடர்பாக லிபர்டி பிளாஸா நிர்வாக சங்கத்தின் அங்கத்தவர் பெடி வீரசேகர கருத்துத் தெரிவிக்கையில், “எமது குடியிருப்பாளர்கள் மற்றும் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளவர்களுக்கு அதிவேக ஃபைபர் இணைப்புகளையும், இதர உயர் தரமான குரல் அழைப்பு வசதிகளையும் வழங்குவதற்காக SLT-MOBITEL உடன் கைகோர்த்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இந்தத் திட்டம் பூர்த்தியடைந்ததும், சகல உரிமையாளர்களுக்கும், வாடகைக்கு அமர்த்தப்பட்டிருப்பவர்களுக்கும், பெருமளவு அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இலங்கையில் காணப்படும் முன்னணி கலப்பு அபிவிருத்தித் திட்டமாக அமைந்திருப்பதுடன், முன்னணி தொலைத் தொடர்பாடல் சேவை வழங்குநருடன் கைகோர்ப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.


Share with your friend
Exit mobile version