Site icon Eyeview Sri Lanka

SLT-MOBITEL வவுனியா வைத்தியசாலையில் தைப்பொங்கல் வைபவ நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது

Share with your friend

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குநரான SLT-MOBITEL, இந்த ஆண்டின் தைப் பொங்கல் வைபவத்தை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பாடு செய்திருந்தது. பண்டிகையின் பாரம்பரியத்தை பின்பற்றியிருந்ததுடன், வைத்தியசாலைக்கு பெறுமதி வாய்ந்த நன்கொடையையும் வழங்கியிருந்தது.

புதிய ஆரம்பம் மற்றும் இயற்கையின் அறுவடையை குறிக்கும் வகையில் தைப் பொங்கல் அமைந்துள்ளது. இந்த விசேட பண்டிகையை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் SLT-MOBITEL இன் அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். வைத்தியசாலை வளாகத்தில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த வைபவத்தின் போது, SLT இன் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்திய பொது முகாமையாளர் எம். பத்மசுதன், 1 மில்லியன் ரூபாய் பெறுமதி வாய்ந்த ICU படுக்கைகளை, வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர். வைத்தியர். கே.ராகுலனிடம் கையளித்தார்.  தைப் பொங்கல் பண்டிகையின் பாரம்பரியத்துக்கமைய, பூசாரியினால் பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. SLT-MOBITEL பிரதிநிதிகள் மற்றும் வவுனியா வைத்தியசாலை ஊழியர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

சமூகங்களின் நலன் தொடர்பில் வைத்தியசாலையின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளின் அங்கமாக SLT-MOBITEL’இன் நன்கொடை அமைந்திருந்தது. தொற்றுப் பரவல் ஆரம்பித்தது முதல், SLT-MOBITEL இனால் தொடர்ச்சியாக அதன் செயற்பாடுகள் மேம்படுத்தப்பட்டு, இலங்கையின் சகல பகுதிகளிலும் இணைப்புத்திறன் உறுதி செய்யப்பட்டிருந்ததுடன், உலர் உணவுப் பொருட்கள் விநியோகம் மற்றும் சுகாதாரத் துறைக்கு அத்தியாவசிய சாதனங்களை வழங்கி மற்றும் இதர நன்கொடைகளினூடாக ஆதரவளித்திருந்தது.


Share with your friend
Exit mobile version