Eyeview Sri Lanka

SLT-MOBITEL’s mCash இனால் பீப்பள்ஸ் லீசிங் வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான மீளச் செலுத்தல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

Share with your friend

SLT-MOBITEL இனால் வடிவமைக்கப்பட்டு, இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுடன் இயங்கும், புத்தாக்கமான மொபைல் பணக் கொடுக்கல் வாங்கல் கட்டமைப்பான SLT-MOBITEL mCash, பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் (PLC) வாடிக்கையாளர்களுக்கு மாதாந்த லீசிங் மீளச் செலுத்தல்களை இலகுவாக மேற்கொள்வதற்கான சௌகரியமாக கொடுப்பனவு முறைமை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, மற்றும் இலங்கையின் வங்கிசாரா நிதிச் சேவைகள் வழங்கும் துறையில் நிதிசார் தீர்வுகளை வழங்கும் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் (PLC) ஆகியன இணைந்து, mCash சேவைகளின் விரிவாக்கத்தினூடாக நிறுவனத்தின் நிதித் திரட்டல் நிர்வாக செயன்முறையை இலகுவாக்கிக் கொள்ளவும், லீசிங் மீளச் செலுத்தல் செயன்முறையை இலகுவாக்கிக் கொள்ளவும் வசதியை ஏற்படுத்தியுள்ளன.

PLC வாடிக்கையாளர்களுக்கு தற்போது தமது லீசிங் கொடுப்பனவுகளை இலகுவாக சிக்கல்களின்றி SLT-MOBITEL mCash wallet அல்லது mCash விற்பனையாளர் பகுதிகளினூடாக மேற்கொள்ள முடியும். அத்துடன், PLC க்கு நிலுவையிலுள்ள லீசிங் கொடுப்பனவுகளை சௌகரியமாகவும், தாமதங்களின்றி பெற்றுக் கொள்வதற்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.

SLT-MOBITEL mCash அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர் வலையமைப்புகள் நாடு முழுவதிலும் காணப்படுவதுடன், எதிர்காலத்தில் மேலும் அனுமதியளிக்கப்படும் விற்பனையாளர்கள் உள்வாங்கப்படவுள்ளனர். PLC உடன் கைகோர்த்துள்ளமையானது, SLT-MOBITEL இனால் சகல குடிமக்களுக்காகவும், டிஜிட்டல் மாற்றியமைப்பு சேவைகள் ஊக்குவிப்பு செயற்பாடுகளில் எய்தப்பட்டுள்ள மற்றுமொரு மைல்கல் சாதனையாகும். 

புத்தாக்கமான உள்ளம்சங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறைகளுக்கு உள்வாங்கப்படக்கூடிய வகையில், தொடர்ச்சியாக வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுப்பதனூடாக, SLT-MOBITEL இன் mCash இனால் இலங்கையின் மொபைல் பணக் கொள்கையில் புரட்சிகரமான மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. 

mCash இனால் பணத்தை அனுப்புவது மற்றும் பெற்றுக் கொள்வது, மொபைல் ரீலோட்கள் மற்றும் கட்டணப்பட்டியல் கொடுப்பனவுகள், காப்புறுதி, நிதியியல் மற்றும் லீசிங் கொடுப்பனவுகள், ஒன்லைன், இலங்கை மத்திய வங்கியின் LankaQR நியமங்களுக்கமைய அமைந்த QR ஊடாக விற்பனையக கொடுப்பனவுகள், வங்கி வைப்புகள், கடன் மற்றும் கடனட்டை மீளச் செலுத்தல்கள் மற்றும் மொபைல் ஊடாக mCash இலிருந்து கோரிக்கையை முன்வைத்து பெற்றுக் கொள்ளக்கூடிய டிஜிட்டல்கள் கடன்கள் போன்றன  வழங்கப்படுகின்றன. SLT- MOBITEL இன் mCash விற்பனையாளர் வலையமைப்பில் சிறு விற்பனை நிலையங்கள் அடங்கலாக, முன்னணி விற்பனையகங்கள் வரை 25000 க்கும் அதிகமான வலையமைப்பு விற்பனை பங்காளர்கள் / பயன்பாட்டு பகுதிகள் நாடு முழுவதிலும் காணப்படுகின்றன. இவற்றில் மொபிடெல் கிளைகள், SLT ரெலிஷொப்கள், சிங்கர் காட்சியறைகள், லங்கா பெல், Pay & Go Kiosks அல்லது mCash App ஊடாக நேரடியாக mCash டொப் அப் செய்து கொள்ளல்கள் போன்றன அடங்கியுள்ளன.

PLC டிஜிட்டல் மயமாக்கம் 

பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி அண்மையில் தனது மொபைல் அப்ளிகேஷனான PLC Touch ஐ அறிமுகம் செய்திருந்தது. இதனூடாக சௌகரியமான பாவனையாளர் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்க்கின்றது. நவீன வசதிகள் படைத்த இந்த app இல் பெருமளவு விறுவிறுப்பான உள்ளம்சங்கள் காணப்படுவதுடன், அதில், இலங்கையில் வங்கியியல் app ஒன்றில் முதன் முறையாக காப்புறுதி அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த app இன் சில பிரதான உள்ளம்சங்களில், QR குறியீடு அடிப்படையிலான மற்றும் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் ஆற்றல், வேறெந்த வங்கியனதும், வேறெந்த கணக்கையும் இணைத்து, சேமிப்பை நிர்வகிக்கும் ஆற்றல், app எந்தவொரு வங்கிக் கணக்கிலிருந்தும் PLC கடன் மற்றும் குத்தகை வாடகை கொடுப்பனவு, விபத்தொன்றின் போது  உரிமை கோரல்களை துரிதமாக எளிமையாக மேற்கொள்வதற்கு உதவும் “Call & Go” மற்றும் நீண்ட கடதாசி ஆவணங்களை பூர்த்தி செய்வதற்கான தேவைகள் இல்லாத, புதிய காப்புறுதிப் பத்திரங்களை சில நிமிடங்களினுள் பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி போன்றன அடங்கியுள்ளன.

டிஜிட்டல் மயமாக்கல் அறிமுகத்தில் பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி உறுதியாக தனது ஈடுபாட்டைக் கொண்டுள்ளதுடன், ஒன்லைன் லீசிங் வசதிகளை வழங்கவும், காசோலை அச்சிடல் செயன்முறையை டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் மையப்படுத்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக இரு டிஜிட்டல் அப்ளிகேஷன்களை அறிமுகம் செய்துள்ளது. CAPP அப்ளிகேஷனினூடாக, கடன் வசதிகளை ஒன்லைன் அனுமதியளிப்பினூடாக பெற்றுக் கொடுக்க உதவியாக அமைந்திருப்பதுடன், ஒப்பற்ற செயன்முறை மேம்படுத்தும் வாடிக்கையாளர் பதிலளிப்பு காலத்தை வழங்குவதாக அமைந்துள்ளது.

DCHEQUE என்பது பீப்பள்ஸ் லீசிங் தகவல் தொழில்நுட்ப பிரிவினால், பீப்பள்ஸ் பாங்கிங் உடன் இணைந்து வழங்கும் மற்றுமொரு புரட்சிகரமான டிஜிட்டல் மாற்றியமைப்பு செயற்திட்டமாக அமைந்துள்ளது. புதிய கொடுப்பனவு முறைமைகளில் SLIPS, CEFT, RTGS மற்றும் உள்ளக பண மாற்றத் தெரிவுகள் அடங்கியுள்ளன. இந்தத் தீர்வு மக்கள் வங்கியுடன் இணைந்து வடிவமைக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளமையினால், கட்டமைப்பினால் பாதுகாப்பான மற்றும் கட்டுப்பாடுகளுடனான முறையில் கொடுப்பனவு வழங்கப்படுவதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. பீப்பள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சியின் முழு கிளை வலையமைப்பினாலும் தமது சொந்த கொடுப்பனவுகளை DCheque ஊடாக e-ஆவணங்களினூடாக டிஜிட்டல் முறையில் முன்னெடுக்கக்கூடியதாக இருப்பதுடன், பாதுகாப்பான அனுமதியளிப்பு செயன்முறையினூடாக, டிஜிட்டல் கையொப்பம் அச்சிடல் செயற்படுத்தப்பட்டு வெளியக கையொப்ப தேவைப்பாட்டை இது இல்லாமல் செய்வதாக அமைந்திருக்கும்.மேலும், புத்தாக்கமான வங்கிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் நிதியியல் நிறுவனம் எனும் வகையில், PLC இனால் Self-e-Cash சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இதனூடாக, வாடிக்கையாளர்களுக்கு உடனடி கடன் வசதியை நிலையான வைப்பின் மீது பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், இதனை ATM ஒன்றிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்


Share with your friend
Exit mobile version