Eyeview Sri Lanka

Street Burger நாவலையில் புதிய கிளையைத் திறக்கிறது

Share with your friend

இலங்கையின் அசல் சுவையான பர்கர்களின் வீடான ‘Street Burger’ இப்போது நாவலையில், அதன் 4வது கிளையினை திறந்து வைத்துள்ளது. உணவகத்தின் உயர்ந்து வரும் பிரபலத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையிலும், அதிகமான வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையிலும், நாடு முழுவதும் உள்ள உள்நாட்டு சங்கிலியின் தொடர்ச்சியான விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இந்தக் கிளையின் திறப்புவிழா அமைகிறது .

‘பிரத்தியேகமாக கையால் வடிவமைக்கப்பட்ட பர்கர்கள் மற்றும் அதன் தனித்துவம்மிக்க சுவைகளை மக்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் நாங்கள் இப்போது நாவலையில் உள்ள எங்களது புத்தம் புதிய விற்பனை நிலையத்திற்கு வாடிக்கையாளர்களையும் உள்ளூர்வாசிகளையும் வரவேற்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்,’ என்று Street Burgerன் இணை ஸ்தாபகரும் பணிப்பாளருமான மசூன் சமூன் தெரிவித்தார். ‘இலங்கையில் பர்கர் தயாரிப்பில் புரட்சியை ஏற்படுத்தியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், மேலும் சுவையுடன் கூடிய புதுமையான மெனுவை வழங்குவதன் மூலம் எம்மை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.’ என்றும் மேலும் அவர் குறிப்பிட்டார்.

2016 ஆம் ஆண்டு மரைன் டிரைவில் எளிமையாக ஒரு பாப்-அப் உணவு டிரக்கில்  விற்பனையை ஆரம்பித்து, காலப்போக்கில் அது வளர்ச்சியடைந்து Street Burger இப்போது இலங்கையில் ‘தி’ பர்கர் உணவகம் என்ற நற்பெயரை உறுதிப்படுத்தியுள்ளது. பர்கர்கள் மட்டுமல்லாது, பிற சிற்றுண்டிகள் மற்றும் ஷேக்ஸ் என, நாவில் சுவையூறச்செய்யும் அதே நேரத்தில், தரம் மற்றும் சேவையின் உயர் தரத்தை தொடர்ந்து பேணி வருகிறது.

உள்நாட்டில், அதன் ஊழியர்களின் தொழில்முறை மேம்பாட்டிற்காக அனைத்து மட்டங்களிலும் பல்வேறு பயிற்சித் திட்டங்களை நடத்த உறுதிபூண்டுள்ளது. அதே நேரம் நிறுவன வளர்ச்சிக்காகவும், உணவுத் துறையில் சிறந்த பெறுபேற்றை உருவாக்கும் வகையிலும்  குறிக்கோளுடன் இயங்கி வருகிறது.

அதன் வளர்ந்து வரும் உணவகங்களின் பட்டியலில் Street Burger தற்போது கொழும்பில் பம்பலப்பிட்டி, எத்துல் கோட்டே, கல்கிசை மற்றும் இப்போது நாவல – ஆகிய நான்கு உணவகங்களில் இருந்தும் மேலும் விரிவாக்கத் திட்டங்களுடன்  தனித்துவமாக இயங்கி வருகிறது.

குறிப்பாக, Street Burgerன் புதிய நாவல கிளையின் புத்துணர்ச்சியான உட்புற அழகியல் தோற்றம், மக்கள் பார்வைக்கு ரசனையை ஏற்படுத்துவதுடன், மேம்பட்ட அதன் சுவை பர்கர்கள் மீதான வாடிக்கையாளர்களின் ஈர்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்கிறது


Share with your friend
Exit mobile version