கிழக்கு கரையோரத்தின் மாசற்ற கல்குடா கரையோரத்தில் அமைந்துள்ள இலங்கையின் முன்னணி சொகுசு ஹோட்டல்களில் ஒன்றான Sun Siyam பாசிகுடா, கிழக்கு கரையோரத்தின் வனப்பை பேணும் வகையில் பிளாஸ்ரிக் கழிவுகளை அகற்றும் வகையில் கரையோர சுத்திகரிப்பு பணிகளை அண்மையில் முன்னெடுத்திருந்தது.

ரிசோர்ட்டின் நிலைபேறாண்மை பிரிவான Sun Siyam Cares இன் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம், கரையோரத்துக்கு அடித்து வரப்படும் பிளாஸ்ரிக் கழிவுகளை திரட்டி, பொறுப்பு வாய்ந்த வகையில் அவற்றை கழிவகற்றும் நடவடிக்கைகளை ஹோட்டலின் ஊழியர்கள், விருந்தினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து முன்னெடுத்திருந்தனர். அதனூடாக, சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகத்துடன் இணைந்து முன்னெடுக்கும் செயற்பாடுகள் போன்றவற்றில் ரிசோர்ட் காண்பிக்கும் அர்ப்பணிப்பை மீள உறுதி செய்திருந்தது.
பாசிகுடாவின் குடாப் பகுதியின் கரையோரத்தில் இந்த தூய்மையாக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன், இதன் போது பிளாஸ்ரிக் போத்தல்கள், மேலுறைகள், அகற்றப்பட்ட மீன்பிடி சாதனங்கள் மற்றும் இதர கடல்சார் கழிவுகள் போன்ற உயிரியல் பரம்பலுக்கு ஆபத்தாக அமைந்த மற்றும் சுற்றுலா செயற்பாடுகளுக்கு பாதகமாக அமைந்த அம்சங்கள் அகற்றப்பட்டிருந்தன. திரட்டப்பட்ட சகல கழிவுகளும் ரிசோர்ட்டின் பூஜ்ஜிய கழிவு முகாமைத்துவ கொள்கைகளின் பிரகாரம், மீள்சுழற்சிக்காகவும், கொம்போஸ்ட் தயாரிப்புக்காகவும் வகைப்படுத்தப்பட்டன. பங்குபற்றுனர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நகர்வாக இந்த செயற்பாடு அமைந்திருந்ததுடன், கரையோர பிளாஸ்ரிக் கழிவின் ஆபத்துகள் தொடர்பில் பொது மக்களுக்கு தெளிவுபடுத்தி, நிலைபேறான வாழ்க்கையின் முக்கியத்துவமும் உணர்த்தப்பட்டிருந்தது.
Sun Siyam பாசிகுடாவின் பரந்த நிலைபேறாண்மை நிகழ்ச்சி நிரலின் பிந்திய செயற்பாடுகளில் அங்கமாக இது அமைந்திருந்ததுடன், சர்வதேச ரீதியில் வரவேற்பையும் பெற்றிருந்தது. அண்மையில் Tripadvisor Travelers’ Choice ‘Best of the Best’ for 2025 எனும் தரப்படுத்தலையும் ரிசோர்ட் பெற்றுக் கொண்டதுடன், சிறந்த சேவை, விருந்தினர் அனுபவம் மற்றும் நிலைபேறான செயற்பாடுகள் போன்றவற்றில் சர்வதேச ரீதியில் காணப்படும் சிறந்த 10 சதவீத ஹோட்டல்களில் ஒன்றாகவும் தரப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், வலு சேமிப்பு முதல் வனஜீவராசிகள் பாதுகாப்பு வரை சூழல் மற்றும் சமூக பொறுப்புணர்வு பிரிவுகளில் Travelife Gold Certification ஐயும் பெற்றுள்ளது.
ரிசோர்ட்டின் செயற்பாடுகளின் ஒவ்வொரு பிரிவிலும் நிலைபேறாண்மை ஆழமாக ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. Sun Siyam பாசிகுடா தனது வளாகத்தில் சேதன பண்ணையை கொண்டிருப்பதுடன், அவற்றில் 38 வகையான பழங்கள், மரக்கறிகள் மற்றும் மூலிகைகளை பயிரிட்டுள்ளது. அதனூடாக, இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் தங்கியிருப்பதை பெருமளவில் குறைத்துள்ளது. சூரிய வலு பிறப்பாக்கல் கட்டமைப்பு மற்றும் நீர் சேமிப்பு கட்டமைப்புகள், வளாகம் முழுவதிலும் வலுச் சிக்கனமான ஒளியூட்டல் வசதிகள் போன்றவற்றை கொண்டுள்ளது. ஒற்றை பாவனை பிளாஸ்ரிக் பயன்பாட்டை முழுமையாக இல்லாமல் செய்துள்ளது.
சூழலில் அக்கறை கொண்டுள்ளமைக்கு மேலதிகமாக, உள்ளூர் சமூகங்களின் வாழ்வாதாரத்துக்கும் ஆதரவளிக்கின்றது. அதன் 90 சதவீதத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பிரதேசத்திலிருந்து பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர். விருந்தினர் அனுபவத்தில் உள்ளூர் கலையம்சங்கள் மற்றும் கலாசாரம் ஆகியவற்றையும் ஒன்றிணைத்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து, Sun Siyam பாசிகுடா இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை மீட்சிக்குட்படுத்துவதில் முக்கிய பங்கை ஆற்றியுள்ளது. பிராந்தியத்துக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதில் பெருமளவு பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், முன்னணி பிரயாண பகுதி எனும் தனது நாமத்தை மீள உறுதி செய்துள்ளது. அத்துடன், உள்ளூர் சமூகத்தின் நீண்ட கால பொருளாதார அனுகூலங்களை கட்டியெழுப்புவதிலும் பங்களிப்பு வழங்குகிறது.
கரையோர சுத்திகரிப்புகள் போன்ற செயற்பாடுகளினூடாக, ரிசோர்ட் தொடர்ந்தும் விருந்தோம்பல் துறையில் நியமங்களை ஏற்படுத்தி வருவதுடன், சுற்றுலா அபிவிருத்தி உள்ளடக்கமானது மற்றும் சூழலுக்கு பொறுப்பு வாய்ந்ததாக அமைந்திருப்பதை உறுதி செய்கிறது. முற்பதிவுகளுக்கு அழைக்கவும் 0652055555 அல்லது மேலதிக தகவல்களுக்கு https://www.sunsiyam.com/sun-siyam-pasikudah/ பார்வையிடவும்.