Sun Siyam Resorts’ Privé Collection இன் அங்கமாக அமைந்துள்ள Sun Siyam பாசிகுடா, Homes & Gardens Design விருதுகள் 2025 இல் சிறந்த சர்வதேச ஹோட்டல் அலங்கார விருதை வென்றுள்ளது. இலங்கையின் சொகுசு விருந்தோம்பலில் புதிய அடையாளமாக, ஹோட்டலின் ஸ்தாபகர்களான லீ மெக்நிகோல் மற்றும் ஜோஸ் ரிவேரோ ஆகியோரினால் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட Studio Sixty7 இன் சிறந்த வடிவமைப்பையும், கலாசார பிரத்தியேகத்தன்மையையும் மற்றும் நிலைபேறாண்மையையும் கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.

Homes & Gardens Design விருதுகள் என்பது, சிறந்த வடிவமைப்பு மற்றும் அலங்காரத்தைக் கொண்டாடுவதுடன், நாம் இப்போது மற்றும் எதிர்காலத்தில் வாழும் முறையை வடிவமைக்க ஊக்கமளிக்கும் திட்டங்கள் மற்றும் புதுமைகளை வெளிக்கொண்டு வரும் வகையிலும் அமைந்துள்ளது. ‘சிறந்த சர்வதேச ஹோட்டல் அலங்காரம்’ பிரிவில், Sun Siyam பாசிகுடாவின் மாற்றம் என்பது, அதன் மேம்பட்ட விருந்தோம்பல், கைவினைஞரின் கைத்திறன் மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பு ஆகியவற்றின் கலவைக்காக நடுவர்களால் அங்கீகரிக்கப்பட்டது.
இலங்கையின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள 34 அறைகள் கொண்ட இந்த ஹோட்டல், எளிமையான ஆடம்பரத்தின் சரணாலயமாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டது. சவாலான நான்கு மாத காலக்கெடுவுக்குள் முடிக்கப்பட்டு, 2023 நவம்பர் மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டது. கழிவுகளைக் குறைக்கும் பொருட்டு, அசல் தளபாடங்களின் (original furniture) பெரும்பகுதி புதுப்பிக்கப்பட்டு, மேலுறை மாற்றப்பட்டது. அதேசமயம், அனைத்து புதிய பொருட்களும் உள்நாட்டிலிருந்து பெறப்பட்டு, இலங்கை கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்டன. மூங்கில், லினன், டெரகோட்டா மற்றும் மீட்கப்பட்ட மரம் போன்ற இயற்கை மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, தொடுதலுக்கு இனிமையான, தரமான அனுபவத்தை உருவாக்க, குழுவினர் கைத்தறி துணிகள், பிரத்தியேக விளக்குகள் (bespoke lighting) மற்றும் பிரத்தியேக மரவேலைகளை (custom joinery) முன்னெடுக்கப்பட்டிருந்தன.
Sun Siyam பாசிகுடாவின் பொது முகாமையாளர் அர்ஷத் ரிபாய் கருத்துத் தெரிவிக்கையில், “Sun Siyam பாசிகுடா உலக அரங்கில் அங்கீகரிக்கப்படுவதைக் கண்டு நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். இந்த விருதானது, ‘Studio Sixty7’ இன் தொலைநோக்குப் பார்வைக்கு மட்டுமல்லாமல், இந்த வடிவமைப்பிற்கு உயிர் கொடுத்த இலங்கை கைவினைஞர்களின் திறமையான கைத்திறனுக்கும் கிடைத்த அங்கீகாரமாகும். எமது ஹோட்டல் இப்போது நாட்டின் உணர்வை உண்மையான முறையிலும், அதேசமயம் முன்னோக்கிச் சிந்திக்கும் வகையிலும் பிரதிபலிக்கிறது. இது எங்கள் விருந்தினர்களுக்கு உண்மையிலேயே தனித்துவமான ஓர் அனுபவத்தை வழங்குகிறது.” என்றார்.
பாரம்பரிய கட்டுமான நுட்பங்கள், சமகால உட்புற வடிவமைப்பு முறைகளுடன் தடையின்றி இணைக்கப்பட்டு, கட்டிடக்கலையின் ஒருமைப்பாடு கைவினைத்திறன் விவரங்களுடன் இணையும் ஒரு முழுமையான சூழலை உருவாக்கியிருந்தன. இதன் விளைவாக, உணவகம் மற்றும் ஸ்பா முதல் beach shack வரை, ஒவ்வொன்றும் வலுவான ஓர் இடத்தின் உணர்வையும் நோக்கத்தையும் பிரதிபலிக்கும் பல உள்ளீர்க்கும் இடங்களின் தொகுப்பாக அமைந்துள்ளன.
Studio Sixty7 இன் உள்ளூர் தன்மையுடன் ஆடம்பரத்தை மறுவரையறை செய்யும் திறனில் தான் இந்த புதுமை தங்கியுள்ளது. பொதுவான அலங்காரப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, இந்த ஸ்டுடியோ இலங்கைக் கைவினைஞர்களுடன் கைகோர்த்து, கைத்தறி கூரைகள், லினன் திரையிடப்பட்ட உட்புறங்கள், செம்மண்ணிறச் சாந்து பூச்சுகள் மற்றும் பிரத்தியேக விளக்குகள் உள்ளிட்ட குறிப்பிட்ட இடத்திற்கான தனிமங்களை நிறுவியது. இந்த அணுகுமுறை, வட்டார வடிவமைப்பை ஒரு சமகால விருந்தோம்பல் சூழலுக்கு உயர்த்தியது. புதுமை என்பது எப்போதும் தொழில்நுட்பத்தைப் பற்றியது அல்ல, மாறாக நோக்கமும் ஒருமைப்பாடும் பற்றியது என்பதை உறுதி செய்துள்ளது.
நிலைபேறாண்மை என்பது இந்தத் திட்டத்தின் மையமாக இருந்தது. இத்திட்டத்தின் வடிவமைப்பு குறைந்த தாக்கக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டதுடன், இதன் மூலம் அசல் தளபாடங்கள் மீண்டும் பயன்படுத்தப்பட்டன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் பயன்படுத்தியிருந்ததுடன் இறக்குமதிகள் குறைக்கப்பட்டன. இது கட்டுமானம் மற்றும் போக்குவரத்து இரண்டின் கார்பன் தடம் ஆகியவற்றைக் கணிசமாகக் குறைத்தது. இயற்கை காற்றோட்டம், திறந்த அமைப்பு தளவமைப்புகள் மற்றும் தொடு உணர்வு முடிவுகள் ஆகியவை செயல்பாட்டுக்கான ஆற்றல் நுகர்வைக் குறைத்தன. இதன் மூலம் ஆடம்பரமும் சுற்றுச்சூழல் பொறுப்பும் எவ்வாறு இணக்கமாகச் செய்ய முடியும் என்பதை இது உறுதி செய்தது.
முக்கியமாக, சிவில் யுத்தம் காரணமாக முன்னர் பாதிக்கப்பட்டிருந்த பிராந்தியத்தில் சமூக நிலைபேறாண்மையையும் இந்தத் திட்டம் உறுதி செய்திருந்தது. உள்ளூர் கைவினைஞர்கள், குயவர்கள், நெசவாளர்கள் மற்றும் மரவேலை செய்பவர்களை ஈடுபடுத்தியதன் மூலம், இந்த மறுவடிவமைப்பு ஒரு பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஒரு செயற்படுத்தும் காரணியாக மாறியது. இது அர்த்தமுள்ள வேலைவாய்ப்பையும், பாரம்பரிய திறன்களையும் போற்றியது. அந்த இடத்திலேயே உள்ள ‘தி எடிட்’ (The Edit) பகுதி, விருந்தினர்களுக்கு இலங்கையின் கைவினைப் பாரம்பரியத்துடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கும், பிராந்திய தயாரிப்பாளர்களை ஆதரிப்பதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குவதன் மூலம், இந்தக் கலாச்சார மரபை பேணித் தொடர்கிறது.Studio Sixty7, நேர்த்தியுடன் அசல் தன்மையை சமநிலைப்படுத்தும், சிந்தனைமிக்க மற்றும் கூட்டு வடிவமைப்புக்காக ஒரு நற்பெயரைக் கட்டியெழுப்பியுள்ளது. Sun Siyam Resorts உடனான அவர்களின் தொடர்ச்சியான கூட்டுப்பணியில், மாலைதீவுகளில் உள்ள திட்டங்களும் அடங்கும். இது, மதிப்புமிக்க படைப்புப் பங்காளிகளாக அவர்களின் பங்கை மேலும் உறுதிப்படுத்துகிறது.