Eyeview Sri Lanka

Sunshine Holdings இன் துணை நிறுவனமான Healthguard Distribution ஆனது மதிப்புமிக்க   சான்றிதழினை வென்றுள்ளது

Share with your friend

இலங்கையில், மருந்து வகைகளின் சீரான விநியோகம் தொடர்பான  அர்ப்பணிப்பினை  மேலும் வலுவூட்டுகின்றது. 

Sunshine Holdings PLC இன் சகல விதமருந்து வகைகளின்  முழு அளவிலான விநியோகப் பிரிவான Healthguard Distribution ஆனது அண்மையில்  சிறந்த  விநியோக நடைமுறைகளுக்கான (GDP)  சான்றிதழினைத் தனதாக்கிக் கொண்டது.  Bureau Veritas India இனால் வழங்கப்பட்ட  இம்மதிப்புமிக்க  சான்றிதழானது  Healthguard Distribution இன்   சிறந்த இறக்குமதித் தரம், களஞ்சியப்படுத்துதல் மற்றும் விநியோக செயல்பாடுகள்  தொடர்பான முகாமைத்துவக்   கடப்பாட்டிற்குக்   கிடைத்த உயரிய  சான்றாகும்.

GDP சான்றிதழானது மருந்து வகைகளின் விநியோகச் சங்கிலி தொடர்பான  விதிமுறை வழுவாத  தரநிறுணயத்தினை  நிலைநாட்டுவதில்  Healthguard Distrubution இன்  அர்ப்பணிப்பினைக் குறிக்கின்றது. Bureau Veritas India, ஆனது சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களை வழங்கும்  ஓர் ஆணைக்குழுவாகும். இது வர்த்தகத் தொழில்துறையின் சிறந்த நடைமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை தொடர்பான தேவைகளுக்கு இணங்கிச் செல்வதனை உறுதி செய்வதற்காக Healthguard Distrbution இன்  செயல்முறைகள், உள்கட்டமைப்பு மற்றும் நடைமுறைகள் தொடர்பாக மிகுந்த உன்னிப்பான  மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளது.

இச்சாதனையானது, Healthguard Distrbution ஆனது கையாளும் ஒவ்வொரு மருந்துப் பொருட்களின் பாதுகாப்பு,  செயல்திறன்  மற்றும்  ஒருமைப்பாட்டிற்கான அர்ப்பணிப்பினை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. தர முகாமைத்துவமானது இந்நிறுவனத்தின் முக்கிய கடப்பாடாகக்  கருதப்படுகின்றது.  அதாவது  மருந்துப் பொருட்கள் என்பன  மிகுந்த சிரத்தையுடன் களஞ்சிய படுத்தப்பட்டு  விநியோகச்  செயல்பாடுகளினை  மேற்கொள்வதன்  மூலமாக அவற்றின்  ஆற்றலினைப்  பேணுவதனையும்  நோயாளிகளின்  நலனைப் பாதுகாப்பதையும்  உறுதி செய்கின்றது.

Healthguard Distribution இன் பிரதான நிறைவேற்று அதிகாரியான  Shantha Bandara  அவர்கள் கூறுகையில், “ சிறந்த  விநியோக நடைமுறைச் சான்றிதழ்  என்பது  எமது முயற்சிகளுக்கான  அங்கீகாரம்  மட்டுமல்லாது, எமது  கைகளினைக்   கடந்து   செல்லும்  ஒவ்வொரு  மருந்துப் பொருட்களின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றினை உறுதிசெய்வதற்கான  எமது மனமார்ந்த வாக்குறுதியினையும் இது குறிக்கின்றது.  சுகாதாரப் பாதுகாப்புத் தொடர்பாக மருந்து வகைகளின் முக்கிய வகிபாகம் பற்றி நாம் நன்கறிவோம்.  மேலும் அப்பொறுப்பினை  நாம் மிகத்தீவிரமாக கவனத்தில்  எடுத்துக்கொள்கின்றோம்.   GDP இணக்கச்   சான்றிதழுடன் நாம்,  எமது  தரத்தினை  உயர்த்துவதன் மூலம்,  முழுத் தொழில்துறைக்கும் ஒரு தரநிர்ணயத்தினை அமைப்பதில் முன்னோடியாகத்  திகழ்கின்றோம்.  மருந்து விநியோகம் தொடர்பாக சாதகமான மாற்றத்தினை ஏற்படுத்துவதோடு, இலங்கை வாழ் மக்களின் வாழ்வியலில் நல்ல பல விடயங்களைக் அறிமுகப் படுத்துவதனை இலக்காகக் கொண்ட எமது இச்சிறப்பான பயணத்தினை  மேற்கொள்வதனை  இட்டு  நாம் பெருமகிழ்ச்சி  அடைகின்றோம்” எனத்தெரிவித்தார்.

இவ்வங்கீகாரம்  என்பது ஓர் சான்றிதழ்  என்பதனையும் தாண்டி இது இலங்கையில் மருந்து விநியோகச் சங்கிலியின் தரத்தினை உயர்த்துவதற்கான Healthguard Distribution இன் அர்ப்பணிப்பினை எடுத்துக் காட்டுகின்றது. சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், பிராந்திய மருந்து விநியோகத் தரங்களினை மேம்படுத்துவது தொடர்பான எமது பங்களிப்பினை நல்குவதே  எமது  நிறுவனத்தின் நோக்கமாகும்.

அதன் பன்முகப்படுத்தப்பட்ட, தாய்நிறுவனமான Sunshine Holdings நிறுவனத்தின் உந்து சக்தியோடு, Healthguard Distribution என்பது இலங்கையின் சுகாதார சேவை நிறுவனத்தால் வெளியிடப்பட்ட முழு முதல் மருந்துவகை-விநியோக-சேவைக்கு  (DaaS) ஓர் சிறந்த மாதிரியாகும்.  இது நாடளாவிய ரீதியில் அனைத்து உடல்நலம் மற்றும் ஆரோக்கிய தயாரிப்புகளுக்கான இணக்கவழி முறைப்படுத்தும் ஓர்  விநியோகஸ்தராகச்   செயல்படுகின்றது.

Sunshine Holdings PLC க்கு உரிமையான அதன் துணை நிறுவனமான Healthguard Distribution ஆனது சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் மருந்து தொடர்பான உற்பத்தியாளர்களின் தேவைகளைப்  பூர்த்தி செய்யும்  நோக்கம் கொண்ட ஓர் பூரணமான  இணக்க விநியோக அமைப்பாகும். இது எமது நாட்டில் அனைத்து மூலைகளிலும் உயர் தரத்தினைக் கொண்ட சுகாதார மற்றும் ஆரோக்கியத்   தயாரிப்புகளினை ஓர் கூரையின் கீழ் விநியோகிப்போராக செயல்படுகின்றது. இந்நிறுவனமானது, சிக்கல் மிகுந்த சூழல்களினை நீக்கி, மருந்து மற்றும் Consumer Brand நிறுவனங்கள் தமது முக்கிய திறன்களில்  கவனம் செலுத்த உதவும் வகையான ஓர் சேவையினை வழங்குகின்றது, இதன் மூலம் தொழில்துறையின் ஒட்டுமொத்த செழிப்பினை உறுதி செய்கின்றது.


Share with your friend
Exit mobile version