Sysco LABS இன் ‘ஒரு உணவைப் பகிரவும், ஒரு தருணத்தைப் பகிரவும்’ கட்டம் 4 சமூகத்தில் தேவையானவர்களைச் சென்றடைந்தது

Share with your friend

பாதிக்கப்பட்ட சமூகத்தில் தேவையுடையவர்களுக்கு உதவும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட ‘ஒரு உணவைப் பகிரவும், ஒரு தருணத்தைப் பகிரவும்”  என்ற முன்னணி சமூக கூட்டுப் பொறுப்புத் திட்டத்தின் நான்காவது கட்டத்தை நிறுவனம் Sysco LABS Sri Lanka அண்மையில் நிறைவேற்றியிருந்தது.  உணவு சேவையின் உலக முன்னணியாளரான Sysco Corporation இன் ‘ஒருவருக்கு ஒருவர் உணவையும், பராமரிப்பையும் பகிர்ந்துகொள்வதற்கு உலகை இணைப்பது” என்ற பிரதான நோக்கத்துடன் இணைந்ததாக இது அமைந்துள்ளது.

முன்னெப்போதும் இல்லாத பணவீக்கம் மற்றும் வேகமாகச் சீரழிந்து வரும் பொருளாதாரத்துக்கு எதிரான போராட்டங்களைப் பாராட்டியும், மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலும் Sysco LABS Sri Lanka இன் ‘ஒரு உணவைப் பகிரவும், ஒரு தருணத்தைப் பகிரவும்’ கட்டம் 4 முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதியில் பின்தங்கியுள்ள சமூகங்களுக்கு உதவுவதை இது நோக்காகக் கொண்டதாகும். ஏப்ரல் மாதத்தின் இறுதி வாரப் பகுதியில் தேவையுடைய சமூகங்களுக்கு உலருணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. 

குழுப்பணி மற்றும் நட்புறவைப் பலப்படுத்தும் நோக்கில் ஊழியர்களால் வழிநடத்தப்படும் உள்ளகக் கட்டமைப்பான Sysco LABS ,d; Ministry of Fun இந்த  4வது கட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்விற்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒதுக்கீடுகளையும் இந்தத் தகுதியான காரியத்திற்குப் பயன்படுத்த Sysco LABS நடவடிக்கை எடுத்திருந்தது. தனிப்பட்ட நன்கொடைகளை வழங்கியும், நன்கொடைகளை விநியோகிப்பதற்கும் Sysco LABS பணியாளர்கள் முழு மனதுடன் தாமாக முன்வந்து ஒத்துழைப்பு வழங்கினர். 

இலங்கை முழுவதிலுமுள்ள சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் அரசசார்பற்ற நிறுவனமான Alliance Development Trust (ADT)அமைப்பு இந்த உலருணவுப் பொருட்களைப் பகிர்ந்தளிப்பதில் பங்காளராகச் செயற்பட்டது.


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply