Eyeview Sri Lanka

TAGS விருதுகள் 2024 இல் Prime Lands Residencies தங்க விருதை சுவீகரிப்பு

Share with your friend

அண்மையில் நடைபெற்ற TAGS விருதுகள் 2024 நிகழ்வில், Prime Lands Residencies PLC, காணி மற்றும் சொத்துக்கள் நிறுவனங்கள் பிரிவில் பெருமைக்குரிய தங்க விருதை சுவீகரித்தது. ஒழுக்கம், நிலைபேறாண்மை மற்றும் வெளிப்படையான வியாபார செயன்முறைகள் மற்றும் டிஜிட்டல் தூர நோக்குடைய கூட்டாண்மை அறிக்கையிடல் போன்றவற்றில் சிறப்பாக கவனம் செலுத்தியிருந்தமைக்காகவும், கூட்டாண்மை சிறந்த செயற்பாடுகளுக்காகவும் நிறுவனத்தின் உறுதியான அர்ப்பணிப்பை இந்த தங்க விருது பிரதிபலித்திருந்தது.

இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் நிறுவனம் தொடர்ச்சியாக பேணி வரும் தலைமைத்துவத்துடன், இந்த சாதனை பொருந்தும் வகையில் அமைந்திருப்பதுடன், கடந்த ஆண்டின் TAGS விருதுகள் வழங்கலில் பெற்றுக் கொண்ட வெள்ளி விருதிலிருந்து, குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Prime Lands Residencies PLC இன் தலைமை அதிகாரி சந்தமினி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “கூட்டாண்மை அறிக்கையிடல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் உயர் நியமங்களை பேணுவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக இந்த தங்க விருது அமைந்துள்ளது. அறிக்கையிடல் செயன்முறையில் டிஜிட்டல் மாற்றியமைப்பு செயற்பாடுகளை நாம் முன்னெடுக்கும் நிலையில், பொறுப்புக்கூறல் மற்றும் நிலைபேறாண்மை போன்ற பிரதான பெறுமதிகளை நாம் தொடர்ந்து பேணுவதுடன், அவை எப்போதும் Prime Group இன் வரையறைகளை நிர்ணயிப்பதாக அமைந்துள்ளன.” என்றார்.

2023-2024 நிதியாண்டில் Prime Lands Residencies PLC உறுதியான வினைத்திறனை வெளிப்படுத்தியிருந்ததுடன், சவால்கள் நிறைந்த சந்தை சூழ்நிலைகளில் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் மீண்டெழுந்திறனையும் காண்பித்திருந்தது. The 43, By the Sea in Dehiwala, The Colombo Border மற்றும் The Seasons in Colombo 08 ஆகியன ரியல் எஸ்டேட் துறையில் நிறுவனத்தின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிக்காண்பித்திருந்தன.

TAGS விருதுகளினூடாக வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், ஆளுகை மற்றும் நிலைபேறாண்மை போன்றன வெளிப்படுத்தப்படுவதுடன், பரிபூரண கூட்டாண்மை அறிக்கையிடலுக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டு, நிதிசார் மற்றும் நிதிசாரா தகவல் வெளிப்படுத்தல்களில் கவனம் செலுத்துகிறது.

இவ் விருதுகள் வழங்கும் நிகழ்வில் விசேட விருந்தினர்கள் பங்கேற்றிருந்ததுடன், வெளிப்படைத்தன்மை மற்றும் ஆளுகை ஆகியவற்றில் அடிப்படை கொள்கைகளை பேணி, கூட்டாண்மை அறிக்கையிடலில் டிஜிட்டல் ஒன்றிணைப்பின் முக்கியத்துவ அதிகரிப்பை வெளிப்படுத்தியிருந்தது. இவ் வைபவம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றதுடன், CA ஸ்ரீ லங்காவின் 59ஆவது வருடாந்த அறிக்கையிடலில் சிறப்பு கௌரவிப்பு நிகழ்வாக அமைந்திருந்தது.


Share with your friend
Exit mobile version