Eyeview Sri Lanka

The Beach Front II Uswetakeiyawa Residences இன் பெருமைக்குரிய உரிமையாளர்களின் அவற்றின் சாவிகளை Prime Group கையளித்திருந்தது

Share with your friend

கொழும்பிலிருந்து சில நிமிடங்களில் பயணிக்கக்கூடிய கரையோர சொகுசு வதிவிடத் தொகுதி

இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் வடிவமைப்பாளரான Prime Group, தனது நவீன வசதிகள் படைத்த The Beach Front II Uswetakeiyawa சொகுசு குடியிருப்புத் தொகுதியின் நிர்மாணப் பணிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்து அதன் உரிமையாளர்களிடம் கையளித்துள்ளதாக அறிவித்துள்ளது. 2024 மார்ச் 02 ஆம் திகதி “Keys to Paradise” எனும் தலைப்பில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கடற்கரைக்கு முகப்பாக அமைந்த சொகுசு தொடர்மனைத் தொகுதியின் பெருமைக்குரிய உரிமையாளர்களுக்கு இதன் போது அவர்களின் இல்லங்களுக்கான சாவிகள் கையளிக்கப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வின் போது இந்த தொடர்மனையின் சிறப்பான வடிவமைப்பு மற்றும் நிர்மாணம் போன்ற விடயங்கள் மாத்திரமன்றி, அதனை வடிவமைக்கும் போது தமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுடன் Prime Group கட்டியெழுப்பியிருந்த உறுதியான உறவுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டிருந்தது. கொழும்பிலிருந்து 20 நிமிடங்களில் பயணிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ள சொகுசு தொடர்மனை “The Key to Paradise” இன் வெற்றியானது இலங்கையில் கடற்கரையோரத்தில் வாழ்வதற்கான ஒரு புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளது. 

2020 ஆகஸ்ட் மாதத்தில் Beach Front II Uswetakeiyawa நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இன்று உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் காணப்படும் தங்கமான மணல் மற்றும் பாம் தாவரப் பகுதியில் சொகுசான வாழிடத்தை வழங்குவதாக அமைந்துள்ளது. 16 மாடிகளைக் கொண்ட பிரம்மிக்க வைக்கும் கட்டடக்கலை அம்சங்களைக் கொண்ட இந்தத் தொகுதியில் 108 அலகுகளில் ஒன்று மற்றும் இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட இல்லங்கள் மற்றும் பென்ட்ஹவுஸ்கள் ஆகியன 742 முதல் 2273 சதுர அடிப் பரப்பளவுகளில் காணப்படுகின்றன. இந்து சமுத்திரம் முதல் தெளிவான வானம் வரையில் சுற்றுப் புறச் சூழலை கண்டு தமது பொழுதை இரம்மியமாக செலவிடக்கூடிய வகையில் பிரத்தியேகமான சரணாலயமாக இந்த நிர்மாணம் அமைந்துள்ளது.

இந்நிகழ்வில் Prime Group இன் இணை தலைமை அதிகாரி சந்தமினி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “மற்றுமொரு தொடர்மனைத் தொகுதியின் பூர்த்தியாக மாத்திரம் இது அமைந்திருக்கவில்லை. மாறாக, பிரத்தியேக சமூகமொன்றின் உருவாக்கமாக அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் நிர்மாணக் காலப்பகுதியில் நாம் எதிர்நோக்கியிருந்த தடங்கல்கள், தடைகள் மற்றும் சவால்கள் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். எவ்வாறாயினும், அவற்றுக்கு நாம் வெற்றிகரமாக முகங்கொடுத்து, இன்றைய தினம் இந்த அழகிய, மிகச் சிறப்பான செயற்திட்டத்தை பூர்த்தி செய்து, உங்களுக்கு ஒப்படைக்க எம்மால் முடிந்துள்ளது. Prime இல் நாம் உங்களை எமது வாடிக்கையாளராக அன்றி, பெறுமதி வாய்ந்த பங்காளராகவே காண்கின்றோம். பொறுமை காத்து, எம்மீது உங்களின் நம்பிக்கையை தொடர்ந்து பேணியிருந்தமைக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.” என்றார்.

இந்த தொகுதியின் பெருமைக்குரிய உரிமையாளர்களும் தமது சிந்தனைகளைப் பகிர்ந்திருந்தனர். கே. ரனித் சந்துஷான் பெரேரா மற்றும் கே டேமியன் சந்துனில் பெரேரா தமது கருத்துகளைத் தெரிவிக்கையில், “இந்தத் தொடர்மனைகள் சிறந்த காட்சியமைப்பைக் கொண்டுள்ளன. ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் இங்கு குளிர்மையான சூழல் காணப்படுகின்றது. Prime மற்றும் அவர்களின் இதர திட்டங்களை நாம் பரிந்துரைக்கின்றோம்.” என்றனர். நொயெல் எல்.எஸ் ஜோசப் தெரிவிக்கையில், “இந்தத் திட்டத்தின் ஆலோசகராக பணியாற்றியிருந்ததுடன், இந்த தொடர்மனை ஒன்றின் உரிமையாளராக திகழ்வதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். எம் அனைவருக்கும் இன்று மிகவும் மகிழ்ச்சிக்குரிய நாளாகும். நான் Prime Group இன் தொடர்ச்சியான வீட்டு உரிமையாளராக திகழ்கின்றேன்.” என்றார். யு.பி. சஷிகா நிசன்சலா ஜயசுமன கருத்துத் தெரிவிக்கையில், “Prime ஐ என்னால் எவருக்கும் பரிந்துரைக்க முடியும், இது தொழிற்துறையில் நம்பிக்கையை வென்ற பெயராக அமைந்துள்ளது. இந்த தொடர்மனைக்கு மாறுவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். எம் அனைவருக்கும் இது மகிழ்ச்சியூட்டும் நாளாகும். எமது புதிய இல்லத்திலிருந்து காணும் காட்சிகளைக் கண்டு, எமது பிள்ளைகளும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.” என்றார்.

The Beach Front II Uswetakeiyawa இனால், வசிப்போருக்கும், அவர்களின் விருந்தினர்களுக்கும் உலகத் தரம் வாய்ந்த வசதிகள் வழங்கப்படுகின்றன. இவற்றில் Visitors Lounge, Rooftop Infinity Pool, Kids Pool and Play Area, Yoga Deck, BBQ Terrace, Meeting Hub, Beach Volleyball Court, Beach Garden, Fitness Centre, Round-the-clock security, Digital Surveillance, Access Controlled Elevators, Dual Key for Apartments, மற்றும் Drivers Rest Area போன்றன அடங்கியுள்ளன. 

இலங்கையில் Prime Group இனால் பூர்த்தி செய்து கையளிக்கப்பட்ட பிந்திய திட்டமாக The Beach Front II Uswetakeiyawa அமைந்துள்ளது. கொழும்பிலிருந்தும், பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்தும் 20 நிமிடங்களில் பயணிக்கும் தூரத்தில் அமைந்துள்ள இந்தத் திட்டம், ஜா-எல அதிவேக நெடுஞ்சாலை நுழைவுப் பகுதியிலிருந்து 5 நிமிடங்களில் பயணிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. கடற்கரைக்கு முகப்பாக அமைந்த ஓய்வான அனுபவத்தை வழங்கும் சிறந்த திட்டமாக இது அமைந்துள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் Prime Group தொடர்ந்தும் சிறப்புக்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வருவதுடன், இலாபத்துக்கு அப்பாலான அர்ப்பணிப்பையும் கொண்டுள்ளது. சொகுசான வாழிட அனுபவங்களை மாற்றியமைத்து வருவதுடன், சமூகம் மற்றும் உரித்து தொடர்பான உணர்வையும் கட்டியெழுப்புகின்றது. The Beach Front II Uswetakeiyawa மற்றும் Prime Group இன் இதர திட்டங்கள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு primeresidencies.lk எனும் இணையதளத்தைப் பார்வையிடவும் அல்லது 0710777666 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.  

A collage of people in different poses

Description automatically generated


Share with your friend
Exit mobile version