உலகளாவிய படைப்பாற்றல் மற்றும் கதை சொல்லும் தளமாகத் திகழும் TikTok, காலி இலக்கிய விழா 2025இல் BookTok உடன் இணைந்து சிறப்பு பயிற்சிப் பட்டறையை ஒன்றை கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி வெற்றிகரமாக நடத்தியது. உள்ளூர் மக்களால் பெரிதும் நேசிக்கப்படும் #BookTok சமூகத்திற்கு நினைவூட்டலாக வடிவமைக்கப்பட்ட இந்த அமர்வு, படைப்பாளிகளும் புத்தக ஆர்வலர்களும் தங்கள் இலக்கிய ஈடுபாட்டினை பரந்த வாசகர் வட்டத்துடன் பகிர்ந்து கொள்ள TikTok தளத்தை எவ்வாறு பயன்படுத்துதலாம் என்பது விரிவாக ஆராயப்பட்டது.

TikTok இன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பட்டறை, TikTok இன் அடிப்படை கல்விநெறியின் (TikTok ABCs) அறிமுகத்துடன் ஆரம்பமாகியது. இதன்மூலம் கலந்துகொண்டவர்கள் TikToK தளத்தினை திறம்பட கையாளும் முறைகளைப் பற்றிய அடிப்படை அறிவைப் பெற்றனர். அதனைத் தொடர்ந்து பங்கேற்பாளர்கள் BookTok 101 பகுதி மூலம், புத்தகங்கள் தொடர்பான ஈர்க்கும் உள்ளடக்கங்களை உருவாக்குவது, சிறந்த உள்ளடக்க உத்தியை வடிவமைப்பது, TikTok-இன் பல்வேறு அம்சங்கள் மற்றும் கருவிகளை பயன்படுத்தி தரமான வீடியோக்கள் உருவாக்குவது போன்ற விடயங்கள் பயிற்சியாக வழங்கப்பட்டது. மேலும், உள்ளூர் BookTok சமூகத்தால் உருவாக்கப்பட்ட படைப்புகள் பகிரப்பட்டு, பங்கேற்பாளர்களை தங்கள் கதைகள் மூலம் தொடர்பு கொள்ள ஊக்குவிக்கத் தூண்டியது.
BookTok என்பது TikTok-இல் புத்தகங்கள் குறித்த ஆர்வமுள்ள துடிப்பான சமூகத்தைக் குறிக்கிறது. இதில் வாசகர்கள் #BookTok ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி புத்தக விமர்சனங்கள், பரிந்துரைகள், கதையின் சிறப்பு அம்சங்கள், நேரலையில் வாசிப்பு வீடியோக்கள், புதிய வெளியீடுகளின் பட்டியல்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்கின்றனர். இது புத்தகப் பதிப்பாளர்களுக்கு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தி, இளைய வயது வாசகர்கள், கற்பனை உலகம் (Fantasy), காதல் (Romance) உள்ளிட்ட வகைகளில் புத்தக விற்பனையை அதிகரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், எழுத்தாளர்களுக்கு தங்கள் நூல்களை பரப்புவதற்கும், பரந்த வாசகர்களை அடையவும் ஒரு சக்திவாய்ந்த தளமாக BookTok அமைகிறது. இதன் மூலம் இலக்கியம் இன்னும் ஊடாடும் ((interactive) மற்றும் எளிதில் அணுகக்கூடியதாக மாறியுள்ளது.
காலி இலக்கிய விழா 2025-இல் உள்ளடக்க படைப்பாளர்கள், புத்தக விமர்சகர்கள் மற்றும் புத்தக ஆர்வலர்கள் உள்ளிட்ட 125-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொணடதுடன், கலந்துரையாடலின் மூலம் படைப்பாற்றல் மற்றும் சமூக தொடர்பு வலுப்படுத்தப்பட்டன. TikTok, ஒரு படைப்பாற்றலுக்கான மற்றும் சமூக ஈடுபாட்டிற்கான முக்கிய தளமாக தன்னை நிலைநாட்டியதன் மூலம், இந்த உரையாடல்களை ஊக்குவிக்கும் ஒரு மையமாக செயல்பட்டது. இதனிடையே, #GalleLitFest நிகழ்வில் நேரடியாக கலந்துகொள்ள முடியாதவர்களுக்காக இந்த விழாவின் ஆற்றல் உலகளாவிய பார்வையாளர்களை சென்றடைவதை TikTok உறுதி செய்தது.
பிரபல #BookTok உள்ளடக்க படைப்பாளர்களுடன் கூட்டணிப் பெற்று, TikTok, GLF-இன் சிறப்புகளை முன்னணி மற்றும் ஈர்க்கும் உள்ளடக்கங்கள் மூலம் உயிர்ப்பித்தது. பங்கேற்பாளர்கள் முக்கியமான தருணங்களைப் பதிவு செய்தனர். புத்தகக் கலந்துரையாடல்கள், நேரலை எழுத்தாளர் உரையாடல்கள், திரைக்குப் பின்னால் உள்ள காட்சிகள், புத்தகக் காட்சிகள், எழுத்தாளர்கள், எழுத்தாளர் கனவுகள் கொண்டவர்கள், மற்றும் விழாவில் உள்ள உற்சாகமான இலக்கிய அம்சங்கள் உள்ளிட்டவற்றை #GLF, #BookTok, #GalleLitFest போன்ற ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்தி பகிர்ந்தனர்.
TikTok-இன் பிரத்தியேக வெளியீடுகள், இலக்கியத்தையும் கலாச்சாரத்தையும் மேலும் அணுகக்கூடியதாக மாற்றும் முயற்சியை வலுப்படுத்தியதோடு, #BookTok சமூகத்தின் ஆற்றலை உலகம் முழுவதும் பரப்பியது.
GLF, இலக்கியம் தொடர்பான முக்கிய உரையாடல்களுக்கு மையமாக தொடர்ந்து திகழும் நிலையில், TikTok, புத்தகங்களை நேசிக்கும் அனைவருக்கும் புதிய மற்றும் சுவாரஸ்யமான வழிகளில் தங்கள் இலக்கிய ஆர்வத்தைப் பகிர உதவ தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.
TikTok-இன் முயற்சிகள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள @TikTokSriLanka-ஐ பின்தொடரவும்.