Eyeview Sri Lanka

TRI-ZEN நிர்மாணத் திட்டம் 45%  பூர்த்தியைக் கடந்துள்ள நிலையில் கேள்வி துரிதமாக அதிகரிப்பு

Share with your friend

கவர்ச்சிகரமாக வட்டி வீதங்கள் மற்றும் ரியல்-எஸ்டேட் சார்ந்த நிதித் தீர்வுகளின் அறிமுகம் போன்றவற்றின் காரணமாக, தொடர்மனைகளில் முதலீடுகளை மேற்கொள்வதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் உப தலைவர், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு தலைமை அதிகாரி (சொத்துகள் குழுமம்) நதீம் ஷம்ஸ் தெரிவித்தார்.

இலங்கையின் நிதித் துறை, குறைந்த வட்டி வீதங்கள் எனும் நிலையை எய்தியுள்ளது. குறிப்பாக நிலையான வருமானத் திட்டங்கள் மற்றும் வீடமைப்புக் கடன்கள் போன்றவற்றில் இந்த நிலையை அவதானிக்கலாம். தொடர்மனைத் திட்டங்களுக்கு உறுதியான கேள்வி காணப்படும் சூழலில், முதலீட்டாளர்களிடமிருந்து உறுதியான, அதிகளவு விளைச்சலை வழங்கும் முதலீடுகள் பதிவாவதாக வடிவமைப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஷம்ஸ் குறிப்பிடுகையில், “தொற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியிலும், ரியல்-எஸ்டேட் துறை என்பது தொடர்ச்சியாக சிறப்பாக செயலாற்றிய வண்ணமுள்ளது. நிர்மாணத்தில் நாம் உறுதியான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதுடன், தொடர்மனைத் தொகுதிகள் 39 மாடி வரை உயர்ந்துள்ளன. கொழும்பின் மையப்பகுதியில் TRI-ZEN வானுயர்ந்து நிற்பதை தற்போது காணக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “நகரமயமாக்கல் அதிகரித்துள்ள நிலையில், பல இலங்கையர்கள் தமது வசிப்பிடத்தில் புதிய நியமங்களை எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக TRI-ZEN இன் அமைவிடம், உயர் வசதிகள் மற்றும் கவர்ச்சிகரமான விலை போன்றன இதற்கு ஏதுவாக அமைந்துள்ளன. இதர நகர அபிவிருத்தித் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் எமது போட்டிகரமான விலையிடல் என்பது தீர்க்கமான காரணியாக அமைந்துள்ளதுடன், கவர்ச்சிகரமானதாகவும் உள்ளது. விசேடமாக, நிர்மாணச் செலவுகள் மற்றும் காணிச் செலவுகள் போன்றன அதிகரித்துச் செல்லும் நிலையில், இவ்வாறான தொடர்மனைத் தொகுதிகளுக்கான கேள்வி தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படும்.” என்றார்.

கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் வீட்டுஉரிமையாளர்களுக்கு சிறந்த நிதி நெகிழ்ச்சித் தன்மையை வழங்கும் வகையில், இலங்கையின் முன்னணி வங்கிகளுடன் கைகோர்த்து புரட்சிகரமான ‘Freedom Mortgage Package’ஐ ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இரண்டு வருட காலத்துக்கு தமது குத்தகைக்கு வட்டியில்லாத மீளச் செலுத்தும் வாய்ப்பை வழங்குவதுடன், வாடிக்கையாளர்களுக்கு ஆரம்பத்தில் 20% பெறுமதியை மாத்திரம் செலுத்தி முதல் இரண்டு வருடங்களுக்கு எவ்விதமான கொடுப்பனவுகளையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. அதன் பின்னர் வட்டிக் கொடுப்பனவு ஆரம்பிப்பதுடன், அதிலிருந்து மூன்று வருடங்களின்  பின்னர் முதல் மீளச் செலுத்தல் ஆரம்பிக்கின்றது.

வட்டி வீதங்கள் வருடாந்தம் 7% எனும் கவர்ச்சிகரமானதாக அமைந்திருப்பதுடன், ஆகக்குறைந்த ஆரம்பக் கட்டணத்தைச் செலுத்தி தமக்குப் பொருத்தமான கடன் திட்டங்களை பெற்றுக் கொள்ள முடியும். மூன்று முன்னணி வங்கிப் பங்காளர்கள் தமது பரந்த கிளை வலையமைப்பினூடாகவும், சிறந்த வாடிக்கையாளர் சேவையினூடாகவும் பொருத்தமான கடன் திட்டங்களை வழங்குவதால், வீட்டு உரிமையாளர்களுக்கு தமக்கு பொருத்தமான நிதிச் சேவை வழங்குநருடன் கைகோர்க்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.

Freedom Mortgage திட்டத்துக்கு பெருமளவு வரவேற்பு காணப்படுகின்றது. ஆரம்பத்தில் பெருமளவு தொகையை செலுத்த முடியாத பல முதலீட்டாளர்களுக்கு, TRI-ZEN இல் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை இந்தத் திட்டம் வழங்கியுள்ளது. நீண்ட கால முதலீட்டுத் திட்டமாக சொத்தைப் பேண எதிர்பார்ப்போருக்கு இது ஒரு சிறந்த தீர்வாக அமைந்திருப்பதுடன், குடும்பத்துக்கு நகரின் மையத்தில் சொகுசான வசிப்பிடம் ஒன்றை கொண்டிருப்பதற்கான சிறந்த தெரிவாகவும் அமைந்துள்ளது.” என ஷம்ஸ் தெரிவித்தார்.

இந்திரா டிரேடர்ஸ் (பிரைவட்) லிமிடெட் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி ஆகியன இணைந்து TRI-ZEN திட்டத்தை முன்னெடுப்பதுடன், இதன் நிர்மாணப் பணிகளை China State Construction Engineering Corporation Ltd (CSCEC) மேற்கொள்கின்றது. மூன்று தொகுதிகளைக் கொண்ட இந்தத் திட்டத்தில் 891 அலகுகள் காணப்படுவதுடன், கொழும்பு யூனியன் பிளேஸ் பகுதியில் நிர்மாணிக்கப்படுகின்றது. இதில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று படுக்கையறை தொடர்மனைகள் காணப்படுகின்றன. இதில் இரண்டு படுக்கையறைகளைக் கொண்ட தொடர்மனை ஒன்றின் ஆரம்ப விலை 36 மில்லியன் ரூபாயாகும்.

இந்தத் தொகுதியில் 35க்கும் அதிகமான உள்ளம்சங்கள் காணப்படும். இதில் பசுமைப் பகுதிகள், ஜொகிங் ட்ரக், நீச்சல் தடாகம், உடற் பயிற்சி மற்றும் நலன் பேண் ஸ்ரூடியோக்கள் மற்றும் விளையாட்டு அறைகள் போன்றன காணப்படுவதால், வசிப்போருக்கு தமது சகல தேவைகளையும் ஒரே கூரையின் கீழ் நிவர்த்தி செய்து கொள்ள முடியும். கொழும்பு நகரின் மையப்பகுதியில் அமைந்திருப்பதால், சகல பகுதிகளுக்கும் இலகுவாக பயணிக்கக்கூடிய வசதியும் காணப்படுகின்றது.


Share with your friend
Exit mobile version