Eyeview Sri Lanka

UTE இன் 75 வருட கால துறைசார் சிறப்புக் கொண்டாட்டம்

Share with your friend

தேசத்துக்கு தொடர்ச்சியாக உயர் தரம் வாய்ந்த பொறியியல் தீர்வுகளை வழங்குவதிலும், ஒப்பற்ற சேவை ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதிலும் 75 வருட கால துறைசார் சிறப்பை யுனைட்டட் டிராக்டர் அன்ட் இக்யுப்மன்ட் (பிரைவட்) லிமிடெட் (UTE) 2022, மார்ச் 22ஆம் திகதி கொண்டாடியது. தேசத்தின் வளர்ச்சியின் பங்காளர் எனும் தொனிப்பொருளுக்கமைய, சுதந்திர தேசமாக இலங்கை பல ஏற்றத் தாழ்வுகளை சந்தித்திருந்த சகல சந்தர்ப்பங்களிலும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் நம்பிக்கையை வென்ற பங்காளராக UTE விளங்குகின்றது. 

UTE இந்த முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல் சாதனையை எய்துவதற்கு காரணகர்த்தாவாக திகழ்ந்த தமது பூட்டனார் டபிள்யு.டி. பெர்னான்டோவை நினைவுகூர்ந்து, இந்த மைல்கல் சாதனை தொடர்பாக யுனைட்டட் டிராக்டர் அன்ட் இக்யுப்மன்ட் (பிரைவட்) லிமிடெட் தவிசாளர் பிரசான் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “75 வருட கால வரலாற்றைக் கொண்ட நிறுவனம் எனும் வகையில், இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் எதிர்கொண்டிருந்த பல்வேறு ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த சந்தர்ப்பங்களின் போதும் தேசத்தின் மீட்சிக்காக கைகொடுத்திருந்ததில் UTE தனது பங்களிப்பை வழங்கியிருந்தது. நாம் சேவையாற்றும் பல்வேறு துறைகளுக்கு சந்தை தலைமைத்துவத்தை நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம். மிக முக்கியமாக, உலகின் இதர பல முன்னணி வர்த்தக நாமங்களுடன் பங்காண்மைகளை நாம் ஏற்படுத்தியுள்ளதுடன், தற்போது சர்வதேச சந்தையில் முன்னோடிகளாகத் திகழும் பல அம்சங்களை எம்வசம் கொண்டுள்ளோம். எமது வாடிக்கையாளர்களின் பக்கம் நாம் தொடர்ந்தும் சார்ந்திருப்பதுடன், அவர்களுடன் நெருக்கமான உறவுகளை பேணுகின்றோம். ‘The Journey Continues…Long After the Sale”எனும் எமது தன்னேற்புத்திட்டத்துக்கமைவாக எமது செயற்பாடுகளை நாம் முன்னெடுக்கின்றோம்.” என்றார்.

1947 ஆம் ஆண்டு டபிள்யு.டி.பெர்னான்டோவினால் ஸ்தாபிக்கப்பட்ட UTE, கட்டர்பில்லர் (CAT®) டிராக்டர் கம்பனி சிலோனின் விற்பனைகள் மற்றும் விற்பனைக்கு பின்னரான சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்தியிருந்தது. தனது கூட்டாண்மை கலாசாரத்தினுள் உறவுகளுக்கு தொடர்ந்தும் முன்னுரிமையளிப்பதில் வலுச் சேர்க்கும் intergenerational powerhouse ஆக UTE திகழ்கின்றது. தொழில்முயற்சியாண்மை உத்வேகத்துடன் இயங்கும் UTE, குடும்ப உரிமையாண்மையில் இயங்குவதுடன், தனது வியாபார கலாசாரத்தில் முக்கிய ஸ்தானத்தில் உறவை பேணுகின்றது. நிறுவனத்தின் பெருமளவான வாடிக்கையாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் நீண்ட காலமாக நிறுவனத்துடன் வியாபார உறவுகளைப் பேணுவதுடன், உலகத் தரம் வாய்ந்த வாடிக்கையாளர் அனுபவத்தை ஏற்படுத்தும் நிறுவனத்தின் இலக்கை எய்துவதற்கு அவர்கள் தொடர்ச்சியாக பங்களிப்பு வழங்கியுள்ளனர்.

NEM கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் தவிசாளரும் முகாமைத்துவ பணிப்பாளருமான ராஜா நானயக்கார கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் காணப்படும் முன்னணி நிர்மாண நிறுவனம் எனும் வகையில், பரிபூரண தீர்வுகளையும் சிறந்த விற்பனைக்கு பின்னரான சேவைகளையும் வழங்கும் சிறந்த நிறுவனத்திடமிருந்து உயர்ந்த பொறியியல் தீர்வுகளைப் பெற்றுக் கொள்வது மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. இதுவரையில், UTE உடனான எமது அனுபவம் மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது. எதிர்பார்ப்புகளை விஞ்சும் வகையிலான சேவைகளை நாம் பெற்றுள்ளோம். பணிகளின் போதும் அவசர நிலைகளின் போதும் பணியாற்றுவதற்கு மிகவும் சுலபமான அணியாக அமைந்துள்ளது. துறையில் UTE CAT இன் 75 வருட கால அனுபவம் மற்றும் நாம் கொண்டிருக்கும் இயந்திரங்களுக்கு அவர்கள் வழங்கும் சிறந்த விற்பனைக்கு பிந்திய சேவை காரணமாகவும் NEM ஐச் சேர்ந்த நாம் அவர்களை தெரிவு செய்துள்ளோம். UTE இன் வருட பூர்த்தி சாதனைக்காக எமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதுடன், எமது உறவை தொடர்ந்தும் சிறப்பாக பேண எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

கட்டர்பில்லர் உடன் UTE நீண்ட கால கைகோர்ப்பைக் கொண்டுள்ளதுடன், தெற்காசிய பிராந்தியத்தில் தற்போது காணப்படும் மிகவும் பழமை வாய்ந்த CAT®விநியோகத்தர்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது. அத்துடன் கடினமான நிர்மாண இயந்திரங்களை இறக்குமதி செய்த இலங்கையின் முதலாவது நிறுவனமாகவும் இது திகழ்கின்றது. செயற்பாட்டு சிறப்பில் கவனம் செலுத்துவதுடன், அதன் சிறந்த வாடிக்கையாளர் சேவை தொடர்பான நோக்கத்துக்கமைய இயங்கும் நிறுவனம், ‘General Machinery’ பிரிவில் Superbrands® க்கான ஒரே இலங்கையின் விண்ணப்பதாரியாக அமைந்திருப்பதுடன், ஏழு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக உயர் தரம் வாய்ந்த பொறியியல் தீர்வுகள் மற்றும் ஒப்பற்ற சேவை ஆதரவையும் வழங்குகின்றது. அதனூடாக, ஒற்றை வர்த்தக நாம இயந்திரங்கள் பலதை விநியோகிக்கக்கூடிய ஒரே நிறுவனமாகவும் திகழ்கின்றது. 

Caterpillar, JLG, Dexion, Flexi, BT, Raymond, Cigweld, SEM – கட்டர்பில்லர் வர்த்தக நாமம், UTP Welding, Enerpac, ESAB, FS Curtis, CIGWELD, Bohler Welding, Hytsu, Fuji Electric, Caterpillar Lubricants, DID Chains மற்றும் ஏனைய பல உலகத் தரம் வாய்ந்த வர்த்தக நாமங்களை UTE பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. நிர்மாண மற்றும் மண் நகர்த்தல் (Earth moving) இயந்திரங்கள், டீசல் வலுப் பிறப்பாக்கிகள், களஞ்சியசாலை மற்றும் மூலப்பொருட்கள் கையாளல், வெல்டிங், எயார் கொம்பிரெசர், வலு, சூரிய வலு, MEP, வடிகட்டல், சாதனங்கள் வாடகை மற்றும் ஏற்கனவே உரிமை கொள்ளப்பட்டிருந்த சாதனத் தீர்வுகள் போன்றவற்றை சந்தைக்கு வழங்குவதுடன், பெருவாரியான தயாரிப்பு ஆதரவு மற்றும் ஓரிடத்திலிருந்தான கண்காணிப்புடன் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய IOT தீர்வுகளையும் வழங்குகின்றது.

UTE உதிரிப்பாகங்கள் விற்பனைப் பகுதி/PCC (Parts.Cat.Com) என்பது வேகமாக வளர்ந்து வரும், இலகுவாக அணுகக்கூடிய இணையத்தளமாக அமைந்திருப்பதுடன், 1.4 மில்லியனுக்கு அதிகமான CAT® உதிரிப்பாகங்களை ஒன்லைனில் பெற்றுக் கொள்ள முடியும். எந்நேரமும் ஓடர்களை பதிவு செய்ய முடியும் என்பதுடன், கையடக்க தொலைபேசியில் பயன்படுத்தக்கூடிய வகையிலும் இந்த இணையத்தளம் செம்மையாக்கப்பட்டுள்ளது. நாட்டின் எந்தப் பகுதிக்கும் உதிரிப்பாகங்கள் விநியோகிக்கப்படும் அல்லது UTE இன் எந்தவொரு கிளைகளிலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

நாட்டின் அதிகம் அனுபவம் வாய்ந்த மற்றும் மாபெரும் வாடிக்கையாளர் சேவை அணியின் இருப்பிடமாக நிறுவனம் திகழ்வதுடன், துறையில் கட்டர்பில்லர் பயிற்சிகளைப் பெற்ற தொழில்நுட்பவியலாளர்களையும் கொண்டுள்ளது. நாடு முழுவதிலும் காணப்படும் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதுடன், நிறுவனத்தின் கிளைகள் பஞ்சிகாவத்தை, மாத்தறை, குருநாகல், அனுராதபுரம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ளன.


Share with your friend
Exit mobile version