Eyeview Sri Lanka

YKK மற்றும் ரியல் மெட்ரிட் அமைப்பு இலங்கையில் குழந்தைகள் கால்பந்து பயிற்சி முகாமை வெற்றிகரமாக நிறைவு செய்து நூற்றுக்கணக்கான பின்தங்கிய குழந்தைகளுக்கு ஊக்கம் அளித்தது

Share with your friend

YKK HOLDING ASIA PTE. LTD. (YHA) ஆனது YKK Lanka (Pvt) Ltd உடன் இணைந்து, ரியல் மெட்ரிட் அமைப்புடன் (RMF) கூட்டாண்மையில், YKK ASAO குழந்தைகள் கால்பந்து பயிற்சி முகாமின் (YKK AKFC) 29ஆவது பதிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இவ்வாறு இந்நிகழ்வு மூன்றாவது முறையாக இலங்கையில் நடைபெற்றது. இவ்வாண்டின் நிகழ்வானது கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஒகஸ்ட் மாதம் 27 முதல் 29ஆம் திகதி வரை நடைபெற்றது. இலங்கை கால்பந்து சம்மேளனம் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஆதரவுடன் நடைபெற்ற இம்மூன்று நாள் முயற்சி, விளையாட்டின் சக்தியின் மூலம் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான YKK-இன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக YKK Holding Asia நிறுவனத்தின் தலைவர் திரு கசுரோ டைமன், YKK Lanka நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு கேய் டனாகா, YKK Lanka நிறுவனத்தின் பொது மேலாளர் மிஸ் ரவுஷன் அசிம் மற்றும் ரியல் மெட்ரிட் அமைப்பின் முகாம்கள் மற்றும் பயிற்சி அமர்வுகளின் இயக்குநர் திரு ஆண்ட்ரஸ் முண்டனர் போர்ராஜோ, இலங்கை கால்பந்து சம்மேளனம் , விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

2007ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து, YKK AKFC ஆசியாவில் உள்ள பங்களாதேஷ், காம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, மலேஸியா, மியன்மார், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 12 நாடுகளில் 8,000 இற்கும் மேற்பட்ட பின்தங்கிய குழந்தைகளுக்கு செல்வாக்கு செலுத்தியுள்ளது. இவ்வாண்டின் நிகழ்வு அனாதை இல்லங்கள் மற்றும் பின்தங்கிய சமூகங்களிலிருந்து 8 முதல் 17 வயதுவரையிலான சுமார் 300 குழந்தைகளையும், 30 இலங்கை பயிற்சியாளர்களையும் வரவேற்று, உலகத் தரம் வாய்ந்த கால்பந்து பயிற்சி அனுபவத்தை வழங்கியது.

குழந்தைகள் வயது அடிப்படையில் குழுக்களாக பிரிக்கப்பட்டனர். இளைய பங்கேற்பாளர்கள் (8-12 வயது) கால்பந்து அடிப்படைகளைப் பற்றி அறிமுகப்படுத்தப்பட்டனர், அதேபோன்று  13-17 வயதுடைய குழந்தைகள் உக்த்தி, ஒழுக்கம் மற்றும் விளையாட்டு உணர்வு போன்ற மேம்பட்ட திறன்களை வளர்த்துக் கொண்டனர். தொழில்முறை மற்றும் மறக்க முடியாத அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு குழந்தையும் ஜெர்ஸி, குறுகிய பேன்ட், காலுறைகள், பூட்ஸ், பதக்கம் மற்றும் சான்றிதழ் உட்பட முழுமையான கால்பந்து கிட் ஒன்றை பெற்றுக்கொண்டனர். 

திட்டத்தின் செல்வாக்கு உள்நாட்டு பயிற்சியாளர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது, அவர்கள் RMF பயிற்சியாளர்களால் நடத்தப்பட்ட சிறப்பு தொழில்முறை பயிற்சியாளர் அமர்வில் பங்கேற்றனர். இந்நேரடி அறிவு பரிமாற்றம், பயிற்சி முகாம் நிறைவடைந்த பிறகும் அடுத்த தலைமுறை இலங்கை வீரர்களை ஊக்குவிக்க அவர்களுக்கு உதவுகிறது. தொடர்ச்சி தன்மையை உறுதி செய்வதற்கு, பயன்படுத்தப்பட்ட அனைத்து காற்பந்துகள் மற்றும் பயிற்சி உபகரணங்கள் பங்கேற்கும் அமைப்புகள் மற்றும் பாடசாலைகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டன, YKK நிறுவனத்தின் நீண்டகால சமூக பங்களிப்புக்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்தியது.

YHA நிறுவனத்தின் தலைவர் கசுரோ டைமன், இந்த முயற்சியின் பரந்த நோக்கத்தை வலியுறுத்தும் வகையில்: “கால்பந்து குழந்தைகளை ஊக்குவிக்க ஒரு சக்திவாய்ந்த தளமாகும், குறிப்பாக வரையறுக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளவர்களுக்கு. விளையாட்டுக்கு அப்பால், இத்திட்டம் வாழ்க்கை திறன்களையும், குழு பணி, ஒழுக்கம், நம்பிக்கை மற்றும் மரியாதை என்பவற்றை கற்பிக்கிறது, இது பயிற்சி முகாம் நிறைவடைந்த பிறகும் குழந்தைகளுடன் இருக்கும். அதே நேரத்தில், இது தொடர்புகளை உருவாக்குகிறது, சமூக பிணைப்புகளை வலுப்படுத்துகிறது மற்றும் ஒற்றுமையை வளர்க்கிறது.” எனக் குறிப்பிட்டார். 

இவ்வாண்டின் நிகழ்வானது பின்தங்கிய குழந்தைகளுக்கு அரவணைப்பு மற்றும் வாய்ப்புகளை வழங்கும் அர்க்லோ ஆண் சிறுவர் இல்லம், காலி SOS சிறுவர் கிராமம் மற்றும் பிலியந்தல SOS சிறுவர் கிராமம் போன்ற இல்லங்களின் பயன்பெறுநர்களுக்கு அதிக கவனம் செலுத்தியது.

YHA நிறுவனத்தின் YKK AKFC ஆனது பிராந்திய பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது ஆசிய நாடுகளில் சுழற்சியாக நடைபெறுவதால் ஒவ்வொரு சமூகத்திலும் நிலையான பயன்களை உறுதி செய்து அதிகபட்ச அடைவுகளை உருவாக்குகிறது. விளையாட்டிற்கு அப்பால், YKK Lanka இலங்கையில் உள்நாட்டு பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்டங்களான அவிஸ்ஸாவேல்லை அடிமான மருத்துவமனையை புனர்நிர்மாணம் செய்தல் போன்ற சுகாதார ஆதரவு திட்டங்களை தொடர்ந்தும் செயற்படுத்துகிறது. 

அதன் நிறுவன தத்துவமான CYCLE OF GOODNESS® – “ஒருவருக்கு பயன் தராமல் யாரும் செழிப்பட மாட்டார்கள்” ஊடாக, YKK குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஆதரித்து நிலையான மற்றும் சமவாய்ப்பு சமூகத்தை உருவாக்குவதற்கு உறுதியாக உள்ளது.


Share with your friend
Exit mobile version