ZTE Blade A71 – இலங்கையில் தற்போது பெரும்பாலும் சிறந்த பெறுமதியான அனைத்து தொழில்நுட்ப சிறப்பம்சங்களையும் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்

Home » ZTE Blade A71 – இலங்கையில் தற்போது பெரும்பாலும் சிறந்த பெறுமதியான அனைத்து தொழில்நுட்ப சிறப்பம்சங்களையும் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்
Share with your friend

1985 ஆம் ஆண்டு முதல் தொலைத்தொடர்பாடல் துறையில் தலைசிறந்த சாதனையை நிலைநாட்டியுள்ள ZTE ஆனது 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை உட்பட உலகளாவிய தொலைத்தொடர்பாடல் வலையமைப்புகளை உருவாக்கவும், உதவவும் மற்றும் பேணிப் பராமரிக்கவும் உதவி வந்துள்ளது. இந்த விரிவான தொழில் துறை அனுபவம் மற்றும் அங்கீகாரத்தின் பக்கபலத்துடன், ZTE அதன் எடுப்பான, நேர்த்தியான மற்றும் அதிநவீன ZTE Blade வரிசை சாதனங்களுடன் இப்போது ஸ்மார்ட்ஃபோன்களின் அரங்கில் காலடியெடுத்து வைத்துள்ளது. ஸ்மார்ட்ஃபோன் சந்தையில் ஒரு புதிய வரவாக, ZTE Blade வரிசை நுகர்வோருக்கு, குறிப்பாக நடுத்தர வகுப்பு பிரிவில், மற்ற பிரபலமான வர்த்தகநாமங்களைப் போலவே ஒப்பிடக்கூடிய தொழில்நுட்ப அம்சங்களையும் நம்பகத்தன்மையையும் அவற்றை விடவும் மிகக் குறைந்த விலையில் வழங்குகின்றது.

நடுத்தர வகுப்பின் மத்தியில் மிகவும் நேர்த்தியானாக அமைந்து, தலைசிறந்த வகையில் அனைத்து தொழில்நுட்ப அம்சங்களினதும் செயல்திறனை வழங்குவது ZTE Blade A71 ஆகும். ரூபா 46,999/- என்ற குறைந்த விலையில் கிடைக்கும் இந்த கவர்ச்சியான சாதனம், உண்மையில் அதை விட மிகவும் விலை உயர்ந்ததாகவே பார்ப்பவர்களுக்கு தென்படுகிறது, நீலம், சாம்பல் மற்றும் பச்சை நிறங்களில் எந்த நவீன பாணிக்கும் பொருந்தும் நிறங்களில் இது வெளிவருகிறது. மென்மையான வளைவுகள் ZTE Blade A71 இன் கவர்ச்சியைக் கூட்டுவதுடன், அதன் மிகவும் திறமையான மூன்று பின்புற கேமரா தொகுதியும் அதற்கு வலுச் சேர்க்கிறது, இதில் 16MP பிரதான கேமரா, 8MP அதிவிசால வில்லைகள் மற்றும் 2MP ஆழ் உணர்வு கேமரா ஆகியவை உள்ளன. தொலைபேசி சாதனத்தின் முன்பக்கத்தில், 8MP முன்பக்க கேமரா உள்ளமையால், நீங்கள் எந்தவொரு முக்கியமான தருணத்தையும் வசப்படுத்துவதை தவறவிட மாட்டீர்கள்.

தாராளமான 64GB சேமிப்பகம் மற்றும் 3GB RAM, octa-core chipset இன் பக்கபலம் ஆகியவற்றைக் கொண்டுள்ள ZTE Blade A71 வேகமான மற்றும் அன்றாடப் பணிகளுக்கு நேர்த்தியான செயல்திறன் கொண்டது. மேலும் எவ்விதமான தடங்கல்களுமின்றி gaming இற்கு சிறப்பானது. chipset இல் கட்டமைக்கப்பட்டுள்ள IMG GE 8322 GPU ஆனது ஒரு ஆற்றல்மிக்க, எந்நேரமும் gaming செய்யக்கூடிய GPU என்பதுடன், தொலைபேசி சாதனத்தின் எடுப்பான மற்றும் அதிலேயே மூழ்கடிக்கின்ற 6.5-அங்குல IPS முகத்திரையுடன், game களை துடிப்பானதாகவும், மென்மையாகவும், அற்புதமாகவும் விளையாட வழிகோலுகிறது. ZTE Blade A71 ஆனது gyroscope sensor தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது உண்மையிலேயே gaming திறனை வலுப்படுத்துவதுடன், உங்கள் கைகளில் சாதனத்தை பற்றிப்பிடித்து நகர்த்துவதன் மூலம் game உள்ளீடுகளை மேற்கொள்ள இடமளிக்கிறது. ஒரு பெரிய 4,000mAh பேட்டரி, நாள் முழுவதும் வழக்கமான பாவனை மற்றும் நீண்ட கேமிங் அமர்வுகளுக்கு மிகவும் உகந்தது.

ZTE Blade இன் அனைத்து தொழில்நுட்ப சிறப்பம்சங்களும் ஒன்றிணைந்து, இலங்கையில் தற்போது கிடைக்கக்கூடிய சிறந்த பெறுமதியான அனைத்து அம்சங்களையும் கொண்ட ஸ்மார்ட்ஃபோனை வழங்குகின்றன. அத்துடன், வெறும் ரூபா 46,999/- என்ற விலையில் இது தினசரி பயனர்கள் மற்றும் கேம் விளையாடுபவர்கள் என இரு தரப்பினருக்கும் இலகுவில் கிடைக்கக்கூடிய மற்றும் கட்டுபடியான தெரிவாகும். www.singersl.com அல்லது நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு சிங்கர் காட்சியறை அல்லது முகவரிடத்திற்கு செல்வதன் மூலம் நீங்கள் ZTE Blade ஸ்மார்ட்போன்களின் ஒட்டுமொத்த வரிசையையும், கண்டறிந்து, வாங்கிக் கொள்ள முடியும்.

ZTE Corporation தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் உலகளாவில் முன்னணியில் உள்ளதுடன், இது 1985 இல் ஸ்தாபிக்கப்பட்டது. ஹொங்கொங் மற்றும் ஷென்சென் பங்குச் சந்தைகளில் இது நிரற்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் நுகர்வோர் இலத்திரனியல் சாதனங்கள் துறையில் புதிதாக காலடியெடுத்து வைத்தாலும், ZTE ஆனது இலங்கையில் 20 வருட கால வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், முன்னணி தொலைதொடர்பாடல் சேவை நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு தொலைதொடர்பாடல் வலையமைப்புகள் மற்றும் சேவைகளை பராமரிப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் தேவையான உபகரணங்களை வழங்கி வந்துள்ளது. இந்நிறுவனம் 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தொலைதொடர்பாடல் சேவை வழங்குநர்கள், நிறுவனங்கள் மற்றும் நுகர்வோருக்கு சிறந்த இணைப்பு மற்றும் நம்பிக்கையை செயல்படுத்த உதவுவதுடன், அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றது. 


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: