அதிக தங்கக் கடன் பிரிவுகளை திறந்துள்ளதாக பீப்பள்ஸ் லீசிங் அறிவிப்பு

Home » அதிக தங்கக் கடன் பிரிவுகளை திறந்துள்ளதாக பீப்பள்ஸ் லீசிங் அறிவிப்பு
Share with your friend

திவுலப்பிட்டி, மட்டக்களப்பு, எல்பிட்டிய, அம்பலாந்தோட்டை, இரத்தினபுரி மற்றும் உடுகம பிஎல்சி கிளை அலுவலகங்களில் மேலும் ஆறு தங்கக் கடன் பிரிவுகளை பீப்பள்ஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி (பிஎல்சி) அண்மையில் திறந்து வைத்தது.

நிலவும் பொருளாதார நெருக்கடியின் போது, ​பிஎல்சி வழங்கும் தங்கக் கடன்கள் வாடிக்கையாளரின் எதிர்பாராத நிதி பின்னடைவை சிறப்பாக நிர்வகிக்க உதவுகிறது. மக்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் அவர்களுக்கு விரைவான மற்றும் வசதியான தீர்வாக 2017ஆம் ஆண்டு முதல் தங்கக் கடன் பிரிவு நிறுவப்பட்டது. அப்போதிருந்து, நிதி ரீதியாக பின்தங்கிய வாடிக்கையாளர்களுக்கு அணுகக்கூடிய வகையில் நாடு முழுவதும் நிறுவப்பட்ட தங்கக் கடன் பிரிவுகளின் எண்ணிக்கை 55 அலகுகளாக அதிகரித்துள்ளது.

பிஎல்சி என்பது இலங்கையின் முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனம் மற்றும் நாட்டின் மிகப்பெரிய அரச வங்கிகளில் ஒன்றான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும். 1996 ஆம் ஆண்டு விசேட குத்தகை நிறுவனமாக செயற்படத் தொடங்கிய பீப்பள்ஸ் லீசிங், 2011ஆம் ஆண்டு கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. பிஎல்சி தனது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நிதி அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும் புதிய நவீன தொழில்நுட்பத்துடன் பரிணமிக்க முயற்சிக்கிறது.  பீப்பல்ஸ் லீசிங், பங்களாதேஷில் வெளிநாட்டு முயற்சி உட்பட ஆறு துணை நிறுவனங்களுடன் பல்வகைப்படுத்தப்பட்ட வங்கி அல்லாத நிதி அதிகார மையமாக வளர்ந்துள்ளது.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: