இலங்கையில் சிறுவர் கல்வி மற்றும் அறிவை மேம்படுத்தும் வகையில் CDB சிசுதிரி புலமைப்பரிசில் பகிர்ந்தளிப்பு

Home » இலங்கையில் சிறுவர் கல்வி மற்றும் அறிவை மேம்படுத்தும் வகையில் CDB சிசுதிரி புலமைப்பரிசில் பகிர்ந்தளிப்பு
Share with your friend

தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த. சாதாரண தர பரீட்சைகளில் சிறப்பாக சித்தியெய்தியவர்களுக்கு 100 புலமைப்பரிசில்கள் வழங்கி வைப்பு

CDB சிசுதிரி புலமைப்பரிசில் திட்டம் 13ஆம் பருவத்தின் கீழ் 100க்கும் அதிகமான புலமைப்பரிசில்கள் இளம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. அதனூடாக அவர்களுக்கு தமது கல்வியைத் தொடர்வதற்கு அவசியமான அடித்தளம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.  தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த சித்தியை பதிவு செய்த அறுபது மாணவர்கள் மற்றும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பாக சித்தியெய்தியிருந்த 40 மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில் வழங்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வு அண்மையில் மெய்நிகர் நிகழ்வாக இடம்பெற்றது. பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளரும், CDB இன் சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளருமான சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். CDB இன் நிலைபேறாண்மை நிகழ்ச்சி நிரலின் கீழ் இந்தப் புலமைப்பரிசில் வழங்கும் திட்டம் வருடாந்தம் இடம்பெறுவதுடன், சமூக அக்கறை எனும் அரணில் சிறுவர் கல்வி மற்றும் அறிவை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Icon

Description automatically generated

நிதி நெருக்கடிகள் நிறைந்த சூழலில் கல்வியை தடங்கலின்றி தொடர வேண்டியதன் முக்கியத்துவதை புரிந்து கொண்டு, CDB இனால் 2008 ஆம் ஆண்டில் சிசுதிரி நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதனூடாக இளம் சிறுவர்களுக்கு தரமான கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், தொழில்நிலை முன்னேற்றத்துக்கு பெறுமதி சேர்ப்பதாக அமைந்திருந்தது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பாக சித்தியெய்தியவர்களுக்கு, வருடாந்த புலமைப்பரிசிலாக வருடாந்தம் ரூ. 10000 வீதம் ஐந்து வருட காலப்பகுதிக்கு மொத்தமாக ரூ. 50000 வீதமும், தரம் 11 இல் புலமைப்பரிசில் பெற்றுக் கொண்டவர்களுக்கு வருடமொன்றுக்கு ரூ. 15000 வீதம் இரண்டு வருடங்களுக்கு ரூ. 30000 வழங்கப்படுகின்றது.

புலமைப்பரிசில்கள் 14 ஆம் கட்டத்திற்கு தகைமை பெறுவோர், அவர்களின் பொருளாதாரப் பின்புலத்தின் அடிப்படையில் குறைந்த வசதிகளைப் படைத்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஆகியவற்றில் 2020 ஆம் ஆண்டில் சித்தியடைந்தவர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.  அத்துடன், குறித்த பரீட்சைகளுக்கு தோற்றிய ரன்கெட்டி சேமிப்புக் கணக்குதாரர்களும் இதற்கு விண்ணப்பிப்பதற்கான தகைமையைப் பெற்றுக் கொண்டனர். விண்ணப்ப செயன்முறை தொடர்பான மேலதிக தகவல்களை அருகாமையிலுள்ள கிளையில் அல்லது CDB இணையத்தளத்திலிருந்து https://www.cdb.lk/ta/our-initiatives/cdb-sisudiri-14-ta/  பெற்றுக் கொள்ளலாம்.


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: