இலங்கையில் மிகவும் குறைந்த கட்டணங்களில் முற்கொடுப்பனவு Home Broadband டேட்டா பிளான்களை Dialog Home Broadband  அறிமுகப்படுத்துகிறது

Home » இலங்கையில் மிகவும் குறைந்த கட்டணங்களில் முற்கொடுப்பனவு Home Broadband டேட்டா பிளான்களை Dialog Home Broadband  அறிமுகப்படுத்துகிறது
Share with your friend

இலங்கையின் முதன்மையான தொலைத்தொடர்பு டேட்டா பிளான்களை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் துணை நிறுவனமான டயலொக் புரோட்பாண்ட் நெட்வார்க் பிரைவட் லிமிட்டட் ஆனது, இலங்கையர் அனைவருக்கும் மிகவும் குறைந்த மற்றும் கட்டுப்படியான,  உலகத் தரம் வாய்ந்த இணைய சேவைகளை வழங்கும் நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இரண்டு புதிய Home Broadband முற்கொடுப்பனவு பிளான்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

இப்போது வாடிக்கையாளர்கள் மிகக் குறைந்த கட்டணங்களை செலுத்தி டேட்டாவினை பெற்றுக்கொள்ள முடியும். அதனடிப்படையில், 10GB Anytime டேட்டா பிளான் (14 நாட்களுக்கு செல்லுபடியாகும்) ரூ. 299/- க்கும், 20GB Anytime டேட்டா பிளான் (30 நாட்களுக்கு செல்லுபடியாகும்) ரூ.540 /- க்கும் வழங்கப்படும். இந்த முற்கொடுப்பனவு பிளான்களானவை டயலொக் ஹோம் புரோட்பாண்ட் வழங்கும் சலுகைகளின் அளவை மென்மேலும் அதிகரிக்கின்றதோடு, முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தங்கள் பயன்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்ப இலகுவான ரீலோட் மூலம் தமக்கு உகந்த திட்டங்களைச் செயற்படுத்தவும் உதவுகிறது.

Dialog வாடிக்கையாளர்கள் தங்கள் டயலொக் ஹோம் புரோட்பாண்ட் முற்கொடுப்பனவு இணைப்புத் பிளான்களுக்கான கட்டண அளவை  MyDialog App அல்லது hbb.dialog.lk/ ஊடாக அல்லது #679# டயல் செய்து Dialog Home Broadband முற்கொடுப்பனவு பிளான்களை எந்த நேரத்திலும் செயற்படுத்தலாம். அதுமட்டுமல்லாது, நாடாளாவிய ரீதியில் செயல்படும் அனைத்து டயலொக் விற்பனையாளர் நிலையங்களில் அல்லது நாடளாவிய ரீதியில் உள்ள டயலொக் வாடிக்கையாளர் சேவை நிலையங்களில் வாடிக்கையாளர்கள் தமக்கு தேவையான பிளாக்னளை செயற்படுத்திக்கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட இடங்களை நாடும் வாடிக்கையாளர்கள் ரூ.5,990/ விலையில் ஹோம் புரோட்பாண்ட் ரவுட்டர்களையும்  கொள்வனவு செய்து கொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு www.dialog.lk க்கு செல்லுங்கள்


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: